முதன்மை பட்டியைத் திறக்கவும்

இயல்பியம் (Naturalism) என்பது, நாடகம், திரைப்படம், இலக்கியம் ஆகியவற்றில் நம்பத்தகுந்த, அன்றாட மெய்மையைப் பிரதி செய்ய விழையும் ஒரு கலை இயக்கம் ஆகும். இது, அதிக குறியீட்டுத் தன்மை, கருத்தியல்சார்பு, இயல்புகடந்த உருவகம் என்பவற்றை உள்ளடக்கும் புத்தார்வக் கற்பனையியம் (Romanticism), அடிமன வெளிப்பாட்டியம் போன்ற இயக்கங்களுக்கு எதிரானது.

இயல்பிய எழுத்தாளர்கள், சார்லஸ் டார்வினுடைய படிமலர்ச்சிக் கொள்கையினால் ஈர்க்கப்பட்டனர். அவர்கள், ஒருவருடைய பிறப்பும், சமூகச் சூழலும் அவருடைய இயல்பைத் தீர்மானிக்கின்றன என்று நம்பினர். உலகில் பொருட்கள் எப்படி இருக்கின்றனவோ அப்படியே விபரிக்க முயலும் மெய்மையியத்துக்கு மாறாக, இயல்பியம், பாத்திரங்களின் செயல்பாடுகளுக்கான காரணிகளையும் அறிவியல் அடிப்படியில் எடுத்துக்காட்ட முயல்கிறது. இயல்பியப் படைப்புக்களில், அருவருப்பான, கீழ்த்தரமான விடயங்களும் இருக்கக்கூடும். இயல்பிய ஆக்கங்கள், வறுமை, இனவாதம், தப்பபிப்பிராயம், நோய், விபச்சாரம், இழிநிலை ஆகியவை உள்ளிட்ட வாழ்வின் இருண்ட பகுதிகளையும் வெளிப்படுத்துகின்றன. இவை பெரும்பாலும் எதிர்மறை நோக்குக் கொண்டவையாக உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயல்பியம்&oldid=1478336" இருந்து மீள்விக்கப்பட்டது