இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம் (Indian Institute of Information Technology Design & Manufacturing Kancheepuram) (IIITD&M Kancheepuram) இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இத்தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஆய்வுக் கழகம் 2007ஆம் துவக்கப்பட்டது.[1]. இந்தியத் தொழில் நுட்பக் கழகம், சென்னை வளாகத்தில் செயல்பட்டு வந்த இக்கழகம், 2011 ஆண்டு முதல் கேளம்பாக்கம்-வண்டலூர் சாலையில் அமைந்துள்ள வளாகத்தில் செயல்படுகிறது.

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் காஞ்சிபுரம்
குறிக்கோளுரைசெயல்பட்டுக் கொண்டே கற்றல் ("Learning By Doing")
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்2007
பணிப்பாளர்டாக்டர். ஆர். ஞானமூர்த்தி
பட்ட மாணவர்கள்326
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்78
அமைவிடம், ,
AcronymnIIITD&M Kancheepuram
இணையதளம்http://www.iiitdm.ac.in/

இதே போன்ற தொழில்நுட்பக் கழகம் ஜபல்பூரில் செயல்படுகிறது.[2]

மாணவர் சேர்க்கை

தொகு

மேனிலைப் பள்ளி படிப்பு முடித்த மாணவர்கள் நான்காண்டு இளநிலை தொழில் நுட்ப பட்டப் படிப்புகளில் சேர இந்திய தொழில்நுட்ப கழக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (JEE) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.[3] இரண்டாண்டு முதுநிலை தொழில் நுட்ப பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வில் (GATE) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இளநிலை தொழில் நுட்ப பட்டப் படிப்புகள் (B.Tech.,)

தொகு

நான்காண்டு இளநிலை தொழில் நுட்ப படிப்புகள்:

  • கணிப்பொறியியல்
  • மின்னணுப் பொறியியல் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி)
  • இயந்திரவியல் (வடிவமைப்பு & உற்பத்தி)

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலை தொழில்நுட்ப பட்டப் படிப்புகள்

தொகு
  • கணிப்பொறியியல்
  • மின்னணுப் பொறியியல் (வடிவமைப்பு & உற்பத்தி)
  • மின்னணுப் பொறியியல் (வடிவமைப்பு & உற்பத்தி) + தகவல் தொழில் நுட்பம்
  • இயந்திரவியல் (வடிவமைப்பு & உற்பத்தி) + உற்பத்தி வடிவமைப்பு
  • இயந்திரவியல் (வடிவமைப்பு & உற்பத்தி) + சிறப்பு உற்பத்தி

முதுநிலை வடிவமைப்பு பட்டப் படிப்புகள் (M.Des )

தொகு

இரண்டாண்டு மின்சாரவியல், இயந்திரவியல் மற்றும் மின்னணுப் பொறியியல் படிப்புகள் உள்ளது.

முனைவர் பட்டப் படிப்புகள்

தொகு

கணிப்பொறியியல், மின்சாரவியல், மின்னணு பொறியியல், இயந்திரவியல் ஆகிய தொழில்நுட்ப ஆய்வுப் படிப்புகளில் முனைவர் பட்டப் படிப்புகள் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-18. பார்க்கப்பட்ட நாள் 2015-05-24.
  2. இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் ஜபல்பூர்
  3. "Joint Entrance Examination (JEE-Main)". Archived from the original on 2 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 1 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு