இம்பூர்

இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்

இம்பூர் (Impur) நகரம் இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்திலுள்ள ஒரு சட்டப் பேரவைத் தொகுதியாகும் [1]. அமெரிக்க சமயப்பரப்பு நிறுவனங்கள் மூலம் 1894-ஆம் ஆண்டில் ஒரு சமயப்பரப்பு மையமாக இந்நகரம் நிறுவப்பட்டது. 1897 ஆம் ஆண்டு பேராலயச் சங்கம் நிறுவப்பட்டபோது இந்நகரம் அச்சங்கத்தின் தலைமையிடமாக உருவாகி இன்றுவரை செயல்பட்டு வருகிறது. நாகாலாந்திலுள்ள பேராலயங்களின் தலைமையிடமாக விளங்கும் இத்தலைமையகத்துடன் 159 பேராலயங்கள் இணைந்து செயற்படுகின்றன. மோகோக்சங் நகருக்கு வெளியே 15 கிலோமீட்டர் தொலைவில் இந்நகரம் உள்ளது. இம்பூரில் ஒரு மேல்நிலைப்பள்ளி, மருத்துவமனை மற்றும் ஒரு பேராலயம் ஆகியன இருக்கின்றன. சங்கிராட்சு, மோபங்குக்கெட் மற்றும் இலாங்யங்கு போன்ற கிராமங்கள் இம்பூரைச் சூழ்ந்துள்ளன.

இம்பூர்
Impur
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்நாகாலாந்து
மாவட்டம்மோகோக்சங்
மொழிகள்
 • அலுவல்பூர்வம்ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
வாகனப் பதிவுNL
இணையதளம்nagaland.gov.in

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்பூர்&oldid=2599509" இலிருந்து மீள்விக்கப்பட்டது