இந்திய தொழில்நுட்பக் கழகம் (பிஎச்யூ) வாரணாசி
இந்திய தொழில்நுட்பக் கழகம் (பிஎச்யூ) வாரணாசி (Indian Institute of Technology (BHU) Varanasi,சுருக்கம்:IIT (BHU), Varanasi) உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் அமைந்துள்ள ஓர் பொதுத்துறை பொறியியல் கல்வி நிலையமாகும். 1919ஆம் ஆண்டு பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் அங்கமாக துவங்கப்பட்ட இந்தப் பொறியியல் கல்லூரி 2012ஆம் ஆண்டு இந்திய தொழில்நுட்பக் கழகமாக அறிவிக்கப்பட்டது. இ.தொ.க (பிஎச்யூ)வில் 13 துறைகளும் மூன்று பல்துறை பள்ளிகளும் இயங்குகின்றன.
![]() | |
குறிக்கோளுரை | कर्म ही पूजा है (கர்ம ஹி பூஜா ஹை) |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | செய்யும் தொழிலே தெய்வம் |
வகை | பொது |
உருவாக்கம் | 1919 |
தலைவர் | இலால்ஜி சிங் |
பணிப்பாளர் | தனஞ்செய் பாண்டே[1] |
கல்வி பணியாளர் | 265 |
அமைவிடம் | , , |
வளாகம் | நகர்ப்பகுதி |
சுருக்கம் | IIT BHU |
இணையதளம் | www.iitbhu.ac.in |
இ.தொ.க (பிஎச்யூ) கங்கை ஆறு|கங்கைக் கரையில் வாரணாசியின் தெற்கு எல்லையில் 1,300 ஏக்கர்கள் (5.3 km2) பரப்பளவில் அமைந்துள்ளது. மாணவர்கள் தங்கிப் படிக்கும் இந்தக் கழகத்தில் இருபாலரும் கற்கின்றனர். 1971ஆம் ஆண்டில் பனாரசு இந்துப் பல்கலைக்கழகத்தின் , பனாரசு பொறியியல் கல்லூரி (BENCO), சுரங்க மற்றும் மாழையியல் கல்லூரி (MINMET) மற்றும் தொழினுட்பக் கல்லூரி (TECHNO) என்ற மூன்று பொறியியல் வளாகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு தொழில்நுட்பக் கழகம், பனாரசு இந்து பல்கலைக்கழகம் (IT-BHU) என பெயரிடப்பட்டது. இந்த தொழில்நுட்பக் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகமாக நாடாளுமன்றத்தின் மக்களவையால் மார்ச்சு 24, 2011 அன்றும் மாநிலங்களவையால் ஏப்ரல் 30, 2011 அன்றும் அங்கீகரிக்கப்பட்டு இதற்கான குடியரசுத் தலைவரின் ஆணை சூன் 20, 2012இல் வெளியிடப்பட்டது.[2]
மேற்கோள்கள்தொகு
- ↑ "Administration". IT-BHU. ஆகஸ்ட் 7, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. July 10, 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "IIT Act (As amended till 2012" (PDF). 3 டிசம்பர் 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 10 September 2012 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்தொகு
- Leah Renold, A Hindu Education: Early Years Of The Banaras Hindu University (Oxford University Press).
Institute of Technology, Banaras Hindu University
என்பதின் ஊடகங்கள் உள்ளன.