இரண்டாம் கோவிந்தராசன்

சகமான ஆட்சியாளர்

இரண்டாம் கோவிந்தராஜா (Govindaraja II) (ஆட்சி 863-890 பொ.ச.) இரண்டாம் குவாகா என்றும் அழைக்கப்படும் இவர், சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னர். இவர் கூர்ஜர-பிரதிகார ஆட்சியாளராக வடமேற்கு இந்தியாவில் உள்ள இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை ஆட்சி செய்தார்.

இரண்டாம் கோவிந்தராசன்
சகமான மன்னன்
ஆட்சிக்காலம்அண். 863-890 பொ.ச.
முன்னையவர்இரண்டாம் சந்திரராசா
பின்னையவர்சந்தனராசா
துணைவர்உருத்ராணி
அரசமரபுசாகம்பரியின் சாகம்பரி
தந்தைஇரண்டாம் சந்திரராஜா

இவர் தனது தந்தை இரண்டாம் சந்திரராஜாவிற்குப் பிறகு சிம்மாசனத்தில் ஏறினார். [1] ஹர்ஷநாத் கோயில் கல்வெட்டு இரண்டாம் கோவிந்தனை அவரது தாத்தா முதலாம் கோவிந்தரைப் போலவே சிறந்த போர்வீரராக விவரிக்கிறது. [2]

12 மன்னர்கள் கோவிந்தனின் சகோதரி 'கலாவதியை' மணக்க விரும்பினர். ஆனால் அவர் அவர்களை தோற்கடித்து, தனது சகோதரியை கன்னோசியின் சக்கரவர்த்திக்கு திருமணம் செய்து கொடுத்ததாக பிருத்விராஜா விஜயம் கூறுகிறது. [3] கன்னோசியின் இந்த ஆட்சியாளர் பிரதிகாரப் பேரரசர் மிகிர போஜனுடன் அடையாளம் காணப்பட்டார். [2] போஜனின் வழித்தோன்றலான இரண்டாம் மகேந்திரபாலனின் ஆட்சிக் காலத்தின் பிரதாப்கர் கல்வெட்டு, சகாமனாக்கள் போஜனுக்கு "இன்பத்தின் பெரும் ஆதாரமாக" இருந்ததாகக் கூறுகிறது. இது தாம்பத்திய உறவைக் குறிப்பதாக இருக்கலாம். [3]

இரண்டாம் கோவிந்தனுக்குப் பிறகு இவரது மகன் சந்தனராஜா ஆட்சிக்கு வந்தார். [1]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 R. B. Singh 1964, ப. 56.
  2. 2.0 2.1 Dasharatha Sharma 1959, ப. 26.
  3. 3.0 3.1 R. B. Singh 1964, ப. 96.

உசாத்துணை

தொகு
  • Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780842606189.
  • R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_கோவிந்தராசன்&oldid=3412157" இலிருந்து மீள்விக்கப்பட்டது