இந்திரா காந்தி விளையாட்டரங்கம், விசயவாடா

இந்திரா காந்தி விளையாட்டரங்கம் (Indira Gandhi Stadium, Vijayawada) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசயவாடா நகரில் அமைந்துள்ளது. இந்த விளையாட்டரங்கம் முன்னர் நகராட்சி மைதானம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த மைதானத்தில் நவம்பர் மாதம் 24, 2002 அன்று இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையே ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றது.[2] மேலும் இந்த மைதானத்தில் திசம்பர் 1997-ல் இங்கிலாந்து பெண்கள் துடுப்பாட்ட அணிக்கும் பாக்கித்தான் பெண்கள் துடுப்பாட்டம் அணிகளுக்கு இடையே பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 230 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திரா காந்தி விளையாட்டரங்கம்
நகராட்சி மைதானம்
அரங்கத் தகவல்
அமைவிடம்விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
உருவாக்கம்1969
இருக்கைகள்25,000[1]
உரிமையாளர்ஆந்திர துடுப்பாட்டக் கழகம்
கட்டிடக் கலைஞர்n/a
இயக்குநர்ஆந்திர துடுப்பாட்டக் கழகம்
குத்தகையாளர்ஆந்திர துடுப்பாட்டக் அணி
முடிவுகளின் பெயர்கள்
n/a
பன்னாட்டுத் தகவல்
ஒரே ஒநாப24 நவம்பர் 2002:
 இந்தியா v  மேற்கிந்தியத் தீவுகள்
ஒரே மஒநாப12 திசம்பர் 1997:
 இங்கிலாந்து v  பாக்கித்தான்
9 திசம்பர் 2019 இல் உள்ள தரவு
மூலம்: Cricinfo

சூன், 2014ல் மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் பிற கலாச்சார நிகழ்ச்சிகள் போன்ற தேசிய விழாக்கள் இங்கு நடத்தப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. "‘IGMC stadium only meant for sports and games'". The Hindu. 12 April 2012. http://www.thehindu.com/news/cities/Vijayawada/igmc-stadium-only-meant-for-sports-and-games/article3306386.ece. 
  2. "Indira Gandhi Stadium, Vijayawada details, matches, stats". Cricbuzz (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-25.

வெளி இணைப்புகள் தொகு