இந்துலதா சுக்லா
இந்துலதா சுக்லா (Indulata Sukla)(7 மார்ச் 1944 - 30 ஜூன் 2022)[1] என்பவர் ஒடிசா மாநிலத்தினைச் சேர்ந்த இந்தியக் கல்வியாளர் ஆவார். இவர் ஒடிசாவின் சம்பல்பூர் பல்கலைக்கழகத்தில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகக் கணிதப் பேராசிரியராக இருந்தார்.
இந்துலதா சுக்லா | |
---|---|
பிறப்பு | பரிபடா, மயூர்பஞ்ச் சமஸ்தானம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (தற்பொழுது ஒடிசா) | 7 மார்ச்சு 1944
இறப்பு | 30 சூன் 2022 | (அகவை 78)
தேசியம் | இந்தியர் |
கல்வி | எம். பி. சி. கல்லூரி, பரிபதா (இளமறிவியல்) ரவின்சா கல்லூரி, கட்டக் (முது அறிவியல்) ஜபல்பூர் பல்கலைக்கழகம் (முனைவர்) |
பணி | கணிதவியலாளர் |
பணியகம் | சாம்பல்பூர் பல்கலைக்கழகம், பேராசிரியர் |
அறியப்படுவது | எண் கோட்பாடு, குறியாக்கவியல், பகுப்பாய்வு |
வாழ்க்கைத் துணை | ஆனந்த சரண் சுக்லா |
சுக்லா, மகாராணி பிரேம் குமாரி பெண்கள் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பையும், இளமறிவியல் படிப்பினை பரிபாடாவில் உள்ள எம். பி. சி கல்லூரியில் கணித துணைப்பாடத்துடன் 1966-ல் கட்டாக்கில் உள்ள ராவென்ஷா கல்லூரியில் கணிதத்தில், முதுஅறிவியல் பட்டத்தினை முடித்து எம். பி. சி. கல்லூரியில் விரிவுரையாளராகச் சிறிது காலம் பணியாற்றினார். முனைவர் பட்டப் படிப்பிற்காக அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் நிதியுதவியுடன் ஜபல்பூர் பல்கலைக்கழகத்தில் முடித்தார். திரிபிக்ரம் பதி முனைவர் பட்ட மேற்பார்வையாளராகவும் ஆய்வு வழிகாட்டியாகவும் செயல்பட்டார்.[2] சுக்லா தனது ஆராய்ச்சியைத் தொடரும் போது, நவம்பர் 1970-ல் சம்பல்பூர் பல்கலைக்கழகத்தில் கணித அறிவியல் பள்ளியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். மேலும் மார்ச் 2004-ல் பணிவு ஓய்வு பெறும் வரை இங்கேயே தொடர்ந்தார்.
எண் கோட்பாடு மற்றும் மறைகுறியாக்கத்திற்கான அதன் பயன்பாடுகள்-Number Theory and Its Applications to Cryptography (கட்டாக்: கல்யாணி வெளியீடு, 2000) என்ற பாடப்புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.[2][3] இவரது ஆராய்ச்சியின்போது, ஆங்கிலக் கணிதவியலாளர் பிரையன் குட்னருடன் போரியர் தொடரில் பணியாற்றினார்.[2][4] இவர் அமெரிக்கக் கணிதவியல் சங்கம் மற்றும் இந்தியக் கணித சங்கம் ஆகியவற்றின் வாழ்நாள் உறுப்பினராக இருந்தார்.
விருதுகளும் கௌரவங்களும்
தொகுஒரிசா கணிதவியல் சங்கம் எண் கோட்பாடு, குறியாக்கவியல் மற்றும் பகுப்பாய்வு ஆகியவற்றில் இவரது பணிக்காக வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது. 7 பிப்ரவரி 2015 அன்று ஒடிசா, ஜாஜ்பூர் சாலையில் உள்ள வியாசநகர் தன்னாட்சிக் கல்லூரியில் நடைபெற்ற ஒரிசா கணிதவியல் சங்கத்தின் 42வது ஆண்டு மாநாட்டில், சென்னையின் கணித அறிவியல் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் ராமச்சந்திரன் பாலசுப்ரமணியனிடமிருந்து இந்த விருதைப் பெற்றார்.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Retd Sambalpur University Math Prof Indulata Sukla Passes Away". odishabytes. 1 July 2022. https://odishabytes.com/retd-sambalpur-university-math-prof-indulata-sukla-passes-away/.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Mathematician Indulata Sukla Honoured", The Pioneer, 9 February 2015.
- ↑ 3.0 3.1 "Mathematician Awarded for Number Theory", தி நியூ இந்தியன் எக்சுபிரசு, 9 February 2015, archived from the original on 25 ஜூலை 2015, பார்க்கப்பட்ட நாள் 28 பிப்ரவரி 2023
{{citation}}
: Check date values in:|accessdate=
and|archive-date=
(help). - ↑ Kuttner & Sukla (1985).