ஹோ மக்கள்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

ஹோ மக்கள் (Ho people or Kolha people), ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின் உட்பிரிவான முண்டா மொழியின் கிளை மொழிகளில் ஒன்றான ஹோ மொழியை பேசும் பழங்குடி மக்கள் ஆவார். இம்மக்கள் இந்தியாவின் ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், பிகார் போன்ற மாநிலங்களில் அதிகம் வாழ்கின்றனர்.

ஹோ மக்கள்
பாரம்பர்ய உடையில் ஹோ பழங்குடிப் பெண்
மொத்த மக்கள்தொகை
1,658,104 (2011 கணக்கெடுப்பு)[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா
              ஜார்கண்ட்928,289[1]
              ஒடிசா705,618[1]
              மேற்கு வங்காளம்23,483[1]
              பிகார்715[1]
மொழி(கள்)
ஹோ மொழி
சமயங்கள்
சர்னா சமயம்  • இந்து சமயம்  • கிறித்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
முண்டா மக்கள்  • காரியா மக்கள்  • ஜுவாங் மக்கள்  • சந்தாலிகள்  • பூமிஜ் மக்கள்

Odisha population figures include Kolha, Mundari, Kolah, Munda & Kol who although listed as a separate Scheduled Tribe, are another name for the Hos.
ஒரு ஹோ விவசாயி தனது விவசாய அனுபவத்தை பகிர்கிறான்

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஹோ பழங்குடி மக்களில் 91% பேர் காடுகளை நேசிக்கும் சர்னா சமயத்தை பின்பற்றுகின்றனர்.[2] சிறுபான்மையான ஹோ மக்கள் இந்து சமயம் மற்றும் கிறித்துவ சமயங்களை பின்பற்றுகின்றனர்.

ஹோ மக்களில் பெரும்பான்மையோர் வேளாண்மைத் தொழில் செய்கின்றனர். சிலர் சுரங்கத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

இட ஒதுக்கீடு வசதிக்காக இந்திய அரசு ஹோ மக்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் வைத்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "ST-14 Scheduled Tribe Population By Religious Community". Census of India. Ministry of Home Affairs, India. பார்க்கப்பட்ட நாள் 15 October 2017.
  2. Pal, T (December 2016). "Sacred Grove in Jharkhand". Indian International Journal of Humanities, Arts and Social Science Research I (I). பன்னாட்டுத் தர தொடர் எண்:2456-4389. http://www.iijhassr.com/Published%20Paper/Vol-I/Issue-I/Vol-I_Issue-I_P5.pdf. பார்த்த நாள்: 10 October 2017. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோ_மக்கள்&oldid=4165795" இலிருந்து மீள்விக்கப்பட்டது