இந்திரா கடம்பி

இந்திரா கடம்பி (Indira Kadambi), (பிறப்பு: செப்டம்பர் 30, 1969, குண்டாபூர், கர்நாடகா ) ஒரு மூத்த இந்திய கலைஞரும், பரதநாட்டிய நடனத்தின் ஆசிரியருமாவார்.

இந்திரா கடம்பி
பிறப்பு1969

இளமைப்பருவம்

தொகு

இந்திரா ஒரு பரதநாட்டியத்தில் நிபுணத்துவம் பெற்றவராக அறியப்படுகிறார். இவர், திருமதி. உஷா தாதர், நாட்டியவிஷாரத நர்மதா மற்றும் பத்மபூசண் விருது பெற்ற திருமதி. கலாநிதி நாராயணன் ஆகியோரின் சீடராக உள்ளார். இவர், திருமதி கல்யாணிகுட்டியம்மாவிடமிருந்து, கேரளாவின் மோகினியாட்டம் பயிற்சியும், கர்நாடக குரல் இசை பயிற்சியை, ஸ்ரீபெலக்வாடி சீனிவாச ஐயங்காரிடமிருந்தும் பெற்றுள்ளார்.

மரியாதைகள்

தொகு

கலைத்துறையில் தனது பங்களிப்புக்காக, இந்திராவுக்கு கர்நாடக ஆரியபட்டா கலாச்சார சங்கத்தின் நாட்டிய சாந்தலா விருதும், சென்னையின் நாரத கான சபாவின் சிறந்த மூத்த நடன கலைஞருக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவர், இந்திய அரசு அமைப்பான, கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (ஐ.சி.சி.ஆர்), அமைப்பின் அங்கீகாரம் பெற்ற கலைஞர் ஆவார்.

இவர் இந்தியாவிலும், இங்கிலாந்து, அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் மலேசியாவிலும் பரவலாகப் பயணம் செய்துள்ளார். பத்திரிகைகளில் விமர்சனங்கள், பல்வேறு வானொலி, தொலைக்காட்சி இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளுக்கான நேர்காணல்கள் இவரது கலைக்கு அதிக அங்கீகாரத்தைக் கொண்டு வந்துள்ளன.

நிறுவனம்

தொகு

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல அர்ப்பணிப்புள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆண்டுதோறும் இந்திராவின் பயிற்சி பட்டறைகளுக்கு வருகிறார்கள். அபிநயம், மற்றும் நட்டுவாங்கம் கற்பிப்பதில் இவர் நிபுணத்துவம் பெற்றவராக உள்ளார். இவர் நன்கு அறியப்பட்ட அபிநய ஆசிரியர் ஆவார்.

2011 ஆம் ஆண்டில், இவரும், இவரது கணவருமான டி.வி.ராம்பிரசாத் என்பவரால் 1989 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட , ஈ அம்பலம் என்கிற நிறுவனம், யோகாவுடன் ஒருங்கிணைந்த உலகின் முதல் ஆன்லைன் கலை நிகழ்ச்சியான இந்திய நிகழ்த்து கலைகளைத் தொடங்கியது. ஈ அம்பலம், சென்னையின் முதல் வெளிப்புற விழாவான " சமாகம பரணிடப்பட்டது 2017-09-12 at the வந்தவழி இயந்திரம் " ஐ டிசம்பர் 2011 இல் அறிமுகப்படுத்தியது. 2014 ஆம் ஆண்டில், இவர்கள் யோகா, இசை, நடனம் மற்றும் ஆளுமை மேம்பாடுகள் போன்றவை, பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் பள்ளிகளில் கே-12 திட்டமான லைஃப் ஆர்ட் எஜுகேஷன் என்கிற திட்டத்தை தொடங்கினர். [1]

நடனவடிவமைப்பு

தொகு

இவர், பின்வருவனவற்றிற்கு நடன வடிவமைப்பு செய்துள்ளார். [2]

புருஷ பரினாம்   - காலத்தின் மூலம் மனிதனின் கருத்தை ஆராயும் ஒரு தயாரிப்பு   - கடந்த, நிகழ்கால மற்றும் எதிர்காலத்தை பற்றிய தொகுப்பு.
சதாசிவ தரிசனம்   - சிவபெருமானின் அம்சம்
அஷ்ட நாயகியரின் இஷ்ட முருகன்   - முருக பகவான் மீது ஒரு தயாரிப்பு
வம்சி-தெய்வீக புல்லாங்குழல்   - பரதநாட்டியம் மற்றும் ஆங்கில கவிதை வாசிப்பு
மனோன்மணீயம்   - 1892 இல் கவிஞர் சுந்தரம் பிள்ளை எழுதிய ஒரு தமிழ் காவியம். இந்த படைப்பு லிட்டன் பிரபு எழுதிய தி சீக்ரெட் வே புராணக்கதைகளை அடிப்படையாகக் கொண்டது.
ஜுகல்பந்தி   - மோகினியாட்டம் கலைஞர் சுமிதா இராஜனுடன் இணைந்து வழங்கியது.
ஹாஸ்யா   - அரிதாக காட்டப்படும் அம்சத்தை சித்தரிக்கும் ஒரு நகைச்சுவை நடனம் - இது ஒரு நடன அரங்கின் தயாரிப்பு ஆகும்.
காவ்யா-சித்ரா-கீதா-நிருத்தியா   - சமஸ்கிருத வசனம், ஓவியம், இசை மற்றும் நடனம் ஆகியவற்றில் சதாவதானி ஆர்.கணேஷ், மற்றும் பி.கே.எஸ் வர்மா ஆகியோரின் தன்னிச்சையான படைப்புகளின் திட்டம்

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரா_கடம்பி&oldid=3234028" இலிருந்து மீள்விக்கப்பட்டது