இந்திய வாரிசுரிமைச் சட்டமும் உயிலும்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் படி உயிலின் பங்கு, வகைகள், எழுதும் முறைகள் பற்றி இக்கட்டுரையில் குறிப்படப்பட்டுள்ளது.
வரையறை
தொகுதான் இறந்த பிறகு தன்னுடைய சொத்து எப்படிப் பிரிக்கப்பட வேண்டும் என்ற விருப்பத்தை எழுதிவைக்கும் ஆவணமே உயில் எனப்படும். உயிலில் கண்டகுறிப்பைக் கொண்டு எளிதில் கண்டுபிடிக்கக்கூடியதாக இருக்கவேண்டும். உயிலினை உருவாக்கிய பின்னர் வேறோர் ஆவணத்தின் மூலமாக அந்த உயிலில் சேர்த்தோ, மாறுதல் செய்தோ அந்த ஆவணத்தை உயிலோடு சேர்த்து உயிலெனக் கொள்ள வேண்டும். அது உயிலிணைப்பு எனப்படும்.
உயிலின் நோக்கம்
தொகு- உயில் எழுதி வைத்தவர் இறந்தபின் அவரது சொத்துக்களைப் பங்கிடவும் அவரது விருப்பத்தினை நிறைவேற்ற நிறைவேற்றாளரை நியமிக்கவும்.
- உயில்வழிக் காப்பாளரை நியமிக்கவும்.
- அடுத்த வாரிசினை நியமிக்கவும் அதிகாரத்தினைச் செயல்படுத்தவும்.
- முன்பு எழுதிய உயிலினைத் தள்ளுபடி செய்யவும்.
சட்டபடி அறிவித்தல்
தொகுஉயிலெனப்படும் ஆவணம் சட்டப்பூர்வமானதாக இருக்க வேண்டும். இந்திய வாரிசுரிமைச் சட்டப் பிரிவு 63-இன்படி எழுதிக் கையொப்பமிட்டு சான்றொப்பம் இடப்பட்டிருத்தல் வேண்டும்.
- உயில் எழுதி வைப்பவரின் சொத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும்.
- உயில் எழுதி வைத்தவர் இறந்தபின் செயற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.
உயிலினை உருவாக்கியவர் அதனைத் தள்ளுபடி செய்யவியலாது; அல்லது தள்ளுபடி செய்யமாட்டேன் என உறுதியளித்திருந்தாலும் அல்லது சொத்தில் ஆயுள் பாத்தியத்தை மட்டும் வைத்துக்கொண்டாலும் அது உயிலாகாது.
உயிலின் அமைப்பு
தொகுஉயில் பயனுடையதாகவிருக்க இச்சட்டத்தில் கூறியபடி முறைப்படி கையொப்பமிட்டதாக இருக்க வேண்டும். ஒரு பத்திரம் உயிலாகச் செயல்பட, 2 நிபந்தைகள் உண்டு:
- ஆவணத்தில் கூறப்பட்ட பயன்களைச் செயல்படுத்த வேண்டுமென்பதே அதனை உருவாக்கியவரின் எண்ணம்.
- ஆவணத்தை உருவாக்கியவரின் இறப்பே அவ்வாவணத்தை செயல்படுத்தச் செய்கிறது.
உயிலின் மொழி
தொகுஓர் உயில் எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதப்பட்டு இருக்கலாம். அதை யார் வேண்டுமானாலும் எழுதலாம். அவைகட்கு முத்திரைகள் ஒட்ட வேண்டியதில்லை. பதிவுக்கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டும்.
இந்திய வாரிசுரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்ட உயில்கள்
தொகு- தனிச்சலுகை உயில்கள்: உயில் எழுதத் தனிச்சலுகை சிலருக்குத் தான் கொடுக்கப்பட்டுள்ளது. போரில் ஈடுபட்டிருக்கும் பதினெட்டுவயதடைந்த இராணுவ வீரரோ, கப்பற்படை வீரரோ, விமானப்படை வீரரோ சலுகை உயில் எழுதத் தகுதியானவர்.
- தனிச்சலுகையற்ற உயில்கள்: போரில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரரோ, கப்பற்படை வீரரோ, விமானப்படை வீரரோ அல்லாத எவரும் சட்டத்தின்படி தனிச்சலுகையற்ற உயிலினை உருவாக்கலாம். இவ்வுயில் எழுத்தால் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
உயில் எழுதத் தகுதி
தொகுபதினெட்டு வயதினைத் தாண்டிய புத்திசுவாதீனம் உள்ள எவரும் உயில் எழுதி வைக்கலாம். ஒருவருக்கு நீதிமன்றமே காப்பாளரை நியமித்திருந்தால் அவர் 21 வயதினை அடைந்த பின்னர் வயதுவந்தவராகக் கருதப்படுவார். உயில் உருவாக்க உரிமை வயதினை 1875-ஆம் ஆண்டு இந்திய உரிமை வயதுச் சட்டம் நிர்ணையிக்கிறது. இச்சட்டம் இந்துக்களையும், முகமதியரையும் சேர்த்து அனைவருக்கும் பொருந்துகின்றது.
தற்போது ஒரு பெண் தன் கணவனின் விருப்பமின்றித் தன் சொத்துகளைத தன் விருப்பத்திற்கேற்ப எவருக்கும் அளிக்கலாம். பார்வையற்ற, பேச முடியாத, கேட்கும் திறன் அற்ற மாற்றுத்திறனாளிகள் உயில் உருவாக்குவதன் மூலம் அதன் விளைவுகளை அறியக்கூடுமானால், அவர்கள் உயில் எழுதத் தகுதியுடையவர்கள். பித்துப்பிடித்தவரும், திடசித்தமுள்ளவராயிருக்கும், சமயத்தில், அதனைப் புரிந்து கொள்ளக் கூடியவராக இருந்தாலும், அதன் விளைவுகளை நிதானிப்பவராக இருந்தால், உயிலினை உருவாக்கலாம்.
ஒருவர் குடிபோதையினாலோ, நோயின் கொடுமையினாலும், வயது முதிர்ச்சியினாலோ தாம் செய்வது இன்னதென்று அறியாத மனநிலையில் இருக்குபோது உயிலினை உருவாக்க முடியாது.
சான்றொப்பமிடும் சாட்சிகள்
தொகுஉயிலுக்குச் சான்றொப்பமிட எவருக்கும் தகுதி உண்டு. வயதுவராத ஒருவரும் சான்றளிக்கும் சாட்சியாகலாம் என்று சட்டப்பரிவு 118 கூறுகிறது. உயிலின் பொருளடக்கம் என்னவென்று அவருக்கு தெரியவேண்டிய அவசியமில்லை. உயிலுக்குச் சான்றொப்பமிடும் மனைவிக்கோ, கணவனுக்கோ அல்லது அவர்கள், இருவர் வழியாக உரிமை பெறும் எவருக்கும் கொடுக்கப்படும் கொடை செல்லுபடியாகாது.
அசாரப் அலி எதிர் முகமது அலி (1947பி.எல்.ஆர் 122) வழக்கு
தொகுரஹமத்மகால் எனப்பட்ட சொத்துக்களை ஒருவர் உயில்வழிக் கொடையாக கொடுத்தார். உயில் உருவாக்கபட்ட பின்னர் அச்சொத்துகளில் பெரும்மாறுதல் ஏற்படுத்தபட்டன. உயிலின் கர்த்தா இறந்த நாள் அன்று எந்த நிலையில் அச்சொத்துகள் இருந்தனவோ அந்த நிலையிலேயே கொடையாகப் போய் சேரும் என திர்ப்பளிக்கப்பட்டது.
உயிலை ரத்து செய்தல்
தொகுஒரு உயில் உருவாக்கியஉடன் உருவாக்கியவரின் வாழ்நாளில் செயல் படுவதில்லை. அதனை உருவாக்கியவர் அவரது வாழ்நாளில் எப்பொது வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம். பின்வரும் இரு வழிகளில் மாற்றி அமைக்கலாம்.
- சட்டத்தின் நடைமுறையில் இரத்து செய்தல்: உயிலினை உருவாக்கியவர் அதனை இரத்து செயலாம். உயிலினை உருவக்கிய ஆணோ, பெண்ணோ அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டால் அவர் உருவாக்கிய உயிலினை செயல்படுத்த முடியாது. இது ரத்து செய்தல், அழிதலுக்கு சமமாகும்.
- ஆவணத்தில் ஈடுபாடு உடையொர் செயல்முறையில் இரத்து செய்தல்:
இது இரு வகைபடும்: i) புதியதொரு உயில்வழி இரத்து செய்தல் ii)அழித்தலின் மூலம் இரத்து செய்தல்
இரத்து செய்யும் எண்ணத்தோடு ஓர் உயிலினை சிதைத்த பின்னர் நீண்ட நாட்கள் ஆகியும் புதியதோர் உயிலினை உருவாக்காமல் உயிலியற்றவர் இறந்து விட்டதால் சிதைக்கப்பட்ட உயில் இரத்து செய்யபடவில்லை எனப் புரோவ் ஆம் என்பவரின் சொத்து வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது (1952 1 ஆல்.இ.ஆர். P. 110).
உயிலினை புதிப்பித்தல்
தொகு- மறுஉருவாக்கல்: இரத்து செய்யப்பட்ட உயிலினை மறுபடியும் உருவாக்கி அதில் உயிலை உருவாக்கியவர் கையொப்பமிட்டு, சாட்சிகள் சான்றொப்பமிடுவதன் மூலம் புதுப்பிக்கலாம். இதுவே மறுவெளியீடு என்று அழைக்கப்படும் .
- புதுப்பித்தல்: இரத்துச்செய்த உயிலினை புதுப்பிக்கும் எண்ணத்தை ஓர் உயிலிணைப்பினை உருவாக்குவதன் மூலம் தெரிவித்தால் அதுவே புதுப்பித்தல் என்றழைக்கப்படுகின்றது.
செல்லாநிலை உயில்வழிக்கொடைகள்
தொகு- உயில் எழுதிவைப்பவரின் கையொப்பத்திற்குச் சான்றளிக்கும் சாட்சிக்கு கொடுக்கப்பட்ட உயில்வழிக்கொடை செல்லாததாகும். உயிலுக்கு யார் வேண்டுமானாலும் சான்றொப்பமிடலாம். ஆனால் அவர் கொடைபெறுநராகவோ, பயனடைபவராகவோ இருக்கவியலாது. (பிரிவு67)
- உயில் எழுதிவைத்தவரின் தெளிவான எண்ணத்தைத் தெரிவிக்காத எந்தகொடையும் செல்லாத்தாகும் (பிரிவு 89)
- உயில் எழுதிவைத்தவர் இறந்தநாளில் உயிரோடில்லாத ஒருவருக்குக் கொடுத்த கொடை செல்லாதாகும். (பிரிவு 112) .
உயில் மெய்ப்பிதழ்
தொகுஉயில் எழுதிவைத்தவரின் சொத்துக்களை நிர்வாகிக்கும் உரிமையளித்து நீதிமன்றத்தின் முத்திரையிடப்பட்டுச் சான்றளிக்கப்பட்ட உயிலின் நகலே, உயில் மெய்ப்பிதழாகும். நீதிமன்றச் சான்றிதழும், உயில் நகலும் சேர்ந்து உயில் மெய்ப்பிதழ் எனப்படும். ஓர் உயிலின் உயில் மெய்ப்பிதழ் அவ்வுயிலை எழுதி இறந்த சமயத்தினின்று நிருபித்து நிலைநிறுத்திச் செயல்படுகிறது.
உயில் நிறைவேற்றாளர்
தொகுஉயில் எழுதி வைத்தவரின் இறுதி உயிலை நிறைவேற்றும் பொருட்டு உயிலிலேயே பெயர் குறிக்கப்பட்ட ஒவருவரே நிறைவேற்றாளர் எனப்படுவார். நிறைவேற்றாளரை உயில் மூலமாகத்தான் நியமிக்க முடியும். அவர்கட்கு உயில் மெய்ப்பிதழ் மட்டும் அளிக்கப்படமாட்டாது. அவர் உயிலிலிருந்து பொறுப்புகளையும் அதிகாரத்தையும் பெறுகிறார். தான் தோன்றி நிறைவேற்றாளர் என்பவர் தாமாகவே முன்வந்து நிறைவேற்றாளர் பொறுப்பினை ஏற்றுக்கொள்வார்.