இரண்டாம் அமர் சிங்

இந்திய ஆட்சியாளர்

இரண்டாம் அமர் சிங் (Amar Singh II) [1] (3 அக்டோபர் 1672 - 10 டிசம்பர் 1710) உதய்பூர் இராச்சியத்தை ஆண்ட ஆட்சியாளர் ஆவார் (ஆட்சி. 1698-1710). இவர் மகாராணா ஜெய் சிங்கின் மகன்.

இரண்டாம் அமர் சிங்
மேவாரின் ராணா of
இரண்டாம் அமர் சிங்
மேவாரின் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்1698–1710
முன்னையவர்மேவாரின் ஜெய் சிங்
பின்னையவர்இரண்டாம் சங்ராம் சிங்
பிறப்பு(1672-10-03)3 அக்டோபர் 1672
இறப்பு10 திசம்பர் 1710(1710-12-10) (அகவை 38)
குழந்தைகளின்
பெயர்கள்
இரண்டாம் சங்ராம் சிங்
அரசமரபுமேவாரின் சிசோதியர்கள்
தந்தைஜெய் சிங்

வரலாறு

தொகு

மகாராணா இரண்டாம் அமர் சிங், தனது தந்தை மகாராணா ஜெய் சிங்கிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார்.அந்த சமயத்தில் ராஜபுதனம் முழுவதும் பிளவுபட்டிருந்தது. மேலும் பிரபுக்களால் ராச்சியம் சிதறடிக்கப்பட்டிருந்த தருணத்தில் மேவாரின் செழிப்புக்காக பல்வேறு சீர்திருத்தங்களை செய்தார். இவரது ஆட்சியின் போது, முகலாய சக்தி பல கிளர்ச்சிகள் மற்றும் எழுச்சிகளால் வீழ்ச்சியடைந்திருந்தது. அமர் சிங் இந்த நேரத்தை சாதகமாகப் பயன்படுத்தி முகலாயர்களுடன் ஒரு தனிப்பட்ட ஒப்பந்தம் செய்து கொண்டார். அதே நேரத்தில் இவர் ஆம்பருடன் திருமண கூட்டணி ஏற்படுத்திக் கொண்டார். இவரது மகளை ஜெய்ப்பூரைச் சேர்ந்த சவாய் ஜெய் சிங்குக்கு திருமணம் செய்து கொடுத்து அவரது நட்பை அடைந்தார். உதய்பூர், ஆம்பர் மற்றும் மேவார் ராச்சியங்கள் ஒன்றிணைந்து முகலாயருக்கு எதிராக ஒரு பெரும் கூட்டணியாக உருவானது.

ராஜபுத்திர நாடுகளுக்கு சிறப்பு விதிகள் அமைக்கப்பட்டன. அதனால் ராஜ்புதனத்தை வலுப்படுத்தவும், முகலாயருக்கு உதவியை மறுக்கவும் செய்தன. ஆயினும்கூட, அமர் சிங் மேவார் மற்றும் பிற ராஜ்புதன மாநிலங்களின் சுதந்திரத்திற்காக வலுவான முயற்சிகளுடன் போராடினார். இசுலாமிய அரசின் கீழ் வாழ்ந்த முஸ்லிமல்லாத குடிமக்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஸ்யாவுக்கு எதிராகவும் போராடினார்.[2][3]

ஆனால் இவரது மரணத்துடன், இந்த சுதந்திரமான துணிச்சலான செயல்கள் படிப்படியாக குறைந்தன. இவர் தனது மக்களின் சுதந்திரம் மற்றும் தனது தாய்நாட்டின் செழிப்புக்காக முகலாயருக்கு எதிராக ராஜ்புதனத்தை ஒன்றிணைக்க முயன்றார். [4] [5]

சான்றுகள்

தொகு
  1. "UDAIPUR". Archived from the original on 27 December 2016.
  2. John Esposito, Islam the Straight Path, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், சன. 15, 1998, p. 34.
  3. Ali, Abdullah Yusuf (1991). The Holy Quran. Medina: King Fahd Holy Qur-an Printing Complex, pg. 507
  4. The Cambridge History of India, Volume 3 pg 322
  5. "Maharana Amar Singh II". 29 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_அமர்_சிங்&oldid=3800480" இலிருந்து மீள்விக்கப்பட்டது