இப்திகார் அகமது

இப்திகார் அகமது (Iftikhar Ahmed (பிறப்பு: செப்டமபர், 3 1990) ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி, பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.[1]

உள்ளூர்ப் போட்டிகள்

தொகு

2017-18 ஆம் ஆண்டிற்கான குவைத்-இ-அசாம் கோப்பைக்கான தொடரில் இவர் சூயி வடக்கு எரிவாயு துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார். அந்தத் தொடரில் 11 போட்டிகளில் விளையாடி 735 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார்.[2]

2016-17 ஆம் ஆண்டுகளுக்கான மாகாண ஒருநாள் கோப்பைத் தொடரில் சனவரி 27 அன்று நடைபெற்ற போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 131* ஓட்டங்கள் எடுத்தார். பின் பந்துவீச்சில் 12 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். அந்தப் போட்டியில் கவுகர் அலியுடன் இணைந்து ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார்.[3][4] பின் அதே ஆண்டில் நடைபெற்ற பாக்கித்தான் கோப்பைத் தொடரில் இவர் கைபர் பக்துவ்வா அணிக்காக இவர் விளையாடினார். இந்தத் தொடரின் நான்கு போட்டிகளில் 244 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் வரிசையில் முதலிடம் பெற்றார்.[5]

2018 ஆம் ஆண்டிற்கான பாக்கித்தான் கோப்பைக்கான தொடரில் இவர் சிந்து மாகாண அணி சார்பாக விளையாடினார்.[6][7] இந்தத் தொடரில் பலூசிஸ்தான் (பாகிஸ்தான்) அணிக்கு எதிரான போட்டியில் 116 ஓட்டங்கள் எடுத்தார். மேலும் அந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். மேலும் சிந்து மாகாண அணி 12 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[8] இந்தத் தொடரின் நான்கு போட்டிகளில் 230 ஓட்டங்கள் எடுத்தார்.[9]

சர்வதேசப் போட்டிகள்

தொகு

2015 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டு நாள் கொண்ட பயிற்சித் துடுப்பாட்டத்தில் பாக்கித்தான் அ அணி சார்பாக இவர் விளையாடினார். அந்தப் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த பாக்கித்தான் அணி வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார்.[10][11]

2016 ஆம் ஆண்டில் பாக்கித்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. ஆகஸ்டு 11, இல் இலண்டனில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான நான்காவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் போட்டியில் விளையாடினார். அந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் இரண்டு ஓவர்கள் வீசி 12 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். பின் மட்டையாட்டத்தில் 4 பந்துகளில் 4 ஓட்டங்கள் எடுத்து கிறிஸ் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 2 ஓவர்கள் வீசி 1 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். இதில் ஒரு ஓவரை மெய்டனாக வீசினார். பாக்கித்தான் அணி 10 இலக்குகளால் வெற்றி பெற்றது.[12]

2015 ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் பாக்கித்தானியத் துடுப்பாட்ட அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் செய்தது. நவமபர் 13 இல் அபுதாபியில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இநதப் போட்டியின் பந்துவீச்சில் 6 ஓவர்கள் வீசி 31 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். பின் மட்டையாட்டத்தில் 21 பந்துகளில் ஐந்து ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இநதப் போட்டியில் இங்கிலாந்து அணி 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சான்றுகள்

தொகு
  1. "Iftikhar Ahmed". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 October 2015.
  2. "Quaid-e-Azam Trophy, 2017/18: Sui Northern Gas Pipelines Limited Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 April 2018.
  3. "Regional One Day Cup, Final: Karachi Whites v Peshawar at Karachi, Jan 27, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2017.
  4. "Gauhar, Iftikhar tons lead Peshawar to title". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2017.
  5. "Pakistan Cup, 2017 Khyber Pakhtunkhwa: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 April 2018.
  6. "Pakistan Cup one-day tournament to begin in Faisalabad next week". Geo TV. பார்க்கப்பட்ட நாள் 21 April 2018.
  7. "Pakistan Cup Cricket from 25th". The News International. பார்க்கப்பட்ட நாள் 21 April 2018.
  8. "Umar, Iftikhar blast centuries as Sindh edge Balochistan". The News International. பார்க்கப்பட்ட நாள் 28 April 2018.
  9. "Pakistan Cup 2018, Sindh: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 May 2018.
  10. "England tour of United Arab Emirates, Tour Match: England XI v Pakistan A at Sharjah, Oct 5-6, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 October 2015.
  11. "England tour of United Arab Emirates, 2nd ODI: England v Pakistan at Abu Dhabi, Nov 13, 2015". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 November 2015.
  12. "Pakistan tour of England and Ireland, 4th Investec Test: England v Pakistan at The Oval, Aug 11-15, 2016". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 August 2016.

வெளியிணைப்புகள்

தொகு

கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: இப்திகார் அகமது

"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்திகார்_அகமது&oldid=2714316" இலிருந்து மீள்விக்கப்பட்டது