அமங்கல்
அமங்கல் (Amangal) என்பது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சியாகும். மேலும் இது கல்குருத்தி மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ளது. இது கந்துகூர் வருவாய் பிரிவின் அமங்கல் மண்டலத்தில் அமைந்துள்ளது. [1]
அமங்கல் | |
---|---|
நகராட்சி | |
ஆள்கூறுகள்: 16°51′00″N 78°31′59″E / 16.850°N 78.533°E | |
நாடு | ![]() |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | ரங்காரெட்டி |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 18,000 |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 509321 |
தொலைபேசி இணைப்பு எண் | 08543 |
வாகனப் பதிவு | டிஎஸ்-07 |
அண்மை நகரம் | ஐதராபாத்து |
மக்களவைத் தொகுதி | நாகர்கர்னூல் |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | கல்குருத்தி |
தட்பவெப்ப நிலை | வெப்பம் (கோப்பென்) |
நிலவியல் தொகு
அமங்கல் 16.850 ° வடக்கிலும் 78.533 ° கிழக்கிலும் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் 507 மீட்டர் (1,663 அடி) ஆகும்.
வரலாறு தொகு
இரச்செர்லா பத்மநாயக்க வம்சம் 13ஆம் நூற்றாண்டில் அமங்கலை அதன் தலைநகராக ஆட்சி செய்தது. [2] பத்மநாயக்கன் வம்சம் காக்கத்திய மன்னர்களின் நிலப்பிரபுக்களாக இருந்தனர். இரச்செர்லா நாயக்கர்கள் தங்கள் தலைநகரான அனுமகல்லுவில் (அமங்கல்) இருந்தனர். இரச்செர்லா பத்மநாயக்க வம்சத்தின் முன்னோடி முதலாம் சிங்கமநாயக்கன் என்பவனாவான். அவன் தனது இராச்சியத்தை அமங்கலில் இருந்து ஆட்சி செய்தான். அதைத் தொடர்ந்து, அவனது வாரிசுகள் இரச்சகொண்டா மற்றும் தேவரகொண்டாவுக்கு மாறினர். பொ.ச. 1360ஆம் ஆண்டில், தலைநகரத்தை அனபோத நாயக்கன் என்பவன் அனுமகல்லுவிலிருந்து இரச்சகொண்டாவுக்கு மாற்றினான். அங்கு அவன் ஒரு வலுவான கோட்டையைக் கட்டினான். நிர்வாக வசதிக்காக அனபோத நாயக்கன் இராச்சியத்தை இரண்டாகப் பிரித்தான். அவனது சகோதரன் மாதநாயக்கன் தேவரகொண்டாவிலிருந்து ஆட்சி செய்தான்
மேற்கோள்கள் தொகு
- ↑ "Rangareddy district". Government of Telangana இம் மூலத்தில் இருந்து 13 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161013221458/http://newdistrictsformation.telangana.gov.in/uploads/gos-circulars/1476130761931250.Rangareddy.pdf.
- ↑ "Telangana history in Telugu రేచర్ల పద్మనాయకులు | Recruitment Topper" (in en-US). Recruitment Topper. 2016-04-06. http://www.recruitmenttopper.com/telangana-history-in-telugu-recharla-padma-nayakulu/4157/.