இயன் வில்மட்
சர் இயன் வில்மட் (Ian Wilmut)(7 சூலை 1944 - 10 செப்டம்பர் 2023) என்பவர் இங்கிலாந்தினைச் சார்ந்த கருவியலாளர் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மீளுருவாக்கம் மருத்துவத்திற்கான இசுகாட்லாந்து மையத்தின் தலைவராக இருந்தவர் ஆவார். 1996ஆம் ஆண்டில் முதன்முதலில் ஒரு வயதான உடலக உயிரணுவிலிருந்து பாலூட்டியைப் படியெடுப்பு செய்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவராக நன்கு அறியப்பட்டவர். இவர் டோலி என்ற பின்லாந்து டோர்செட் ஆட்டுக்குட்டியினை படியெடுப்பு செய்தவர் ஆவார்.[8][9]
சர் இயன் வில்மட் OBE FRS FMedSci FRSE | |
---|---|
பிறப்பு | இங்கிலாந்து | 7 சூலை 1944
இறப்பு | 10 செப்டம்பர் 2023 | (அகவை 79)
துறை | முளையவியல் |
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் |
|
ஆய்வேடு | கரடியின் விந்தணுவினை பாதுகாத்தல் (1971) |
ஆய்வு நெறியாளர் | கிறித்தோபர் போல்ஜ் |
அறியப்படுவது | டோலி |
விருதுகள் |
|
இணையதளம் crm |
வில்மட் 1999-ல் அரசின் பிரதிநிதியாக கரு வளர்ச்சிக்கான சேவைத்தொடர்பாக நியமிக்கப்பட்டார்.[10] மேலும் 2008 புத்தாண்டு மரியாதையில் நைட் பட்டம் பெற்றார்.[11] இவர், கீத் காம்ப்பெல் மற்றும் சின்யா யாமானாக்கா ஆகியோர் பாலூட்டிகளில் உயிரணு வேறுபாட்டிற்கான இவர்களின் பணிக்காக மருத்துவம் மற்றும் உயிர் அறிவியலுக்கான 2008ஆம் ஆண்டிற்கான சா பரிசைப் பெற்றனர்.[7]
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுவில்மட் இங்கிலாந்தின் வார்விக்ஷயரில் உள்ள ஹாம்ப்டன் லூசியில் 7 சூலை 1944-ல் பிறந்தார். வில்ட்டின் தந்தை, லியோனார்ட் வில்முட், ஐம்பது ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கணித ஆசிரியராக இருந்தார். இறுதியில் இவர் பார்வையற்றவராக மாறினார்.[12] இளைய வில்மட் இசுகார்பரோவில் உள்ள ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இங்கு இவரது தந்தை இவருக்கு ஆசிரியராக இருந்தார். இவரது ஆரம்பக்கால ஆசை கடற்படையில் சேவையாற்றுவதாக இருந்தது. ஆனால் இவரது நிற குருட்டுத்தன்மை காரணமாக இவரால் இப்பணியில் சேர முடியவில்லை. பள்ளிச் சிறுவனாக, வில்மட் வார இறுதி நாட்களில் பண்ணையில் வேலையாளக பணிபுரிந்தார். பண்ணை வேலைக்காரணமாக, இவரது ஆர்வம் விவசாயத்தை நோக்கிச் சென்றதால் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் விவசாயம் படித்தார்.[13]
1966ஆம் ஆண்டில், கிறிஸ்டோபர் போல்ஜின் ஆய்வகத்தில் வில்மட் எட்டு வாரங்கள் பணியாற்றினார். இவர் 1949ஆம் ஆண்டில் அதி உறை குளிரூட்டு நுட்பத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர்.[14] அடுத்த ஆண்டு வில்மட் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற போல்ஜின் ஆய்வகத்தில் சேர்ந்தார். இங்கிருந்து 1971-ல் விந்து உயிரணுவினை அதிகுளிரூட்டு முறை பற்றிய ஆய்வறிக்கையின் காரணமாக முனைவர் பட்டம் பெற்றார். இவர் டார்வின் கல்லூரியில் முதுநிலை மாணவராக இருந்தார்.
பணியும் ஆய்வும்
தொகுமுனைவர் பட்ட ஆய்வினை முடித்த வில்மட், ரோசுலின் நிறுவனத்தில் பாலின உயிரணுக்கள் மற்றும் கரு உருவாக்கத்தில் கவனம் செலுத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.[13]
1996ஆம் ஆண்டில் டோலி என்ற ஆட்டுக்குட்டியை முதன்முதலில் படியாக்கம் செய்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவராக வில்மட் இருந்தார்.[15][16] டோலி 2003-ல் சுவாச நோயால் இறந்தது. 2008-ல் வில்மட், உடல் உயிரணுக்களில் அணுக்கரு பரிமாற்ற நுட்பத்தைக் கைவிடுவதாக அறிவித்தார்.[17] சின்யா யாமானாக்கா உருவாக்கிய மாற்று நுட்பத்தினை பயன்படுத்துவதன் மூலம் எலிகளில் வேறுபட்ட வயதுவந்த தோல் உயிரணுக்களிலிருந்து பலதிறனுடன் கூடிய தண்டு உயிரணுக்கள் பெறப்படுகிறது. இதனால் கரு தண்டு உயிரணுக்களை உருவாக்க வேண்டிய அவசியம் தவிர்க்கப்படுகிறது. இந்த முறை நடுக்குவாதம் போன்ற சீரழிவு நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் அதிக ஆற்றலைக் கொண்டுள்ளது என்று வில்மட் நம்பினார்.[18] வில்மட் டோலியை உருவாக்கிய குழுவிற்குத் தலைமை தாங்கினார். ஆனால் 2006ஆம் ஆண்டில் இவரது சக ஊழியரான கீத் கேம்ப்பெல்[19] டோலியின் பிறப்பைச் சாத்தியமாக்கிய கண்டுபிடிப்பில் "66 சதவீதம்" தகுதியானவர் என்றும், "நான் டோலியை உருவாக்கவில்லை" என்ற கூற்றுத் துல்லியமானது என்றும் ஒப்புக்கொண்டார். டோலியின் உருவாக்கத்தின் போது வில்மட் வகித்த முதன்மை ஆய்வாளர் பதவியுடன் தனது மேற்பார்வைப் பணி ஒத்துப்போகிறது எனத் தெரிவித்தார்.
வில்மட் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் உள்ள மீளுருவாக்கம் மருத்துவத்திற்கான இசுகாட்லாந்து மையத்தில் மதிப்புறு பேராசிரியராக இருந்தார். மேலும் 2008-ல் அறிவியலுக்கான சேவைகளுக்காகப் புத்தாண்டு கௌரவத்தில் நைட் பட்டம் பெற்றார்.
வில்மட் மற்றும் காம்ப்பெல், கொலின் டட்ஜ் உடன் இணைந்து 2000ஆம் ஆண்டில் தி செகண்ட் கிரியேசன் எனும் புத்தகத்தினை வெளியிட்டனர்.[20][21] 2006-ல் வில்முட்டின் புத்தகம் ஆப்டர் டோலி: தி யூச்சு அண்டு மிசுயூசசு ஆப் கூயுமன் குளோனிங் வெளியிடப்பட்டது.[22] இதனை வில்மட் ரோஜர் ஹைபீல்டுடன் இணைந்து எழுதினார்.
இறப்பு
தொகுவில்மட் நடுக்குவாதம் நோயின் காரணமாகச் செப்டம்பர் 10, 2023 அன்று 79 வயதில் இறந்தார்.[21][23]
விருதுகளும் கௌரவங்களும்
தொகு1998-ல் வில்மட் லார்ட் லாயிட் ஆப் கில்கெரான் விருதையும்[24] மற்றும் அமெரிக்கன் அகாதமியின் தங்கத் தகடு விருதையும் பெற்றார்.
வில்மட் 1999ஆம் ஆண்டு பிறந்தநாள் மரியாதைகளில் ஆர்டர் ஆப் தி பிரித்தானிய எம்பயர் (OBE) அதிகாரியாக "கரு வளர்ச்சிக்கான சேவைகளுக்காக" நியமிக்கப்பட்டார். 2002-ல் அரச சமூகத்தின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.[2] இவர் 1999ஆம் ஆண்டில் மருத்துவ அகாதமியின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 2000ஆம் ஆண்டில் எடின்பர்க் அரச சமூக உறுப்பினராகவும் இருந்தார். இவர் 2003-ல் ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் நிறுவன உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]
1997-ல் வில்முட் டைம் பத்திரிக்கையின் நாயகனின் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.[25] அறிவியலுக்கான சேவைகளுக்காக 2008ஆம் ஆண்டு புத்தாண்டு கௌரவத்தில் இவருக்கு நைட் பட்டம் வழங்கப்பட்டது.
வெளியீடுகள்
தொகு- Wilmut, Ian (2000). The Second Creation: The Age of Biological Control by the Scientists Who Cloned Dolly.
- Wilmut, Ian (2006). After Dolly: The Uses and Misuses of Human Cloning.
மேற்கோள்கள்
தொகு- ↑ Anon (1999). "Ian Wilmut FMedSci". acdmedsci.ac.uk. London: Academy of Medical Sciences, United Kingdom. Archived from the original on 7 October 2016. பார்க்கப்பட்ட நாள் 18 August 2016.
- ↑ 2.0 2.1
{{cite web}}
: Empty citation (help) --{{cite web}}
: Empty citation (help) - ↑ 3.0 3.1 "File relating to Ian Wilmut's Fellowship of the Royal Society of Edinburgh, 2000–2005". பார்க்கப்பட்ட நாள் 11 September 2023.
- ↑ "Ian Wilmut Ernst: Schering Prize 2002". Schering Stiftung. பார்க்கப்பட்ட நாள் 12 September 2023.
- ↑ 5.0 5.1 Anon. "EMBO Profile: Ian Wilmut". people.embo.org.
- ↑ "Paul Ehrlich Foundation: Prize Winners: 2005 Wilmut". Goethe-Universität Frankfurt. பார்க்கப்பட்ட நாள் 12 September 2023.
- ↑ 7.0 7.1 "The 2008 Prize in Life Science & Medicine". Shaw Prize Foundation. பார்க்கப்பட்ட நாள் 3 October 2022.
- ↑ Campbell, K. H. S.; McWhir, J.; Ritchie, W. A.; Wilmut, I. (1996). "Sheep cloned by nuclear transfer from a cultured cell line". Nature 380 (6569): 64–66. doi:10.1038/380064a0. பப்மெட்:8598906. Bibcode: 1996Natur.380...64C.
- ↑ Schnieke, A. E.; Kind, A. J.; Ritchie, W. A.; Mycock, K.; Scott, A. R.; Ritchie, M.; Wilmut, I.; Colman, A. et al. (1997). "Human Factor IX Transgenic Sheep Produced by Transfer of Nuclei from Transfected Fetal Fibroblasts". Science 278 (5346): 2130–2133. doi:10.1126/science.278.5346.2130. பப்மெட்:9405350. Bibcode: 1997Sci...278.2130S.
- ↑ "Times Higher Education: Queen's Birthday Honours". http://www.timeshighereducation.co.uk/story.asp?storyCode=146682§ioncode=26.
- ↑ "Dolly creator heads Scots honours". http://news.bbc.co.uk/1/hi/scotland/7163209.stm.
- ↑ Berry, S. (2001). "Profile – Ian Wilmut". Trends in Biotechnology 19 (12): 525–526. doi:10.1016/S0167-7799(01)01842-X. https://archive.org/details/sim_trends-in-biotechnology_2001-12_19_12/page/525.
- ↑ 13.0 13.1
{{cite web}}
: Empty citation (help) - ↑ Rall, W. (2007). "Ernest John Christopher Polge FRS (1926–2006)". Cryobiology 54 (3): 241–242. doi:10.1016/j.cryobiol.2007.04.001.
- ↑ "The Third Culture: Ian Wilmut" இம் மூலத்தில் இருந்து 2009-01-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090113060444/http://www.edge.org/3rd_culture/bios/wilmut.html.
- ↑ Giles, J.; Knight, J. (2003). "Dolly's death leaves researchers woolly on clone ageing issue". Nature 421 (6925): 776. doi:10.1038/421776a. பப்மெட்:12594470. Bibcode: 2003Natur.421..776G.
- ↑ Wilmut, I.; Beaujean, N.; De Sousa, P. A.; Dinnyes, A.; King, T. J.; Paterson, L. A.; Wells, D. N.; Young, L. E. (2002). "Somatic cell nuclear transfer". Nature 419 (6709): 583–586. doi:10.1038/nature01079. பப்மெட்:12374931. Bibcode: 2002Natur.419..583W. https://hal.archives-ouvertes.fr/hal-02610622/file/Wilmut%202002%20Nature.pdf.
- ↑ Highfield. "Dolly creator Prof Ian Wilmut shuns cloning". https://www.telegraph.co.uk/earth/main.jhtml?xml=/earth/2007/11/16/scidolly116.xml.
- ↑ Ian Wilmut (2012). "Keith Campbell (1954–2012)". Science 338 (6114): 1553. doi:10.1126/science.1233495. பப்மெட்:23258883. Bibcode: 2012Sci...338.1553W.
- ↑ The Second Creation: Dolly and the age of biological control பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0674005864
- ↑ 21.0 21.1 .
- ↑ After Dolly: The Uses and Misuses of Human Cloning பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0316724696
- ↑ Williams, Craig (11 September 2023). "Professor Sir Ian Wilmut: Dolly the sheep creator dies aged 79". The Herald. https://www.heraldscotland.com/news/23781225.professor-sir-ian-wilmut-dolly-sheep-creator-dies-aged-79/.
- ↑ "Foundation News". Technology Innovation and Society (Winter 1998): 14. 1998. http://www.foundation.org.uk/journal/pdf/archive/1998_14_04.pdf.
- ↑ Nash, Madeleine (29 December 1997). "Dr Ian Wilmut...and Dolly". Time. Archived from the original on 4 January 2007. பார்க்கப்பட்ட நாள் 16 April 2009.
வெளி இணைப்புகள்
தொகு- விக்கிமேற்கோளில் இயன் வில்மட் சம்பந்தமான மேற்கோள்கள்: