இந்திய இயற்கை பிசின்கள், பசைகள் ஆய்வுக் கழகம்

இந்திய இயற்கை பிசின்கள், பசைகள் ஆய்வுக் கழகம் (Indian Institute of Natural Resins and Gums, சுருக்கமான IINRG),[1] முன்பு இந்திய அரக்கு ஆய்வுக் கழகம் என்று அழைக்கப்பட்டது. இது ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். இக்கழகம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் ( ICAR) குடையின் கீழ் நிறுவப்பட்டது.[2] இது இந்திய அரசால் வேளாண்மை, அரக்கு மற்றும் பிற இயற்கை பிசின்கள், பசைகள் பற்றிய மேம்பட்ட ஆய்வுக்காக நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் இந்தியாவின் சார்கண்டின் ராஞ்சியில் உள்ள நம்குமில் அமைந்துள்ளது.

இந்திய இயற்கை பிசின்கள், பசைகள் ஆய்வுக் கழகம்
National Institute of Secondary Agriculture (NISA)
வகைபதிவுபெற்ற சங்கம்
பொறுப்பாளர்
டாக்டர் அபிஜித் கர், இயக்குனர்
அமைவிடம்
நம்கும், ராஞ்சி
, ,
இந்தியா

23°35′13″N 85°37′00″E / 23.58694°N 85.61667°E / 23.58694; 85.61667
சுருக்கப் பெயர்IINRG
இணையதளம்Web Site

அறிமுகம்

தொகு

இந்த நிறுவனம் முதலில் இந்திய அரக்குக் கழகம் (ILRI) என்று 1924 செப்டம்பர் 20 அன்று அரக்கு மற்றும் பிற இயற்கை பிசின்கள், பசைகள் ஆகியவற்றுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஒரு வழிகாட்டும் முகமையாக நிறுவப்பட்டது. இக்கழகம் பிசின் இறக்குதல், அறுவடை, உற்பத்தி செயலாக்கம், தயாரிப்புகளை மேம்படுத்துகல், பயிற்சி, தகவல் களஞ்சியம், தொழில்நுட்பத்தை அளித்தல் மற்றும் பிற தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்புகொள்வது ஆகியவற்றில் கவனம் செலுத்துவதை கடைமையாக கொண்டிருந்தது.[3]

1920 ஆம் ஆண்டில், நாட்டிலுள்ள அரக்கின் பல்வேறு அம்சங்களைப் பற்றி ஆய்வு செய்வதற்காக, பிரித்தானிய இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட லிண்ட்சே-ஹார்லோ குழுவின் [4] பரிந்துரைகளே இந்தக் கழகம் உருவாகக் காரணமாயிற்று. இந்திய அரக்கு ஆய்வுச் சங்கம் என்ற குழுவின் பரிந்துரைகளின் பேரில், இந்தியாவில் உள்ள அரக்கு வணிகர்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 20 செப்டம்பர் 1920 அன்று சங்கத்தால் இந்திய அரக்கு ஆய்வுக் கழகம் தொடங்கப்பட்டது.

வேளாண்மைக்கான ராயல் ஆணையத்தின் விசாரணை முடிவுகள் மற்றும் பரிந்துரைகளின்படி இந்திய அரக்கு வரிக் குழு (ஐஎல்சிசி) [5] உருவாக்கப்பட்டது. 1931 ஆகத்து முதல் நாளன்று இந்திய அரக்கு வரிக் குழுவின் ஆதிக்கத்தின்கீழ் கழகம் கொண்டுவரப்பட்டது. ஐஎல்சிசிவசம் லண்டன் ஷெல்லாக் ரிசர்ச் பீரோ, யுகே அண்ட் ஷெல்லாக் ரிசர்ச் பீரோ, பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட் ஆப் புரூக்ளின், யுஎஸ்ஏ ஆகியவற்றின் கட்டுப்பாடும் அதனிடம் ஒப்படைக்கப்பட்டது.

1966 ஏப்ரல் முதல் நாள் அன்று இக்கழகம் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த சேர்ந்த அனைத்து இயற்கை பிசின்கள் மற்றும் பசைகளையும் இக்கழகத்தின் ஆய்வுக்குள் உள்ளடக்கும் வகையில் இந்நிறுவனத்தின் பெயர் இந்திய இயற்கை பிசின்கள், பசைகள் ஆய்வுக் கழகம் (IINRG) என 20 செப்டம்பர் 2007 அன்று மாற்றறபட்டது.

பிரிவுகள்

தொகு
 
பிசினில் சிக்கிய பூச்சி

கழகத்தின் செயல்பாடுகள் முதன்மையாக மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றிடமும் குறிப்பிட்ட பணிகள் ஒப்படைக்கபட்டுள்ளன.[6]

அரக்கு உற்பத்தி பிரிவு

தொகு

இந்தப் பிரிவானது அரக்கு உற்பத்தி தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறது. அதற்காக இது ஓம்புயிர்த் தாவரங்கள் மற்றும் பூச்சிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இது ஒரு அரக்கு ஓம்பி மற்றும் அரக்கு மரபணு வங்கி மேலும் குறிப்பாக இந்த நோக்கத்திற்காக உயிரி தொழில்நுட்ப ஆய்வகம் ஒன்றை பராமரிக்கிறது. அரக்குப் பூச்சி மரபணு இருப்புகள் மற்றும் ஓம்பி தாவர உயிர் மூலத் தொகுப்புகள் வகைப்படுத்தப்படுகின்றன. இதனால் பயனுள்ள உற்பத்தி தொழில்நுட்பங்களை உருவாக்க சிறந்த பூச்சி / ஓம்பி தாவர கலவையைத் தேர்ந்தெடுக்க இயலும்.

செயல்முறை மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு பிரிவு

தொகு
 
ஒரு பைன் பிசின்

இந்திய இயற்கை பிசின்கள், பசைகள் ஆய்வுக் கழகத்தில் இந்தப் பிரிவு பின்னர் ஏற்படுத்தபட்டது. இது இயற்கை பிசின்கள் மற்றும் பசைகளின் செய்பக்குவம் மற்றும் மதிப்பு கூட்டல் செயல்முறைகள் பற்றிய ஆய்வில் ஈடுபடுகிறது. இது அரக்கு மற்றும் அரக்கு அடிப்படையிலான தயாரிப்புகளின் சேகரிப்பு, பகுப்பாய்வு, சோதனை மற்றும் அறிக்கையிடலுக்கான அங்கீகாரம் பெற்ற ஆய்வகமாகும். இப்பிரிவு ISO-9001 சான்றிதழைப் பெற்றுள்ளது. இது தொழில் முனைவோர் தேவைகளை இலக்காகக் கொண்டதாக ஆராய்ச்சி, சுத்திகரிப்பு, பயிற்சி மற்றும் செயல்விளக்கத்திற்கான ஓம்பித் தவாரங்களுடன் செய்பக்குவம் மற்றும் செயல்விளக்க அலகை கொண்டுள்ளது.

தொழில்நுட்பப் பரிமாற்றப் பிரிவு

தொகு

தொழில்நுட்ப பரிமாற்ற பிரிவு என்பது இந்த ஆய்வுக் கழகத்தின் அறிவு வங்கியாகும். இது ஆய்வு அறிவை மதிப்பீடு செய்தல், செம்மைப்படுத்துதல், பரப்புதல், உழவர்கள் மற்றும் பிற ஆர்வமுள்ள நபர்களுக்கு இது குறித்து பயிற்சி அளிப்பது ஆகியவற்றை மேற்கொள்கிறது. இது அரக்கு அருங்காட்சியகம் ஒன்றையும் பராமரிக்கிறது.[7] அதில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மாதிரிகள், பல்வேறு தொழில்நுட்பங்கள், அழகுசாதனப் பொருட்கள், கம்பளிக்கு சாயமேற்றல், மருந்துகள் மற்றும் நகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களில் அரக்கின் பயன்பாடுகள் வரையிலான விரிவான காட்சியகங்ளைக் கொண்டுளது.[8]

வசதிகள்

தொகு

இந்த ஆய்வுக் கழகத்தில் ஆய்வுக்கான மேம்பட்ட வசதிகளை பராமரிக்கிறது: உயிரித்தொழில்நுட்ப ஆய்வகம் : மூலக்கூறு மற்றும் தாவர திசு வளர்ப்பு பற்றிய ஆய்வு மற்றும் பரிசோதிப்புப் பணிகளை மேற்கொள்கிறது. மேலும் அறிவியலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. கள மரபணு வங்கி : இது ஜெர்ம்ப்ளத்திற்கான ஒரு களஞ்சியமாகும், இது தேசிய தாவர மரபியல் வளங்களின் தேசிய பணியகத்தால் தேசிய செயல் ஜெர்ம்பிளாசம் தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இக்கழகம் மாநாடுகள், கருத்தரங்குகள், பயிற்சி அமர்வுகளுக்கான நவீன மாநாட்டு அரங்கையும் கொண்டுள்ளது.

வெளியீடுகள்

தொகு
 
புங்கை இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட செழிப்பாக வளரும் மரம். பொதுவாக வனத்துறையால் பொதுவாக நிழற்சாலை மரங்களாக நடப்படுகிறது. இது அதன் நிழலுக்குப் புகழ் பெற்றது மற்றும் அதன் மருத்துவ குணங்களுக்காக பாரம்பரியமாக நன்கு அறியப்பட்டதாகும். இது அரக்குப் பூச்சிகளுக்கு ஓம்பு தாவரமாகவும் வளர்க்கப்படுகிறது. இந்த மரம் பொதுவான செருலியன் ( ஜமிடிஸ் செலினோ பட்டாம்பூச்சி) உணவுத் தாவரங்களில் ஒன்றாகும்.
 
அகாசியா பசை
 
உலர்ந்த சாம்பிராணி பிசின் கட்டிகள்

இக்கழகம் பல வெளியீடுகளை வெளியிட்டுள்ளது, அவற்றில் குறிப்பிடத்தக்க சில:[9]

இயற்கை பிசின்கள் மற்றும் பசைகள் பற்றிய மின்நூல்கள்

  • Natural Resins & Gums of commercial importance - At a glance
  • Descriptors of lac insect with special reference to Kerria Spp.
  • Lac Culture Operations
  • Physico-chemical properties of some Indian plant gums of commercial importance

குறிப்புகள்

தொகு
  1. "acronym". பார்க்கப்பட்ட நாள் July 4, 2014.
  2. "ICAR Institutes". பார்க்கப்பட்ட நாள் July 5, 2014.
  3. "IINRG home". Archived from the original on May 31, 2016. பார்க்கப்பட்ட நாள் July 4, 2014.
  4. "Lindsay- Harlow Committee". Archived from the original on ஜூலை 14, 2014. பார்க்கப்பட்ட நாள் July 5, 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. A.C Chatterjee (1933). "Bibliography of lac". Indian Lac Cess Committee. p. 129. பார்க்கப்பட்ட நாள் July 5, 2014.
  6. "IINRG Division". Archived from the original on ஜூலை 14, 2014. பார்க்கப்பட்ட நாள் July 5, 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. John Mills. Organic Chemistry of Museum Objects. Routledge.
  8. Hwang J. S. (1990). "Chinese Journal of Entomology, Special Publication No. 5". Uses of lac insect in industries. Taiwan Agricultural Chemicals and Toxic Substances Research Institute. Archived from the original on July 14, 2014. பார்க்கப்பட்ட நாள் July 5, 2014.
  9. "IINRG publications". Indian Institute of Natural Resins and Gums. Archived from the original on ஜூலை 14, 2014. பார்க்கப்பட்ட நாள் July 5, 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு