மயூர்பஞ்ச் சமஸ்தானம்

மயூர்பஞ்ச் சமஸ்தானம் (Mayurbhanj State)[1] (ஒடியா: ମୟୁରଭଞ୍ଜ ରାଜ୍ୟ), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் பரிபடா நகரம் ஆகும். இது பிரித்தானிய இந்தியாவின் வங்காளம் மாகணத்தில் 1911-ஆம் ஆண்டு வரையிலும், பின்னர் பீகார் மற்றும் ஒரிசா மாகாணம் (1912–1936) மற்றும் ஒரிசா மாகாணத்தின் (1936–1947) கிழக்கிந்திய முகமையில் இருந்தது. மயூர்பஞ்ச் சமஸ்தான ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 9 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

மயூர்பஞ்ச் சமஸ்தானம்
ମୟୁରଭଞ୍ଜ ରାଜ୍ୟ
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா
[[கீழைக் கங்கர்|]]
12-ஆம் நூற்றாண்டு–1949
கொடி சின்னம்
கொடி சின்னம்
Location of மயூர்பஞ்ச்
Location of மயூர்பஞ்ச்
பிரித்தானிய இந்தியாவின் தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா வரைபடத்தில் மயூர்பஞ்ச் சமஸ்தானத்தின் அமைவிடம்
தலைநகரம் பரிபடா
வரலாறு
 •  நிறுவப்பட்டது 12-ஆம் நூற்றாண்டு
 •  இந்திய விடுதலை, சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம் 1949
Population
 •  1901 610,383 
தற்காலத்தில் அங்கம் மயூர்பஞ்சு மாவட்டம், ஒடிசா, இந்தியா
மயூர்பஞ்ச் சமஸ்தானத்தின் ஹரி பலதேவ் கோயில், பரிபடா
சந்தாலி மக்களின் நடனம், மயூர்பஞ்சு

மலைப்பகுதிகள் அதிகம் கொண்ட மயூர்பஞ்ச் சமஸ்தானம், தற்கால இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்ட பகுதிகளைக் கொண்டிருந்தது. 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மயூர்பஞ்ச் சமஸ்தானம் 10,982 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 6,10,383 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இந்த சமஸ்தானத்தின் மலைப்பகுதிகளில் சந்தாலிகள், முண்டா மக்கள், ஹோ மக்கள் மற்றும் கிசான் மக்கள் போன்ற பழங்குடிகள் அதிகம் வாழ்ந்தனர்.

வரலாறு

தொகு

12-ஆம் நூற்றாண்டில் மயூர்பஞ்ச இராச்சியத்தை பஞ்ச் வம்ச சத்திரியர்கள் நிறுவினர்.[2] [3][4][5]பின்னர் மயூர்பஞ்ச் பகுதிகள் கலிங்க நாட்டின் கீழைக் கங்கர் மன்னர் இரண்டாம் பானு தேவன் கட்டுப்பாட்டுப்பாடில் சென்றது. 17-ஆம் நூற்றாண்டில் மயூர்பஞ்ச் மராத்தியப் பேரரசின் கீழ் ஒரு சிற்றரசாக இருந்தது. இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் (1803–1805) பின்னர், மயூர்பஞ்ச் இராச்சியம், பிரித்தானிய இந்தியாவின் கீழ் சுதேச சமஸ்தானமாக இருந்தது. இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி, மயூர்பஞ்ச் சமஸ்தானம், 1949-ஆம் ஆண்டில் ஒரிசா மாகாணத்தில் சேர்க்கப்பட்டது. மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, ஒரியா மொழி பேசும் பகுதிகளைக் கொண்டு 1 நவம்பர் 1956 அன்று ஒடிசா மாநிலம் நிறுவப்பட்ட போது மயூர்பஞ்ச் சமஸ்தானப் பகுதிகள் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Imperial Gazetteer of India, v. 17, p. 242.
  2. Hermann Kulke (1976), Kshatriyaization and social change: A Study in Orissa setting (PDF), Popular Prakashan, p. 404, archived from the original (PDF) on 2021-06-24, பார்க்கப்பட்ட நாள் 2022-01-24
  3. Chanda, Ramapradas (1929), Bhanja Dyansty of Mayurbhanja and their ancient capital at Khiching, AD, Mayurbhanj
  4. Sahu, NK (1956), THE BHANJA KINGS OF ORISSA, Indian History Congress
  5. ODISHA DISTRICT GAZETTEERS MAYURBHANJ (PDF), GAD, Govt of Odisha, 1990, pp. 61–66

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயூர்பஞ்ச்_சமஸ்தானம்&oldid=3574443" இலிருந்து மீள்விக்கப்பட்டது