இரசீத் சூன்யாயெவ்
இரசீத் அலீயெவிச் சூன்யாயெவ் (Rashid Alievich Sunyaev) (Cyrillic: Раши́д Али́евич Сюня́ев; பிறப்பு: மார்ச்சு 1, 1943, தாழ்சுகண்ட், சோவியத் ஒன்றியம்) ஒரு தாதார் இனவழி சோவியத் உருசிய வானியற்பியலாளர் ஆவார். இவர் மாஸ்கோ இயற்பியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கல்வி பயின்று தன் அறிவியல் முதுவர் பட்டம் பெற்றார். இவர் அந்நிறுவனத்தில் 1974 இல் பேராசிரியர் ஆனார். இவர் உருசிய அறிவியல் கழகத்தின் உயர் ஆற்றல் வானியற்பியல் துறையின் தலைவராக விளங்கினார். இவர் 1992 இல் இருந்து அக்கல்விக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் தலைமை அறிவியலாளராகத் திகழ்ந்தார். மேலும் இவர் செருமனி நாட்டு கார்ச்சிங்கில் இருந்த மேக்சு பிளாங்க் வானியற்பியல் நிறுவனத்தின் இயக்குநராகவும் 1996 இல் இருந்து இருந்துள்ளார்.
இரசீத் சூன்யாயெவ் Rashid Sunyaev | |
---|---|
சூன்யாயெவ், 2010 | |
பிறப்பு | 1 மார்ச்சு 1943 தாழ்சுகண்ட், உசுபெக் சோவியத் ஒன்றியம், சோவியத் ஒன்றியம் |
வாழிடம் | மூனிச், செருமனி |
தேசியம் | உருசியர், செருமானியர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | உருசிய அறிவியல் கல்விக்கழகம், மேக்சு பிளாங்க் வானியற்பியல் நிறுவனம் |
கல்வி கற்ற இடங்கள் | மாஸ்கோ இயற்பியல் தொழில்நுட்ப நிறுவனம் (அறி, மு), மாஸ்கோ அரசு பல்கலைக்கழகம் (முனைவர்) |
அறியப்படுவது | அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சு |
விருதுகள் | கிங் பைசல் பன்னாட்டு இயற்பியல் பரிசு (2009), கைன்மன் பரிசு (2003), கிராபோர்டு பரிசு (2008), கையோட்டோ பரிசு (2011) |
தகைமைகளும் விருதுகளும்
தொகு- 1984 இல் இருந்து உருசிய அறிவியல் கல்விக்கழக உறுப்பினர்.
- புரூனோ உரோசி பரிசு, 1988 (for his contributions to understanding cosmic X-ray sources, especially the structure of accretion disks around black holes, the X-ray spectra of compact objects, and the Mir-based discovery of hard X-ray emission from supernovae 1987A)[1]
- 1991 இல் இருந்து அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழக அயல்நாட்டு இணையுறுப்பினர்.
- அரசு வானியல் கழகப் பொற்பதக்கம், 1995[2]
- புரூசு பதக்கம், 2000 (வானியலில் சிறந்த வாழ்நாள் ஆராய்ச்சிக்காக)[3][4]
- உருசியக் கூட்டாட்சி அரசு பரிசு, 2000 (for research of Black Holes and Neutron stars with GRANAT X-ray and gamma-ray astrophysical observatory in 1990-1998)[5]
- அலெக்சாந்தர் பிரீடுமன் பரிசு, உருசிய அறிவியல் கல்விக்கழகம், 2002( for the publications on the reduction of brightness of cosmic microwave background radiation in the direction of clusters of galaxies)[5]
- கைன்மன் பரிசு, 2003 ( வானியற்பிலில் செய்த சிறந்த பணிக்காக).[6]
- குரூபர் அண்டவியல் பரிசு, 2003 (அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சுத் தன்மையும் இடைநிலைப் பொருளின்பால் அதன் ஊடாட்டமும் பற்றிய முன்னோடி ஆய்வுக்காக). இது புதிய அண்டப்படிமங்கள் தோன்ற வழிவகுத்த்து.[7]
- 2003 இல் இருந்து இலியோபோல்டினாவில் உள்ள செருமானிய இயற்கை அறிவியல் கல்விக்கழக உறுப்பினர்.
- 2004 இல் இருந்து அரசு நெதர்லாந்து கலை, அறிவியல் கல்விக்கழக அயல்நாட்டு உறுப்பினர்.[8]
- 2007 இல் இருந்து அமெரிக்க மெய்யியல் கழகப் பன்னாட்டு உறுப்பினர்.
- உயர் ஆற்றல் வானியற்பியலிலும் அண்டவியலிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் செய்ததற்காக 2008 இல் கிராபோர்டு பரிசு.[9]
- என்றி நோரிசு விரிவுரைத் தகைமை, 2008[10]
- கார்ல் சுவார்சுசைல்டு பதக்கம், செருமனி வானியல் கழகம் (2008).[11]
- 2009 இல் இருந்து அரசு கழக அயல்நாட்டு உறுப்பினர்
- கிங் பைசல் பன்னாட்டு அறிவியல் (இயற்பியல்) பரிசு (2009)
- கையோட்டோ பரிசு (2011)[12]
- பெஞ்சமின் பிராங்ளின் பதக்கம், இயற்பியல், பிராங்ளின் நிறுவனம் (2012)[13]
- அய்ன்சுட்டீன் பேராசிரியத் தகைமை (2014) (சீன அறிவியல் கல்விக்கழகம்)
அறிவியல் எழுத்து
தொகு- Yudhijit Bhattacharjee: In the Afterglow of the Big Bang - Toiling behind the Iron Curtain under a tough mentor, a Russian astrophysicist uncovered secrets of the universe that have led to discoveries 4 decades later, in: அறிவியல், 1 January 2010, Vol. 327, Page 26
மேற்கோள்கள்
தொகு- ↑ "HEAD AAS Rossi Prize Winners". Archived from the original on 2008-04-06. பார்க்கப்பட்ட நாள் 2017-04-19.
- ↑ Winners of the Gold Medal of the Royal Astronomical Society
- ↑ 2000 Bruce Medalist
- ↑ 2000 ASP Annual Award Winners
- ↑ 5.0 5.1 Awards and best publications. ICR RAS
- ↑ "Dannie Heineman Prize for Astrophysics". Archived from the original on 2008-02-28. பார்க்கப்பட்ட நாள் 2017-04-19.
- ↑ 2003 Gruber Cosmology Prize
- ↑ "Rashid Sunyaev". Royal Netherlands Academy of Arts and Sciences. Archived from the original on 14 February 2016. பார்க்கப்பட்ட நாள் 14 February 2016.
- ↑ "The Crafoord Prize in Mathematics and Astronomy 2008". Archived from the original on 2012-03-30. பார்க்கப்பட்ட நாள் 2017-04-19.
- ↑ "Henry Norris Russell Lectureship". Archived from the original on 2008-02-28. பார்க்கப்பட்ட நாள் 2017-04-19.
- ↑ "Recipients of the Karl Schwarzschild Medal". Archived from the original on 2011-05-24. பார்க்கப்பட்ட நாள் 2008-09-24.
- ↑ "Kyoto Prize for Russian astronomer". Archived from the original on 2012-09-06. பார்க்கப்பட்ட நாள் 2017-04-19.
- ↑ "Benjamin Franklin Medal in Physics". Franklin Institute. 2012. Archived from the original on 2013-06-26. பார்க்கப்பட்ட நாள் 2013-04-07.
வெளி இணைப்புகள்
தொகு- Syunyaev Rashid Alievich. Site of Russian Academy of Sciences
- Biography பரணிடப்பட்டது 2011-08-23 at the வந்தவழி இயந்திரம் at the website of Tatarstan Academy of Sciences