இரண்டாம் அனங்கபாலன்

இரண்டாம் அனங்கபாலன் (Anangpal II அல்லது Anangpal Tomar), தோமரா வம்சத்தின் 16வது மன்னர் ஆவார். இவர் இராசபுத்திர குலத்தின் ஒரு பிரிவினர் ஆவார். இவர் தற்கால தில்லி, அரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் பகுதிகளை கிபி 1051 முதல் 1081 முடிய.ஆட்சி செய்தார்.[1][2]இரண்டாம் அனங்கபால் தோமர் 1052ஆம் ஆண்டில் தற்கால தில்லி நகரத்தையும், லால் கோட் எனும் கிலா ராய் பித்தோரா கோட்டையையும் நிறுவினார்.

இரண்டாம் அனங்கபால் தோமர்
தில்லியின் சாம்ராட்
லால் கோட், இரண்டாம் அனங்கபால் கட்டிய கோட்டை
தோமரா பேரரசின் 16வது மன்னர்
ஆட்சிக்காலம்கிபி 1051 – 1081
முன்னையவர்குமார பாலன்
பின்னையவர்தேஜ பாலன்
அரசமரபுதோமரா வம்சம்
மதம்இந்து சமயம்
தில்லி மெக்ராலியில் இரண்டாம் அனங்கபால் நிறுவிய இரும்புத் தூண்.[3][4]

இரண்டாம் அனங்கபாலன் நிறுவிய கட்டுமானங்கள்

தொகு

லால் கோட்

தொகு

மன்னர் இரண்டாம் அனங்கபாலன் மதுரா நகரத்திற்கு அருகில் உள்ள சௌன்க் பகுதியிலிருந்த இரும்புத் தூணை பெயர்த்தெடுத்து, 1052ல் தில்லி மெக்ராலி பகுதியில் நிறுவினார். மேலும் தில்லியில் 2 மைல் சுற்றளவு மற்றும் 30 அடி அகலம் கொண்ட லால் கோட் எனும் கிலா ராய் பித்தோரா கோட்டையை 1060ல் நிறுவினார்.[5]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Tomars of Delhi by Harihar Niwas Dwivedi. Gwalior: Vidya Mandir Publications. 1983.
  2. Tomars of Delhi by Harihar Niwas Dwivedi. Gwalior: Vidya Mandir Publications. 1983. p. 236.
  3. Balasubramaniam, R. 2002
  4. Arnold Silcock; Maxwell Ayrton (2003). Wrought iron and its decorative use: with 241 illustrations (reprint ed.). Mineola, N.Y: Dover. pp. 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-42326-3.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  5. Tomars of Delhi by Harihar Niwas Dwivedi. Gwalior: Vidyamandir Publications. 1983. pp. 238–239.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_அனங்கபாலன்&oldid=4072023" இலிருந்து மீள்விக்கப்பட்டது