இரச்சகொண்டா

இரச்சகொண்டா கோட்டை (Rachakonda Fort ) என்பது இந்தியாவின் தெலங்காணாவின் யாதத்ரி புவனகிரி மாவட்டத்தில் இரச்சகொண்டா என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்று கோட்டையாகும். [1] இது கி.பி 14ஆம் நூற்றாண்டில் இரச்செர்லா நாயக்க மன்னன் அனபோத நாயக்கன் என்பவனால் கட்டப்பட்டது. அதுவரை இரச்செர்லா நாயக்கர்கள் தங்கள் தலைநகரான அனுமகல்லுவில் ( தற்போதைய அமங்கல் ) இருந்தனர். பொ.ச. 1360ஆம் ஆண்டில், தலைநகரத்தை அனபோத நாயக்கன் அனுமகல்லுவிலிருந்து இரச்சகொண்டாவுக்கு மாற்றினான். அங்கு அவன் ஒரு வலுவான கோட்டையைக் கட்டினான். [2]

இரச்சகொண்டா
Map
பொதுவான தகவல்கள்
நாடுஇந்தியா
நிறைவுற்றதுபொ.ச.1360

நிர்வாக வசதிக்காக அனபோத நாயக்கன் இராச்சியத்தை இரண்டாகப் பிரித்தான். அவனது சகோதரன் மாதநாயக்கன் தேவரகொண்டாவிலிருந்து ஆட்சி செய்தான். பொ.ச. 1430 இல் இரச்செர்லா நாயக்கர்கள் பாமினி சுல்தானகத்திடம் தங்களின் கட்டுப்பாட்டை இழந்தனர். ஆனாலும் பொ.ச. 1475 வரை தேவரகொண்டாவை ஆட்சியை தக்கவைத்துக் கொண்டிருந்தனர். இறுதியாக இரச்செர்லா இராச்சியம் முடிவுக்கு வந்து, அவர்கள் விஜயநகரப் பேரரசிடம் சேர்ந்தனர்.

தெற்கில் பிரதான நுழைவாயில்
கோட்டை மலையின் நுழைவாயில்களில் ஒன்று

மேற்கோள்கள்

தொகு
  1. Borah, Prabalika M. (29 August 2015). "Let's get away: Rachakonda" – via www.thehindu.com.
  2. Reddy, T. Karnakar (9 October 2014). "Tourists can't ask for more at Rachakonda!" – via www.thehindu.com.

மேலும் படிக்க

தொகு
  • "Andhra Vijana Sarvasvam" Telugu Samskriti Volume I, in Telugu language published by the Telugu University at Hyderabad. The article on Rachakonda Kingdom was authored by Mallampalli Somasekhara Sarma an Indian historian who wrote the "Forgotten History of Telugu Kingdoms"
  • "Velugoativari Vamsavali" a compendium of the Velugoti family of Venkatagiri from the Mackenzie collection.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rachakonda fort
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இரச்சகொண்டா&oldid=3147162" இலிருந்து மீள்விக்கப்பட்டது