இந்திய கடற்கரைச் சமவெளி
இந்தியக் கடற்கரைச் சமவெளி (Coastal India) என்பது இந்தியாவின் முழுக்கடற்கரைச் சமவெளியை உள்ளடக்கிய ஓர் இந்தியப் பண்பாட்டு வட்டாரமாகும்(7516.6 கிமீ; சமவெளி: 5422.6 கிமீ, தீவுப் பகுதிகள்: 2094 கிமீ).[1]
இந்தியத் தீவக மேற்கு, கிழக்குப் பகுதிகளில் கடற்கரைச் சமவெளிகள் உள்ளன. கடற்கரைகள் உடைபடாமல் நேராக இருக்கின்றன. கடலின் ஆழம் குறைவு. எனவே இயற்கைத் துறைமுகங்கள் பேரள்வில் அமையவில்லை. பொதுவாக இச்சமவெளிகள் உயர்த்தப்பட்ட கடற்கரைகளாக உள்ளன. உயர்த்தப்பட்ட கடற்கரைகளும், அரிப்பாலான மேடையும், இக்கருத்தினை விளக்குவதற்கேற்ற சான்றுகளாக உள்ளன.
இந்தியக் கடற்கரை அரபிக் கடலின் தென்மேற்கு இந்தியக் கடற்கரையில் மேற்குக் கோடியான கட்ச்சு வளைகுடாவில் இருந்து கம்பாட்டு வளைகுடா ஊடாகவும் மும்பையின் சாசெட்டித் தீவு ஊடாகவும் கொங்கன் கடற்கரை கடந்து தெற்கே இரைகாது மாவட்டப் பகுதி, கானரா அதற்கும் கீழே உள்ள மங்களூரு, மலையாளக் கடற்கரை, தென்னிந்தியாவின் தென்கோடியான குமரிமுனை வழியாக, இந்தியப் பெருங்கள கடர்கரை கடந்து, சோழமண்டலக் கடற்கரை விரிந்து செல்கிறது. மேலும், வங்காள விரிகுடா நெடுக, இந்தியத் தீவகத் தென்கிழக்குக் கடற்கரையில் இருந்து கலிங்கப் பகுதி ஊடாக, கிழக்குக் கோடியான கிழக்குக் கடற்கரையில் அமைந்த சுந்தரவனக்காடு வரை நீள்கிறது. இதன் நெடுக பல அழகிய கடற்கரைப் பகுதிகளும் நீரூற்றுகளும் கடலும் அரபுப் பெருங்கடலும் இந்தியப் பெருங்கடலும் அமைகின்றன.
மேற்குக் கடற்கரைச் சமவெளி
தொகுஇது அரபிக் கடலுக்கும், மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது ஒரு குறுகிய நீண்ட சமவெளியாகும். நீண்டகாலமாக மேற்குக் கடற்கரைப் பகுதிகளுக்கும் அயல்நாடுகளுக்கும் இடையே வாணிபத் தொடர்பு இருந்து வந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையி்ன் மேற்குச் சரிவில் உற்பத்தி ஆகும் ஆறுகள் இச்சமவெளியில் பாய்கின்றன. அவற்றின் நீளம் குறைவு ஆனால் வேகம் மிகுதி. பல இடங்களில் நீர்மின்சக்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆறுகள் கடலோடு சேரும் இடங்களில் பொங்கு முகங்கள் அமைந்துள்ளன. மேற்குக் கடற்கரைச் சமவெளிகளை 3 பகுதிகளாகப் பிரிக்கலாம்.
- வடக்கில் உள்ள கொன்காணப் (கொங்கனப்) பகுதி
- நடுவில் உள்ள கனரா பகுதி
- தெற்கில் உள்ள மலையாளப் (கேரளா) பகுதி
கேரளப் பகுதியில் கடற்கரை ஓரமாக பல உப்பங்கழிகள் உள்ளன.[2] அவற்றைக் காயல்கள் என்றும் கூறுவர். அவை உள்நாட்டுப் போக்குவரத்துக்குப் பயன்படுகின்றன. உப்பங்கழிகளை ஒட்டி மணல்மேடுகள் காணப்படுகின்றன. மிகுந்த வெப்பநிலை உயர்ந்த ஈரப்பதம் இருப்பதால் உருமாறிய பாறைகள் தீவிரமாக வானிலை சிதைவடைகின்றது. இதன் விளைவாக மிகுந்த மணல் காணப்படுகின்றது.
கொங்கனக் கடற்கரைப் பகுதி உடைபடாத உறுதியான நீண்ட குறுகிய கடற்கரை பகுதியாக உள்ளது. வடக்கில் நர்மதை, தபதி, மாஹி, சபர்மதி போன்ற ஆறுகள் காம்பிய வளைகுடாவில் பொருள்களைப் படிவிக்கின்றன. அதனால் காம்பே வளைகுடாவின் ஆழம் குறைந்து சதுப்பு நிலங்கள் தோன்றியுள்ளன. பல இடங்களில் அகன்ற வண்டல் சமவெளிகள் வெளிப்பட்டுள்ளன. மலைச்சரிவிலிருந்து மிகுந்த வேகத்துடன் வரும் ஆறுகள் வண்டல் விசிறிகளை உருவாக்கியுள்ளன. தென்மேற்குப் பருவக்காற்று கடல் அலைகள் மிகுந்த மணலை கரைஒரங்களில் படிவடையச் செய்துள்ளது. எனினும் வண்டல் படிவுகள் தொடர்ச்சியாக இல்லை ஏனெனில் மேற்குத் தொடர்ச்சி மலையில் கிளைக் குன்றுகள் பல இடங்களில் கடற்கரை வரை நீண்டு அமைந்துள்ளது.
கிழக்குக் கடற்கரைச் சமவெளி
தொகுஇது கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் வங்காள விரிகுடா கடலுக்கும் இடையே அமைந்துள்ளது. இச் சமவெளி மேற்குக் கடற்கரை சமவெளியை விட அகலமானது. இப்பகுதியில் பாயும் ஆறுகள் பெரும் அளவில் வண்டலைப் படிவிப்பதால் இப்பகுதி வளமான பகுதியாகும். ஆறுகளின் முகத்துவாரத்தில் கழிமுகங்கள் உள்ளன. இதன் விளைவாக கப்பல்கள் கரையை நெருங்க முடிவதில்லை. தெற்கே செல்லச் செல்ல சமவெளியின் அகலம் அதிகமாகிறது. கிழக்குக் கடற்கரைச் சமவெளியினை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.
- தமிழ்நாடு கடற்கரைச் சமவெளி
- ஆந்திரக் கடற்கரைச் சமவெளி
- கலிங்கக் கடற்கரைச் சமவெளி
தமிழ்நாடு கடற்கரைச் சமவெளி
தொகுஇதனை சோழ மண்டலக் கடற்கரை என்றும் கூறுவர் இது அகன்றுள்ளது. அகலம் சுமார் 100 கி.மீ. வண்டல் படிவுகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. படிகப் பாறைகளால் ஆன சிறு குன்றுகள் உள்நாட்டுப் பகுதிகளில் காணப்படுகின்றன. இங்கு காவிரி கழிமுகம் அமைந்துள்ளது.
ஆந்திரக் கடற்கரைச் சமவெளி
தொகுஇந்த சமவெளிப்பகுதிகள். ஆந்திர மாநிலத்தின் ஆறுகளான கிருசுணா, கோதாவரி கழிமுகங்களில் அமைந்து உள்ளன.
கலிங்கக் கடற்கரைச் சமவெளி
தொகுஇதனை சர்க்கார் கடற்கரை என்றும் கூறுவர். இங்கு மகாநதி கழிமுகம் அமைந்துள்ளது. இது மிகவும் குறுகலானது. மகாநதி ஆற்றிற்கும், கிருஷ்ணா ஆற்றிற்கும் இடையே பல தீவுக் குன்றுகள் அமைந்துள்ளன. கடற்கரை ஓரமாக மாங்குரோவ் சதுப்பு நிலக் காடுகள் காணப்படுகின்றன. கடற்கரைகளை ஒட்டியுள்ள பகுதியினை அரிப்பால் ஆன சமநிலமாக கருதலாம். பல இடங்களில் இந்த சம நிலத்தை வண்டல் மூடி இருந்த போதிலும் சில இடங்களில் பாறைகள் வெளிப்பட்டு காணப்படுகின்றன.
மக்கள்
தொகுமேற்குக் கடற்கரையின் நிலக்கிடப்பியலும் அங்கு நடந்த மேற்காசிய, நடுவண்தரைக்கடல் வாணிகமும் இந்திய மேற்கு கடற்கரைச் சமவெளி மக்களை பன்மையானவராக மாற்றியது. இதேபோல, கிழக்குக் கடற்கரைச் சமவெளி மக்களைக் கிழக்குக் கடற்கரையின் இயற்கை எழிலும் தென்கிழக்காசிய, சீன வணிகமும் பெரிது மாற்றியுள்ளது இந்த வட்டார மேற்கோடியில் கொன்காணக் கடற்கரை அல்லது மேற்குக் கடற்கரை நெடுக, குசராத்தியரும் கன்னடியரும் துளு மக்களும் கொங்கண மக்களும் மகாராட்டிர மக்களும், தென்னிந்தியத் தென்கோடிப் பகுதியில் மலையாளிகளும், தெற்குச் சோழமண்டலப் பகுதியில் தமிழர்களும், தென்கிழக்குப் பகுதியில் தெலுங்கர்களும், ஒடியாவின் கலிங்கர்களும் வங்காள விரிகுடா நெடுக, கிழக்குக் கோடிப் பகுதியில் வங்காளிகளும் வாழ்கின்றனர்.
கடல் வணிகமும் இடையுறவும்
தொகுகாலந்தோறும் நடுவண் தரைக்கடலுக்கும் இந்தியக் கடற்கரைப் பகுதிக்கும் இடையில் கடல் வணிகம் தொடர்ந்துவந்துள்ளது. [3][4][5][6] இதனால், இந்திய கடற்கரைச் சமவெளி மக்களும் மேற்காசிய மக்களும் தொடர்ந்து கலந்துறவாடினர். இது குறிப்பாக, அரபிக்கடல் நெடுக தென்மேற்கு இந்தியக் கடற்கரைப் பகுதியில் நடந்துள்ளது. பல மேற்காசிய மக்கள் இங்குக் குடியேறி, தென்மேற்கு இந்தியக் கடற்கரைப் பகுதி மக்களோடு கலந்துள்ளனர். இவர்களில் பாரசீக இனத்தவரும்,[7] முசுத்தாலி பொக்ராசு இனத்தவரும்[8] பாக்தாது யூதர்களும்[9]தென்மேற்கு இந்தியக் கடற்கரைப் பகுதிக் கோடியில் பெனி இசுரவேல் பகுதியில் உள்ளடங்குவர். கூர்கு, மங்களூரு, சோணக மாப்பிள்ளைகள் பெரிதும் நடுவண் தரைக்கடல் இனத்தவரின் வணிக மக்களின் வழித்தோன்றல்களே. [10] இவர்களில் மலையாளப் பகுதி வணிகரும் கொச்சின் யூதர்களும் [3][4][5][10][11][12][13] சிரிய மலையாளி நசுரானிகளும் அடங்குவர்.[3][4][5][10][11][12][13] இவர்கள் தென்னிந்தியாவின் தென்கோடிப் பகுதியில் வாழ்கின்றனர். தென்கிழக்காசியாவில் சோழப் பேரரசால் தமிழர் செல்வாக்கு ஓங்கலானது [14][15][16] இது இந்தோனேசியா, சாவா எனும் சாவகம், பாலி, சுமத்திரா, கடாரம் ஆகிய பகுதிகளில் பேரளவில் உள்ளது. இது தென்னிந்தியப் பண்பாட்டு மரபு கம்போடியா, இந்தோனேசியா, பாலி பகுதிகளில் இந்து சமயமாகப் பரவி இன்றும் நிலைத்துள்ளது. இதனால், வங்காள விரிகுடாக் கடல் நெடுக தென்கிழக்குச் சோழமண்டலக் கடற்கரையில் தென்கிழக்காசிய இனத்தவரும் தென்னிந்தியக் கடற்கரை மக்களும் கலக்கலாயினர்.
மரபு
தொகுஇந்தியக் கடற்கரை சமவெளி மக்கள் திராவிட மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு மொழிகளைப் பேசுகின்றனர்; The linguistic diversity of Coastal India includes languages of the Dravidian language family including Malayalam, Tamil, Telugu, Tulu and Kannada; மேற்குப் பகுதியில் குசராத், மராத்தி, கொங்கனி ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர்; நடுவண் பகுதியில் உருது, பாரசீகம் பேசுகின்றனர்; கிழக்குப் பகுதியில் ஒடியா, வங்க மொழிகலைப் பேசுகின்றனர். மேலும், இவ்வட்டாரத்தில், செமித்திக மொழிகளான அரபும் எபிரேயமும் அராமைக்கும் பேசப்படுகின்றன. இந்தியக் கடற்கரை சமவெளி மக்கள் பொதுவாக, வேளாண், கடற்பொருள் உனவு உண்கின்றனர். வெதுப்பான ஈரப்பதக் காலநிலைக்கு உகந்த நீளமான சேலை, வேட்டி போன்ற உடைகளை அணிகின்றனர்.[17] இந்தியக் கடற்கரை முழுவதும் பெண்கள் பலவகைப் பாணிகளில் சேலை அணிகின்றனர்.[17] மேற்கு மூலை வட்டாரங்களில் ஆண்கள் தோத்தி(வேட்டி) அணிகின்றனர்.[17] and Chaniya choli for women,[17] fமேலும் தெற்கில் உடைகளாக ஆண்கள் லுங்கி அல்லது உண்டு அணிய,[17] பெண்கள் [[வேட்டி] அணிகின்றனர்.[17]ஐந்தியக் கடற்கரையின் தென்கோடியில், தென்மேற்குப் பகுதியில் தாய்வழிச் சமூக மரபு நிலவுகிறது.[17][18][19][20][21] இந்தியக் கடற்கரை மாநிலங்களில் பலவகை தெய்வ வழிபாடுகள் கொண்டாடப்படுகின்றன.[22]
சுற்றுலா
தொகுஇந்தியக் கடற்கரைகளும், இந்தியத் தீவுகளும் முதன்மைச் சுற்றுலா மேம்பாட்டிடங்களாக விளங்குகின்றன.[23] மேலும், இந்தியப் பவழத்திட்டு களும் சுற்றுலாச் சிறப்பிடங்களாக அமைகின்றன.[24] இந்தியக் கடற்கரைச் ச்சமவெளியின் முழுவளங்களும் இனிமேல் தான் பயன்படுத்தப்படவேண்டும்.
காட்சி மேடை
தொகு-
பெகால்கோட்டைக் கடற்கரை, கேரளா
-
மும்பைக் கடற்கரை, மகாராட்டிரம்
-
விசாகப்பட்டினக் கடற்கரை, ஆந்திரப் பிரதேசம்
-
கெட்டுவெல்லம் வேம்பாநாடு ஏரி, கேரளா
-
கன்னியாகுமரியில் கதிரெழுச்சி, தமிழ் நாடு
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Coastal States of India". iomenvis.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-01-13.
- ↑ "Kerala. Encyclopædia Britannica". Encyclopædia Britannica Online. 8 June 2008.
- ↑ 3.0 3.1 3.2 Bjorn Landstrom (1964) "The Quest for India", Doubleday (publisher) English Edition, Stockholm.
- ↑ 4.0 4.1 4.2 Miller, J. Innes. (1969). The Spice Trade of The Roman Empire: 29 B.C. to A.D. 641. Oxford University Press. Special edition for Sandpiper Books. 1998. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-814264-1.
- ↑ 5.0 5.1 5.2 Thomas Puthiakunnel, (1973) "Jewish colonies of India paved the way for St. Thomas", The Saint Thomas Christian Encyclopedia of India, ed. George Menachery, Vol. II., Trichur.
- ↑ Periplus Maris Erythraei "The Periplus of the Erythraean Sea", (trans). Wilfred Schoff (1912), reprinted South Asia Books 1995 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-215-0699-9
- ↑ Hodivala, S. (1920), Studies in Parsi History, Bombay
- ↑ The Dawoodi Bohras: an anthropological perspective, by Shibani Roy. Published by B.R. Publishing, 1984.
- ↑ Sargon, J(1987) 'Baghdadi Jews of India and the Sassoons' in Jewish Daily Israel Today, Perspectiv/Opinion; Tuesday 25 August
- ↑ 10.0 10.1 10.2 Bindu Malieckal (2005) Muslims, Matriliny, and A Midsummer Night's Dream: European Encounters with the Mappilas of Malabar, India; The Muslim World Volume 95 Issue 2
- ↑ 11.0 11.1 Koder S. "History of the Jews of Kerala". The St. Thomas Christian Encyclopaedia of India, Ed. G. Menachery,1973.
- ↑ 12.0 12.1 Leslie Brown, (1956) The Indian Christians of St. Thomas. An Account of the Ancient Syrian Church of Malabar, Cambridge: Cambridge University Press 1956, 1982 (repr.)
- ↑ 13.0 13.1 Menachery G (1973) The St. Thomas Christian Encyclopedia of India, Ed. George Menachery, B.N.K. Press, vol. 2, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87132-06-X, Lib. Cong. Cat. Card. No. 73-905568; B.N.K. Press
- ↑ K.A. Nilakanta Sastri, K.A (1984) [1935]. The CōĻas. Madras: University of Madras.
- ↑ Keay, John. India: A History. New Delhi: Harper Collins Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-00-255717-7.
- ↑ Hermann, Kulke; Rothermund D (2001) [2000]. A History of India. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-32920-5.
- ↑ 17.0 17.1 17.2 17.3 17.4 17.5 17.6 Boulanger, Chantal; (1997) Saris: An Illustrated Guide to the Indian Art of Draping, Shakti Press International, New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9661496-1-0
- ↑ Craddock, Norma. 1994. Anthills, Split Mothers, and Sacrifice: Conceptions of Female Power in the Mariyamman Tradition. Dissertation, U. of California, Berkeley.
- ↑ Trawick, Margaret. 1990a. Notes on Love in a Tamil Family. Berkeley: U. of California Press.
- ↑ Wadley, Susan, ed. 1980. The Powers of Tamil Women. Syracuse: Syracuse U. Press.
- ↑ Smith R.T. (2002) Matrifocality, in International encyclopedia of the social and behavioral sciences (eds) Smelser & Baltes, vol 14, pp 9416.
- ↑ Dikshitar, V. R. Ramachandra, The Lalita Cult, Motilal Banarsidass Publishers Pvt. Ltd. (Delhi, 1942, 2d ed. 1991, 3d ed. 1999).
- ↑ 12 Must-Visit Blue Flag Beaches In India Known For Their Cleanliness & Beauty, The Better India, Oct 2022.
- ↑ Vineeta Hoon. "Coral Reefs of India: Review of Their Extent, Condition, Research and Management Status by Vineeta Hoon". Food and Agriculture Organization. http://www.fao.org/3/x5627e/x5627e06.htm.
உசாத்துணைகள்
தொகு- www.importantindia.com/12504/coastal-plains-of-india
- en.wikipedia.org/wiki/Eastern_coastal_plains
- en.wikipedia.org/wiki/Coastal_India
- edugeneral.org/.../geography/coastal-plains-of-india