இரச்சனா திங்ரா

இந்திய அரசியல்வாதி

இரச்சனா திங்ரா (Rachna Dhingra) (பிறப்பு 3 செப்டம்பர் 1977) போபாலில் போபால் பேரழிவு சோகத்திலிருந்து தப்பிப்பிழைத்தவர்களுடன் பணிபுரியும் ஒரு சமூக ஆர்வலர் ஆவார். யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் மீத்தைல் ஐசோ சயனேட் எனும் நச்சு வளிமம் கசிந்ததினால் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். உடனடி உயிரிழப்பாக ஏறத்தாழ 2,259 பேர் நச்சு வளிமம் தாக்கி இறந்தனர். அதற்கடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 8,000 பேர் இறந்தனர். இன்னும் 8,000 பேர் வளிமத்தின் தாக்கத்தினால் ஏற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். இவர் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும் தொகு

இரச்சனா திங்ரா, தனது பெற்றோரின் ஒரே குழந்தையாக தில்லியில் பிறந்தார். இவரது பெற்றோர் முக்கியமாக பெண் குழந்தை பிறந்ததால் இவருக்கு 3 மாத வயதிலேயே விவாகரத்து செய்தனர். 1992 முதல் மறுமணம் செய்து கொள்ள அமெரிக்கா செல்லும் வரை இவரது தாயார் இவரை தனியாக வளர்த்து வந்தார். இந்த நேரத்தில் இரச்சனாவுக்கு 18 வயது. அமெரிக்காவின் ஆன் ஆர்பரின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ரோஸ் வணிகப் பள்ளியில் வணிக நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு, இவர் அசெசென்ஞ்சர் நிறுவனத்தில் வணிக ஆலோசகராக சேர்ந்தார். [1] 2002 ஆம் ஆண்டில் இவர் தனது வேலையை விட்டு விலகினார். சனவரி 2003இல், போபால் நச்சு வாயுக் கழிவிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு ஆதரவாக போபால் வந்தார்.

சமூகப் பணி தொகு

மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில், இரச்சனா இந்திய மேம்பாட்டுக்கான சங்கம் என்ற ஒரு மாணவர் குழுவில் சேர்ந்தார். அது ஏற்கனவே போபால் பேரழிவில் இருந்து தப்பியவர்களின் நலனுக்காக உழைத்து வந்தது.[2] ஆன் ஆர்பரில், இரச்சனா மற்ற தொண்டர்களுடன் சேர்ந்து, போபால் நச்சு வாயுக் கழிவிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களின் காரணத்தை ஆதரிப்பதற்காக மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள மற்ற இரசாயன பேரழிவுகளிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களை ஆதரிப்பதற்காக 'போபால் தகவல் மற்றும் செயல் குழு' என்ற குழுவை அமைத்தார்.[3] இரச்சனா போபால் தகவல் மற்றும் செயல் குழுவின் மூலம் போபால் பேரழிவிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களுக்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இவருடைய குறிக்கோள், உயிர் பிழைத்தவர்களுக்கு உரிய இழப்பீட்டைப் பெறுவது, சுத்தமான குடிநீருக்கான முயற்சிகளைத் தொடங்குவது, வேலைவாய்ப்பை உருவாக்குதல் , உள்ளூரிலும், உலகளாவிய சமூகங்களைத் திரட்டுவது. 2001 குசராத்து பூகம்பம், 2002 குசராத்து கலவரங்களுக்கான நிவாரண முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் இவர் இருந்தார்.

அரசியல் வாழ்க்கை தொகு

இரச்சனா ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினரானார். மேலும், மத்தியப் பிரதேசத்தின் போபாலில் இருந்து 2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். மத்தியப் பிரதேசத்தில் போட்டியிட்ட கட்சியின் 28 வேட்பாளர்களில் இவரும் ஒருவர்.[4]

விருதுகள் தொகு

எரிவாயு துயரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கப் பிரச்சாரம் செய்வதற்காக, 14 சனவரி 2011 அன்று, இந்தியா டுடே குழுமத் தலைவரும் தலைமை ஆசிரியருமான அருண் பூரியிடமிருந்து பொது சேவை பிரிவில் "இந்தியா டுடே ஆண்டின் சிறந்தவர்" விருதைப் பெற்றார்.[5] [6]

பெருநிறுவன குற்றங்களை எதிர்கொள்வதில் இவரது தைரியத்துக்காக 2019 ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி ஜெர்மனியின் பெர்லினில் சர்வதேச குற்றவியல் புளூ பிளானட் விருதையும் பெற்றார்.[7] [8]

மேற்கோள்கள் தொகு

  1. "One For India 2011 – Jeevansaathis or AID Friends for Life | AID India". Oneforindia.org. பார்க்கப்பட்ட நாள் 2014-03-20.
  2. "Archived copy". Archived from the original on 2014-03-15. பார்க்கப்பட்ட நாள் 2014-03-15.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. http://www.oneforindia.org/2011/files/people/js.htm
  4. "Archived copy". Archived from the original on 7 April 2014. பார்க்கப்பட்ட நாள் 6 April 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. "India Today Woman Summit & Awards 2009". Indiatoday.in. Archived from the original on 2014-03-15. பார்க்கப்பட்ட நாள் 2014-03-20.
  6. "Rachna Dhingra wins an India Today Woman Award :: The Bhopal Medical Appeal :: Funding free clinics for Bhopal survivors". Bhopal.org. 2011-01-17. Archived from the original on 2 February 2011. பார்க்கப்பட்ட நாள் 2014-03-20.
  7. "The 2019 International ethecon Blue Planet Award honored human rights and environmental activist Rachna Dhingra and Sambhavna Trust". ethecon.org.
  8. "ethecon Foundation Honours Human Rights Activist Rachna Dhingra for Her Work to Bring Justice for Bhopal". International Campaign for Justice in Bhopal.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரச்சனா_திங்ரா&oldid=3285277" இலிருந்து மீள்விக்கப்பட்டது