இந்தோனேசியக் குட்டை துடுப்பு விலாங்கு

மீன் இனம்
இந்தோனேசியக் குட்டை துடுப்பு விலாங்கு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ஆங்குலிடே
பேரினம்:
ஆங்குயிலா
இனம்:
ஆ. பைகோலர்
துணையினம்:
பைகோலர்
முச்சொற் பெயரீடு
ஆங்குயிலா பைகோலர் பைகோலர்

இந்தோனேசியக் குட்டை துடுப்பு விலாங்கு (Indonesian shortfin eel)(ஆங்குயிலா பைகோலர் பைகோலர்) என்பது ஆங்கிலிடே குடும்பத்தின் ஆங்குயில்லா பேரினத்தைச் சேர்ந்த விலாங்கு மீன் துணைச்சிற்றினமாகும். இது இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு அமைதிப் பெருங்கடலின் வெப்பமண்டல கடலோரப் பகுதிகள் முழுவதும் காணப்படுகிறது.[1]

இந்த துணையினத்தின் பொதுவான பழக்கவழக்கங்கள், உணவு முறை மற்றும் குணாதிசயங்கள் பேரினப் பண்புகளைக் கொண்டது. இந்த சிற்றினம் 1.2 மீட்டர் நீளம் வரை வளர்கிறது. இதனுடைய ஆயுட்காலம் 20 ஆண்டுகள் வரை இருக்கலாம். முதுகெலும்பு துடுப்பு மென்மையான கதிர்கள் 240-250 வரையும், குத துடுப்பு மென்மையான கதிர்கள் 200-220 வரையும், முதுகெலும்புகள் 105 முதல் 109 வரையும் காணப்படும். இந்த மீனின் அடிப்பகுதி வெளிறிய நிறத்துடனும் மேல் பகுதி ஆலிவ்/நீலம்-பழுப்பு நிறத்தில் காணப்படும். இது பசிபிக் குட்டை துடுப்பு விலாங்கு, ஆங்குயிலா அப்சுகுராவினை ஒத்துக் காணப்படும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "{{{genus}}} {{{species}}}". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. June 2006 version. N.p.: FishBase, 2006.