இரங்கநாயகி ராஜகோபாலன்
இரங்கநாயகி ராஜகோபாலன் (Ranganayaki Rajagopalan) (பிறப்பு: 1932 மே 3- இறப்பு: 2018 செப்டம்பர் 20 ) [1] இவர் ஓர் கலைமாமணி விருது பெற்ற வீணை இசைக்கலைஞராவார். கருநாடக இசைக்காக இவர் ஆற்றிய பங்கிற்காக இந்தியக் குடியரசுத்தலைவரால் சங்கீத நாடக அகாதமி விருதினையும் பெற்றுள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
தொகுதமிழ்நாட்டின் பூங்குளத்தில் 1932 இல் பிறந்த இரங்கநாயகி ராஜகோபாலன் மறைந்த வீணை இசைக் கலைஞர் சங்கீத கலாநிதி காரைகுடி சாம்பசிவ ஐயரின் மூத்த சீடர்களில் ஒருவராவார். 1952 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் விருதை வென்ற முதலாவது இசைக்கலைஞர் சாம்பசிவ ஐயர் ஆவார். இசை, நடனம், நாடகத்திற்கு இந்தியாவில் சங்கீத நாடக அகாதமியில் வழங்கப்படும் மிக உயரிய விருது இதுவாகும் [2]. இரங்கநாயகி தனது இரண்டு வயதிலேயே காரைகுடி சாம்பசிவ ஐயரிடம் பயிற்சி மேற்கொண்டார். வீணையில் தனது குருவிடமிருந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சி பெற்றார். 1958 இல் சாம்பசிவ ஐயர் இறக்கும் வரை கடுமையான குருகுல முறையில் பயிற்சியினைப் பெற்றார்.[3][4]
தொழில்
தொகுஇவரது முதல் இசை நிகழ்ச்சி சென்னையில் உள்ள இந்திய தேசிய காங்கிரசு கட்டிடத்திற்கு நிதி பெறுவதற்காக நடத்தப்பட்டது. காரைகுடியைச் சேர்ந்த மூத்த காங்கிரசுகாரர் சுப்பிரமணியத்தின் தலைமையின் கீழ் காரைகுடியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 1940 ஆம் ஆண்டில் எட்டு வயதாக இருந்தபோது .அனைத்திந்திய வானொலி ஒலிபரப்பில் தொடங்கி, இவர் தனது குருவுடன் அவரது அனைத்து இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். பதினொரு வயதிலிருந்தே இவர் சுயாதீனமான பாடல்களைக் கொடுக்கத் தொடங்கினார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நூற்றுக்கணக்கான பாடல்களை இவர் வழங்கியுள்ளார். 1970 ஆம் ஆண்டில், சென்னை, மியூசிக் அகாதமியால் சிறந்த வீணைக் கலைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரங்கநாயகி தனது குருவின் பாரம்பரிய பாணியை கடைபிடித்ததற்காக பாராட்டப்படுகிறார். 1978 மற்றும் 1988க்கு இடையில் சென்னை மியூசிக் அகாதமி மூலம் வீணை வகுப்புகளை மேற்கொண்டார். 1993 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்காக இவர் வீணை வகுப்புகளை நடத்தினார்.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
தொகு1952 ஆம் ஆண்டில், சென்னை மியூசிக் அகாதமியின் (பொதுவாக மியூசிக் அகாதமி என்று அழைக்கப்படுகிறது) 26வது வெள்ளி விழா கொண்டாட்டங்களுக்கு தனது குரு சாம்பசிவ ஐயருடன் இசை நிகழ்ச்சியினை நடத்தினார். மேலும் சென்னையின் முன்னாள் ஆளுநரான சிறீ பிரகாசாவால் வெள்ளி கலசம் இவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. 1970ஆம் ஆண்டில், மியூசிக் அகாதமியால் சிறந்த வீணைக் கலைஞராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த விழாவில் அப்போதைய மைசூர் ஆளுநர் தர்ம வீரர் மூலம் இவருக்கு வீணை பரிசளிக்கப்பட்டது. 1979 ஆம் ஆண்டில், அப்போதைய தமிழக முதல்வர் எம். ஜி. ராமச்சந்திரன் "கலைமாமணி" என்ற பட்டத்தை இவருக்கு வழங்கினார். 1984 சனவரி 26, அன்று, பாலசுப்பிரமணிய சபையின் ஆதரவுடன் நடத்தப்பட்ட ஒரு பாராட்டு விழாவில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் (1979) மற்றும் சிறீமதி [[ருக்மிணி தேவி அருண்டேல் [[(1984) ஆகியோரால் "வீணை விசாரதா" என்ற பட்டம் வழங்கப்பட்டது. . திருமதி. ரங்கநாயகி ராஜகோபாலன் கர்நாடக கருவி இசையில் ஆற்றிய பங்களிப்புக்காக சங்கீத நாடக அகாதமி வழங்கிய சங்கீத நாடக அகாதமி விருது|சங்கீத நாடக அகாதமி விருதினைப்]] பெற்றுள்ளார்.[5]
இவரது தொகுப்பு யுனெஸ்கோ பாரம்பரிய இசைத் தொகுப்பின் ஒரு பகுதியாகும்.[6]
குறிப்புகள்
தொகு- ↑ "Ranganayaki Rajagopalan". 25 September 2018. Archived from the original on 12 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 18 பிப்ரவரி 2020.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "SNA: List of Sangeet Natak Akademi Ratna Puraskarwinners (Akademi Fellows)". SNA Official website. Archived from the original on 4 March 2016.
- ↑ Holden. "Sounds Around Town". https://www.nytimes.com/1993/04/23/arts/sounds-around-town-109593.html. பார்த்த நாள்: July 20, 2010.
- ↑ Jeff Todd Titon (2008). Worlds of Music: An Introduction to the Music of the World's Peoples: An Introduction to the Music of the World's Peoples. Cengage Learning. pp. 289–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-534-59539-5. பார்க்கப்பட்ட நாள் 19 July 2013.
- ↑ {{Cite web|url=https://sangeetnatak.gov.in/sna/citation_popup.php?id=515&at=2[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "South India: Ranganayaki Rajagopalan—Continuity in the Karaikudi Vina Style". Smithsonian Folkways Recordings.