இந்திய தொழில்நுட்பக் கழகம் ஐதராபாது

இந்திய தொழில்நுட்பக் கழகம் ஐதராபாது (இ.தொ.க. ஐதராபாது, Indian Institute of Technology Hyderabad) ) ஆந்திர மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியாகும். இந்திய மனிதவள அமைச்சினால் 2008ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட ஆறு இ.தொ.கழகங்களில் ஒன்றாகும்.2008-2009 கல்வியாண்டு முதல் மேதக் மாவட்டத்தில் எத்துமைலாரம் நகரில் உள்ள ஆயுத தொழிற்சாலையின் அமைதியான குடியிருப்பு வளாகத்தில் இ.தொக.சென்னை வழிகாட்டுதலில் இயங்கத் துவங்கியுள்ளது.


தற்காலத் தேவைகளான விடுதிகள், வகுப்பறைகள், விளையாட்டு மற்றும் மருத்துவ வசதிகள் இக்குடியிருப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நிரந்தர கட்டிடங்கள் மேதக் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சங்காரெட்டி நகரின் அருகாமையில் கண்டி கிராமத்தில் உருவாகி வருகின்றன. இந்த கட்டுமானப் பணிக்கான அடிக்கல் காங்கிரசு தலைவர் சோனியா காந்தி தலைமையில் 27 பிப்ரவரி 2009 அன்று நாட்டப்பட்டது.[1] 212 எக்டேர் நிலத்தில் அமையவிருக்கும் இந்த வளாகத்தின் முதல் கட்டிடங்கள் 2010 வேனில் காலத்திற்குள் கட்டப்பட்டுவிடும்.மூன்றாம் கல்வியாண்டிலிருந்து மாணவர்கள் புதிய, நிரந்தர வளாகத்தில் சேர்க்கப்படுவார்கள்.

கல்வி திட்டங்கள்

தொகு

தனது முதலாண்டில்,2008-2009, மூன்று பட்டப்படிப்பு திட்டங்களை வழங்குகிறது:

111 மாணவர்கள் முதலாண்டில் சேர்ந்துள்ளனர்.

இ.தொ.க நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் அனைத்து இ.தொ.கவிற்கும் பொதுவாக ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. மிகவும் கடினமானதும் போட்டி மிகுந்ததுமான இத்தேர்வின் அடிப்படையில் பொறியியல் பட்டப்படிப்பு திட்டங்களுக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

வரும் ஆண்டுகளில் மேலும் கூடுதல் கல்வித்திட்டங்களும் ஆய்வு திட்டங்களும் மற்ற இ.தொ.கழகங்களைப் போன்றே வகுக்கப்படும்.


மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Sonia lays foundation stone for Medak IIT campus". தி இந்து. http://www.hindu.com/thehindu/holnus/004200902271812.htm. பார்த்த நாள்: 2009-02-27. [தொடர்பிழந்த இணைப்பு]



வெளியிணைப்புகள்

தொகு