இன்ஃபோ பொறியியல் கல்வி நிறுவனம்
கோயம்புத்தூர், கோவில்பாளையத்தில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரி
இன்ஃபோ இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் (Info Institute of Engineering) என்பது தமிழ்நாட்டின், கோயம்புத்தூர், கோவில்பாளையத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்வி நிறுவனம் ஆகும். இந்த கல்லூரி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் (AICTE)] [1] அங்கீகரிக்கப்பட்டுள்ளது மேலும் இது, கோவையில் உள்ள அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [2] இக்கல்லூரி 2007 இல் நிறுவப்பட்டதாகும். இந்த நிறுவனம் வேலைவாய்ப்பு பயிற்சிக்காக உள்ளூர் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. [3]
Other name | InfoEngg |
---|---|
வகை | தனியார் |
உருவாக்கம் | 2007 |
முதல்வர் | முனைவர் என். கோட்டீஸ்வரன் |
அமைவிடம் | , , |
சுருக்கப் பெயர் | IIE |
இணையதளம் | http://www.infoengg.com |
துறைகள்
தொகு- குடிசார் பொறியியல் துறை
- இயந்திர பொறியியல் துறை
- மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் துறை
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை
- தகவல் தொழில்நுட்பத் துறை
- மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை
- மேலாண்மை ஆய்வுகள் துறை
- கணினி பயன்பாடுகள் துறை
- அறிவியல் மற்றும் மானுடவியல் துறை
வழங்கப்படும் பாடங்கள்
தொகுஇளநிலைப் படிப்புகள்:
- பி.இ. - குடிசார் பொறியியல்
- பி.இ. - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பி.இ. - மின்னணு மற்றும் தொடர்பியல்
- பி.இ. - மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல்
- பி.டெக்-தகவல் தொழில்நுட்பம்
- பி.இ. - இயந்திரப் பொறியியல்
முதுநிலைப் படிப்புகள்:
- எம்.சி.ஏ - கணினி பயன்பாடு
- எம்பிஏ - வணிக மேலாண்மை
- எம்.இ. - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- எம்.இ. - வி.எல்.எஸ்.ஐ வடிவமைப்பு
- எம்.இ. - மின் ஆற்றல் மற்றும் செயலி
- எம்.இ. - தொடர்பு அமைப்புகள்
ஆராய்ச்சிப் படிப்புகள்:
- பி.எச்.டி - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பி.எச்.டி - மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல்
குறிப்புகள்
தொகு- ↑ "`AICTE Approved engineering colleges List". AICTE. http://www.aicte-india.org/downloads/approved_institut_websites/tn.pdf. பார்த்த நாள்: 14 June 2012.
- ↑ "`Anna University, Coimbatore, engineering colleges List". AnnaUniv CBE இம் மூலத்தில் இருந்து 27 ஜூன் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120627080649/http://www.autcbe.ac.in/engg_college_list.aspx#cbe. பார்த்த நாள்: 14 June 2012.
- ↑ "MOUS SIGNED". தி இந்து இம் மூலத்தில் இருந்து 19 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140519203603/http://www.hindu.com/edu/2011/02/28/stories/2011022850200300.htm. பார்த்த நாள்: 14 June 2012.