இமானே கெலிஃப்

அல்ஜீரிய குத்துச் சண்டை வீராங்கனை, ஒலிம்பிக் வாகையர்

இமானே கெலிஃப் (Imane Khelif, அரபு மொழி: إيمان خليف‎, romanized: ʾĪmān Khalīf, ar; பிறப்பு 2 மே 1999) என்பவர் ஒரு அல்ஜீரிய தொழில்முறை குத்துச்சண்டை வீராங்கனையாவார். 2024 கோடை ஒலிம்பிக்கில் 66 கிலோ எடைப்பிரிவிற்கான மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கத்தை வென்றார்.

இமானே கெலிஃப்
2023 அரபு விளையாட்டுகளில் கெலிஃப்
புள்ளிவிபரம்
உயரம்1.78 m
பிறப்பு2 மே 1999 (1999-05-02) (அகவை 25)
பிறந்த இடம்ஐன் சிடி அலி, லாகுவாட், அல்ஜீரியா
நிலைமரபுவழி

2024 ஒலிம்பிக் போட்டிகளில் இத்தாலியின் ஏஞ்சலா கரினியை எதிர்கொண்டு கெலிஃப் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, இவரது பாலினம் குறித்து தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவின. உருசியாவின் தலைமையிலான பன்னாட்டு குத்துச்சண்டை சங்கம் (ஐபிஏ) ஏற்பாடு செய்த 2023 மகளிர் உலக குத்துச்சண்டை வகையர் போட்டியில் பாலினத் தகுதித் தேர்வில் கெலிஃப் தோல்வியுற்றதே இவரது பாலினம் குறித்த தவறான கூற்றுக்களுக்கு தூண்டுகோளாக ஆனது.[1][2] பன்னாட்டு ஒலிம்பிக் குழு ஆகியவை கெலிஃப் ஒலிம்பிக்கில் போட்டியிட தகுதியுடையானவர் என்றும், ஐபிஏவின் முந்தைய தகுதி நீக்கம் "திடீர் மற்றும் தன்னிச்சையானது" என்றும், "எந்தவொரு செயல்முறையும் இல்லாமல்" முடிவு எடுக்கப்பட்டதாகவும் விமர்சித்தன.[3] கெலிஃப்புக்கு எக்ஸ்ஒய் குரோமோசோம்கள் அல்லது அல்லது ஆண்மையியக்குநீர் கூடுதலாக உள்ள அளவில் உள்ளது என்பதற்கான மருத்துவ ஆதாரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.[4] கெலிஃப் பெண்ணாகவேப் பிறந்தார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Imane Khelif and Lin Yu-ting: IOC president Thomas Bach defends boxers competing at Olympics". BBC Sport (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2024-08-03. Archived from the original on 3 August 2024. பார்க்கப்பட்ட நாள் 3 August 2024.
  2. Beacham, Greg (2024-08-09). "Algerian boxer Imane Khelif wins gold at Olympics after enduring abuse fueled by misinformation". PBS News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-10. Those cheering fans have embraced Khelif throughout her run in Paris even as she faced an extraordinary amount of scrutiny from world leaders, major celebrities and others who have questioned her eligibility or falsely claimed she was a man.
  3. "Joint Paris 2024 Boxing Unit/IOC Statement". International Olympic Committee. 2 August 2024. Archived from the original on 1 August 2024. பார்க்கப்பட்ட நாள் 1 August 2024.
  4. Loe, Megan (2024-08-07). "Misinformation spurs controversy around Algerian boxer's gender identity". verifythis.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-12. There is no evidence to support claims that Khelif is a man or a transgender woman.
  5. Peter, Josh. "Algerian boxer Imane Khelif speaks out at Olympics: 'Refrain from bullying'". USA TODAY.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இமானே_கெலிஃப்&oldid=4091095" இலிருந்து மீள்விக்கப்பட்டது