இமயமலை காட்டுப் பூங்குருவி
இமயமலை காட்டுப் பூங்குருவி Himalayan forest thrush | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Passeriformes
|
குடும்பம்: | Turdidae
|
பேரினம்: | |
இனம்: | Z. salimalii
|
இருசொற் பெயரீடு | |
Zoothera salimalii Alström et al., 2016 |
இமயமலை காட்டுப் பூங்குருவி (அறிவியல் பெயர் :Zoothera salimalii), (ஆங்கில பெயர் : Himalayan forest thrush) என்ற பறவை 2016 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பூங்குருவி (Thrush) வகையைச் சேர்ந்த ஒரு சிற்றினமாகும். இது அண்மைக் காலம்வரை பிளைன் பேக்டு பூங்குருவி என்று கருதப்பட்டு வந்த நிலையில் பறவையியலாளர்களால் இது ஒரு தனித்த சிற்றினம் என அடையாளம் காணப்பட்டு பறவையியலாளர் சலீம் அலி நினைவாக சூதெரா சலீமலி என்ற பறவையியல் பெயர் சூட்டப்பட்டது.[1] இப்பறவை குறைந்தது 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பொதுவான மூதாதையரிடம் இருந்து பிரிந்திருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகிறது. இந்தப் பறவை இனங்கள் இந்தியாவில் சிக்கிம் மற்றும் டார்ஜிலிங்கில் இருந்து சீனாவில் வடமேற்கு யுனான் வரை காணப்படுகின்றது. இந்தப் பறவையின் குரல் மற்றப் பூங்குருவிகளின் குரலைவிட இனிமைவாய்ந்ததாக உள்ளது இதன் தனிச்சிறப்பு.[1] மரத்தில் வாழும் இவ்வினப் பறவைகள் குறுகிய கால்கள், வால், இறக்கைகள் போன்றவற்றைக் கொண்டிருக்கின்றன. இது காட்டில் சுற்றிப் பறக்க இதன் குறுகிய கால்கள், வால்கள் போன்றவற்றை நன்கு பயன்படுத்துகின்றன. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Alström, Per; Rasmussen, Pamela C.; Zhao, Chao; Xu, Jingzi; Dalvi, Shashank; Cai, Tianlong; Guan, Yuyan; Zhang, Ruiying et al. (2016). "Integrative taxonomy of the Plain-backed Thrush (Zoothera mollissima) complex (Aves, Turdidae) reveals cryptic species, including a new species". Avian Research 7 (1): 1–39. doi:10.1186/s40657-016-0037-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:2053-7166.
- ↑ Adam Vaughan (22 January 2016). "New species of bird discovered in India, China by international team of scientists". TheGuardian. http://www.theguardian.com/environment/2016/jan/22/adele-like-song-leads-scientists-to-identify-bird-as-new-species. பார்த்த நாள்: 22 January 2016.