இரங்க மலை (Ranga Malai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கரூர் தேசிய நெடுஞசாலையில் அமைந்துள்ள ஒரு கூம்பு வடிவமான மலை ஆகும். அரவக்குறிச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் பாதையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இம்மலை அமைந்துள்ளது.[1] இரங்க மலை சுமார் 3500 அடி உயரம் கொண்டதாகவும்,[2] இம்மலையில் மல்லீசுவரர் கோவில் என்று அழைக்கப்படும் சிவன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. அளவில் சிறியதான இக்கோவிலுக்கு அர்ச்சகர்கள் ஒவ்வொரு நாளும் காலையில் மலை மேல் ஏறி மாலை வரை இருந்து திருப்பணிகளை முடித்து விட்டு இறங்கி வருகின்றனர். மலையின் உச்சியில் விளக்கு கம்பம் உள்ளது. செங்குத்தான இம்மலைக்கு முறையான படிக்கட்டுக்கள் அமைக்கப்படவில்லை என்பதால் மலை ஏறுவது சற்று கடினமாகும். ஆனாலும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் மலைக்குச் சென்று மல்லீசுவரரை வழிப்பட்டு வருகின்றனர். மலையில் நல்ல மூலிகைகள் இருப்பதால் இங்கு தங்கினால் நோய்கள் நீங்கும் என நம்புகின்றனர். பழமையான இக்கோவில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "ரங்கமலை மல்லீஸ்வரர் கோயில் பற்றி உங்களுக்குத் தெரியுமா? - Dhinasari Tamil". dhinasari.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-06-26. பார்க்கப்பட்ட நாள் 2023-04-29.
  2. துரை.வேம்பையன். "குழந்தைகள், ஆன்மிக பிரியர்களைக் குஷிப்படுத்தும் ரங்கமலை!". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2023-04-29. {{cite web}}: External link in |website= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரங்க_மலை&oldid=3702614" இலிருந்து மீள்விக்கப்பட்டது