இம்ப்ரோஸ்

துருக்கியில் உள்ள ஒரு தீவு

இம்ப்ரோஸ் (Imbros அல்லது İmroz, அதிகாரப்பூர்வமாக Gökçeada 29 சூலை 1970 முதல், [1] [2] ( கிரேக்கம்: Ίμβρος[3] ) என்பது துருக்கியின் மிகப்பெரிய தீவு மற்றும் கனக்கலே மாகாணத்தின் கோக்செடா மாவட்டத்தின் அமைவிடமாகும். இது வடக்கு-வடகிழக்கு ஏஜியன் கடலில், சரோஸ் விரிகுடாவின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. மேலும் இது துருக்கியின் மேற்குப் புள்ளியாகும் ( இன்சிர்பர்னு முனை). இம்ப்ரோஸ் 279 கிமீ2 (108 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் மரங்கள் அடர்ந்த சில பகுதிகள் உள்ளன. [4]

இம்ப்ரோஸ்
உள்ளூர் பெயர்: Gökçeada
İmroz
இம்ப்ரோஸ் மலைகள், மிக உயரமான மலை, அழிந்துபோன கூம்பு வடிவ எரிமலை இலியாஸ் டாக், வலதுபுறம்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Turkey Marmara" does not exist.
புவியியல்
அமைவிடம்ஏஜியன் கடல்
ஆள்கூறுகள்40°09′39″N 25°50′40″E / 40.16083°N 25.84444°E / 40.16083; 25.84444
பரப்பளவு279 km2 (108 sq mi)
உயர்ந்த ஏற்றம்673 m (2,208 ft)
உயர்ந்த புள்ளிஇலியாஸ் டாக் (Προφήτης Ηλίας Profitis Ilias)
நிர்வாகம்
துருக்கி
மக்கள்
மக்கள்தொகை10,106

2020 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கோகியாடா தீவு மாவட்டத்தின் மக்கள் தொகை 10,106 ஆகும். [5] [6] இம்ப்ரோசின் முக்கிய தொழில்கள் மீன்பிடித்தல் மற்றும் சுற்றுலா ஆகும். இத்தீவானது 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில், பெரும்பாலும் 1960 க்குப் பிறகு துருக்கிய நிலப்பரப்பில் இருந்து வந்து குடியேறியவர்களால் நிறைந்தது. பூர்வீக கிரேக்க மக்கள் 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுமார் 300 நபர்களாகக் குறைந்துபோயினர். [7]

நிலவியல் தொகு

புவியியல் தொகு

இம்ப்ரோஸ் முக்கியமாக எரிமலை உள்ள தீவாகும். தீவின் மிக உயர்ந்த மலை இலியாஸ் டாக் இது அழிந்துபோன சுழல் வடிவ எரிமலை ஆகும். [8]

பூகம்பங்கள் தொகு

இம்ப்ரோஸ் வடக்கு அனடோலியன் உரசு முனைக்கு நேரடியாக தெற்கே அமைந்துள்ளது. ஏய்ஜியக்கடல் புவித்தட்டு மற்றும் யூரேசிய நிலத் தட்டுகளுக்கு இடையிலான எல்லைக்கு மிக அருகில் அனதோலியன் தட்டுக்குள் அமைந்துள்ளது. வடகிழக்கு அனதோலியாவில் இருந்து வடக்கு ஏஜியன் கடல் வரை செல்லும் இந்த உரசு முனை மண்டலம், இஸ்தான்புல், இஸ்மிட் மற்றும் இம்ப்ரோஸ் உள்ளிட்ட பல கொடிய பூகம்பங்களுக்கு காரணமாக இருந்தது, மேலும் தீவுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் உள்ளது. 2014 மே 24 அன்று, இம்ப்ரோஸ் 6.9 MW ரிக்டர் அளவில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 30 பேர் காயமடைந்தனர். ஏராளமான பழைய வீடுகள் சேதமடைந்தன. எதிர்காலத்தில் இந்தப் உரசு முனைக் கோட்டில் பெரும் நிலநடுக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. [9] சிறிய கவனிக்கத்தக்க பூகம்பங்கள் பொதுவாக ஏற்படக்கூடியவை. [10]

காலநிலை தொகு

இத்தீவு வெப்பமான மற்றும் வறண்ட கோடை மற்றும் ஈரமான மற்றும் குளிர்ந்த குளிர்காலத்துடன் நடுநிலக்கடல் சார் காலநிலையைக் கொண்டுள்ளது. கோடை காலம் வறண்ட காலம் என்றாலும், கோடையில் ஓரளவு மழை பெய்யும். பனி மற்றும் தரையில் உறைபனி கொட்டுவது குளிர்காலத்தில் நிகழக்கூடியது.

தட்பவெப்ப நிலைத் தகவல், இம்ப்ரோஸ்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 17
(63)
17
(63)
25
(77)
27
(81)
33
(91)
33
(91)
38
(100)
36
(97)
36
(97)
32
(90)
22
(72)
17
(63)
38
(100)
உயர் சராசரி °C (°F) 8
(46)
8
(46)
11
(52)
16
(61)
21
(70)
25
(77)
28
(82)
27
(81)
24
(75)
18
(64)
13
(55)
10
(50)
17.4
(63.4)
தினசரி சராசரி °C (°F) 6.5
(43.7)
6.5
(43.7)
8.5
(47.3)
13.5
(56.3)
17.5
(63.5)
21.5
(70.7)
24.0
(75.2)
24.0
(75.2)
21.0
(69.8)
15.5
(59.9)
11.0
(51.8)
8.0
(46.4)
14.79
(58.63)
தாழ் சராசரி °C (°F) 5
(41)
5
(41)
6
(43)
11
(52)
14
(57)
18
(64)
20
(68)
21
(70)
18
(64)
13
(55)
9
(48)
6
(43)
12.2
(53.9)
பதியப்பட்ட தாழ் °C (°F) -10
(14)
-7
(19)
-7
(19)
1
(34)
3
(37)
7
(45)
13
(55)
12
(54)
7
(45)
1
(34)
-3
(27)
−10
(14)
−10
(14)
சராசரி பொழிவு நாட்கள் 12 13 13 9 6 6 3 2 3 8 12 15 102
சராசரி மழை நாட்கள் 11 12 12 9 6 6 3 2 3 8 12 15 99
சராசரி பனிபொழி நாட்கள் 7 3 2 1 0 0 0 0 0 0 0 1 14
சூரியஒளி நேரம் 105 123 171 219 295 333 366 350 267 195 132 93 2,649
ஆதாரம்: Weatherbase[11]

குறிப்புகள் தொகு

  1. Alexis Alexandris, "The Identity Issue of The Minorities in Greece And Turkey", in Hirschon, Renée (ed.), Crossing the Aegean: An Appraisal of the 1923 Compulsory Population Exchange Between Greece and Turkey, Berghahn Books, 2003, p. 120
  2. "Hüzün Adası: İmroz" பரணிடப்பட்டது 21 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம், Yeniçağ, 12 July 2007
  3.    "Imbros". Dictionary of Greek and Roman Geography. (1854–1857). London: John Murray. 
  4. "Gökçeada", from Britannica Concise Encyclopedia
  5. "Türkiye İstatistik Kurumu". Tuik.gov.tr. Archived from the original on 5 January 2019. பார்க்கப்பட்ட நாள் 31 December 2015.
  6. "Gökçeada Nüfusu – Çanakkale". Nufusune.com. 2020. பார்க்கப்பட்ட நாள் 27 May 2021.
  7. Akyol, Kursat (2 October 2015). "For Turkey's Greek minority, an island school provides fresh hope". பார்க்கப்பட்ட நாள் 4 October 2015.
  8. Kurtuluş, Cengiz; Irmak, T. Serkan; Sertçelik, Ibrahim (2010). "Physical and mechanical properties of Gokceada: Imbros (NE Aegean Sea) Island andesites". Bulletin of Engineering Geology and the Environment 69 (2): 321–324. doi:10.1007/s10064-010-0270-6. 
  9. "M6.9 – 19km S of Kamariotissa, Greece". United States Geological Survey.
  10. "İstanbul ve Civarının Deprem Etkinliğinin Sürekli İzlenmesi Projesi – Marmara Bölgesi" (in துருக்கிஷ்). Deprem.ibb.gov.tr. Archived from the original on 4 March 2016.
  11. "Imroz, Turkey Travel Weather Averages". Weatherbase. பார்க்கப்பட்ட நாள் 26 March 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்ப்ரோஸ்&oldid=3414356" இலிருந்து மீள்விக்கப்பட்டது