இரட்டை கூம்பு உயிரணு

இரண்டு கூம்பு உயிரணுக்கள் (Double cone) என அழைக்கப்படு இரட்டை கூம்புகள் (டி.சிக்கள்) எனப்படுவது சவ்வு மூலம் இணைந்த இரண்டு கூம்பு செல்களைக் குறிக்கும். இவை வண்ணங் கண்டறிதலில் ஒளி/மின் ஆற்றலில் ஒன்றாக இணைந்து செயல்படுகின்றன.[1] மீன், ஊர்வன, பறவைகள் மற்றும் வாத்தலகி போன்ற மோனோட்ரீம்களில் இவை மிகவும் பொதுவாகக் காணப்படும் கூம்பு உயிரணு வகையாக உள்ளன. மேலும் பல முதுகெலும்பிகளில் இவை உள்ளன என்ற போதிலும், நஞ்சுக்கொடி பாலூட்டிகள் (மனிதர்கள்), எலாஸ்மோப்ராஞ்ச்ஸ் மற்றும் கெளிறு மீன் வகைகளில் இவைக் காணப்படுவதில்லை.[2] மீன்களில் இரட்டை கூம்புகளின் கலங்களுக்கு இடையில் இடைவெளி சந்திப்புகள் உள்ளன இவற்றின் செயல்பாட்டினை, ஒற்றை கூம்புகளுடன் ஒப்பிடும்போது ஏதேனும் தனித்துவமான செயல்பாடு இருப்பினும், அவை பெரும்பாலும் தெரியவில்லை; முன்மொழியப்பட்ட பயன்பாடாக வண்ணமற்ற பார்வையில் ஒளிர்வு, இயக்கம் மற்றும் துருவப்படுத்தல் பார்வை ஆகியவை அடங்கும்.

சில இரட்டை கூம்புகள் ஒரே மாதிரியான காட்சி நிறமிகளைக் கொண்டுள்ளன (இரட்டை கூம்புகள்), மற்றவை வெவ்வேறு வகையான காட்சி நிறமிகளைக் கொண்டுள்ளன (வேறுபட்ட நிறமாலை உணர்திறன் கொண்டவை). பவளப்பாறையில் வாழும் ரைனிகேந்தசு அகுலெடசில் நடைபெற்ற நடத்தை குறித்த ஆராய்ச்சியில் ரைன்காந்தஸ் அக்குலேட்டஸ் இரட்டை கூம்புகளின் தனிப்பட்ட செயல் அலகுகள் வண்ணத் தகவல்களின் சுயாதீனமாகச் செயல்படுகின்றன என்பதற்கான ஆதாரங்களை வழங்கியுள்ளது.[2]

மீன்களின் பார்வை எனும் புத்தகத்தில், இரட்டை கூம்புகள் ஒற்றை கூம்புகளை விட ஒளியின் நீண்ட அலைநீளங்களுக்கான உணர்திறன் கொண்டவை என்று ஜேம்ஸ் போமேக்கர் கூறுகிறார். ஒற்றை கூம்புகள் பொதுவாக இரட்டை கூம்புகளை விட சிறியதாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.[3]

மேலும் படிக்க தொகு

  • வால், ஜி.எல் (1942). முதுகெலும்பு கண் மற்றும் அதன் தகவமைப்பு கதிர்வீச்சு: ப்ளூம்ஃபீல்ட் ஹில்ஸ், மிச். : கிரான்ப்ரூக் அறிவியல் நிறுவனம். எஸ்பி. பக் 58-63.

மேற்கோள்கள் தொகு

  1. Marchiafava, P.L. (1985). "Cell coupling in double cones of the fish retina". Proceedings of the Royal Society of London B 226 (1243): 211–215. doi:10.1098/rspb.1985.0091. 
  2. 2.0 2.1 Pignatelli, V.; Champ, C.; Marshall, J.; Vorobyev, M. (2010). "Double cones are used for colour discrimination in the reef fish, Rhinecanthus aculeatus". Biology Letters (The Royal Society) 6 (4): 537–539. doi:10.1098/rsbl.2009.1010. பப்மெட்:20129950. 
  3. Downing, J; Djamgoz, M; Bowmaker, J (1986). "Photoreceptors of cyprinid fish: morphological and spectral characteristics". Journal of Comparative Physiology A 159: 859–868. doi:10.1007/bf00603739. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_கூம்பு_உயிரணு&oldid=3137655" இலிருந்து மீள்விக்கப்பட்டது