இரண்டாம் கனிஷ்கன்

குசான மன்னன்

இரண்டாம் கனிஷ்கன் ( Kanishka II ) சுமார் 225-245 பொ.ச. வரை ஆட்சி செய்த குசானப் பேரரசன் ஆவார். இவர் கடைசி பெரிய குசானப் பேரரசராகக் கருதப்படும் முதலாம் வாசுதேவனுக்குப் பிறகு பதவியேற்றார்.

இரண்டாம் கனிஷ்கன்
குசானப் பேரரசன்
இரண்டாம் கனிஷ்கனின் சித்தரிப்பு கொண்ட நாணயம்.
ஆட்சிக்காலம்200–222 பொ.ச.
முன்னையவர்முதலாம் வாசுதேவன்
பின்னையவர்வசிஷ்கன்

ஆட்சி

தொகு

இவர் வட இந்தியாவில் குசான ஆட்சியை நிலைநிறுத்தியபோது, இவரது பேரரசின் மேற்குப் பகுதியை, அதாவது பாக்திரியாவை சாசானிய அரசன் முதலாம் சாபிரிடம் (பொ.ச. 240-272) இழந்திருக்கலாம். [1] சாபுரின், நக்ஷ்-இ ரோஸ்டம் பகுதியில் காணப்படும் அவரது கல்வெட்டுகளில், அவர் குசானர்களின் "புருஷபுரம்" ( பெசாவர் ) வரையிலான ஆட்சியைக் கட்டுப்படுத்தியதாகக் கூறுகிறது. குசானர்களை அவர் இந்து குஷ்க்கு அப்பால் கூட விரிவாக்கியிருக்கலாம் என்று கூறுகிறது . [1] ராக்-இ-பிபியில் உள்ள பாறைக் கல்வெட்டு இந்தக் கருத்தை மேலும் ஆதரிக்கிறது. [1]

இரண்டாம் கனிஷ்கனின் நாணயங்கள் மீது குசான-சாசானியரன முதலாம் பெரோஸ் குசான்ஷாவின் பல தாக்கங்கள் அறியப்படுகின்றன. மேலும் பெரோஸின் காலத்திலிருந்தே முதல் குசான-சாசானிய நாணயங்கள் இந்து-குஷுக்கு தெற்கே வெளியிடப்பட்டன. [2]

இவர் ஒரு கட்டத்தில் காந்தாரத்தின் கட்டுப்பாட்டையும், அதே போல் கபிஷாவையும் மீண்டும் கைப்பற்றியிருக்கலாம். மேலும் இந்த வெற்றிகளைத் தொடர்ந்து இவர் அசல் ஒன்றின் நூறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் கனிஷ்கரின் இரண்டாவது சகாப்தத்தை உருவாக்கியிருக்கலாம் என்ற கருத்துக்கள் உள்ளன. [1]

நாணயமும் தேதியிடப்பட்ட சிலையும்

தொகு

குறிப்புகள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Rezakhani, Khodadad (2017). From the Kushans to the Western Turks (in ஆங்கிலம்). p. 202.Rezakhani, Khodadad (2017). From the Kushans to the Western Turks. p. 202.
  2. Cribb 2018, ப. 20-21.

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_கனிஷ்கன்&oldid=3397080" இலிருந்து மீள்விக்கப்பட்டது