இரண்டாம் நாகபட்டன்

கூர்ஜர பிரதிகாரப் பேரரசன்

இரண்டாம் நாகபட்டன் (Nagabhata II) (ஆட்சி 805-833) பிரதிகார வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்தியப் பேரரசர் ஆவார். இவர் தனது தந்தை வத்சராசனுக்குப் பிறகு பிரதிகாரப் பேரரசின் அரியணை ஏறினார். [1] இவரது தாயார் ராணி சுந்தரி தேவி என்பவராவார். இவர் கன்னோசி வெற்றிக்குப் பிறகு "பரமபட்டாரகன், மகாராஜாதிராஜா, பரமேசுவரன்" போன்ற ஏகாதிபத்திய பட்டங்களுடன் நியமிக்கப்பட்டார் . [2] [3]

இரண்டாம் நாகபட்டன்
பரமபட்டாரகன்
மகாராஜாதிராஜா
பரமேசுவரன்
கூர்ஜர-பிரதிகாரப் பேரரசின் 4வது மன்னன்
ஆட்சிக்காலம்அண். 805 – அண். 833
முன்னையவர்வத்சராஜன்
பின்னையவர்இராமபத்ரன்
அரசமரபுபிரதிகார வம்சம்
தந்தைவத்சராஜன்
தாய்சுந்தரி-தேவி
மதம்இந்து சமயம்

ஆட்சி

தொகு

இரண்டாம் நாகபட்டனைப் பற்றி குவாலியர் கல்வெட்டில் ஒரு குறிப்பு காணப்படுகிறது. சிந்து, ஆந்திரா, விதர்பா, கலிங்கம், மத்ஸ்யர்கள், வட்சஸ், மாளவர்கள், கிராதர்கள், அனர்தர்கள் மற்றும் அரேபியர்களை இவர் தோற்கடித்தார். இவர் சைந்தவ ஆட்சியாளர் முதலாம் ரணகாவை தோற்கடித்து மேற்கு சௌராட்டிராவை (தற்போது குசராத்து ) கைப்பற்றினார். [4] [5] கன்னோசியில் சக்ராயுத ஆட்சியாளர்களையும் தோற்கடித்தார். [6] :20 பின்னர் நடைபெற்ற ஒரு போரில் இராஷ்டிரகூட பேரரசர் மூன்றாம் கோவிந்தனால் (793-814) தோற்கடிக்கப்பட்ட இவர் மால்வா மற்றும் குசராத்தை இழந்தார். இருப்பினும், இராஷ்டிரகூடர்களிடமிருந்து மால்வாவை மீட்டார், பாலப் பேரரசிடமிருந்து பீகார், கன்னோசி , சிந்து-கங்கைச் சமவெளி வரை கைப்பற்றினார். மேலும் மேற்கில் இருந்த முஸ்லிம்களை]] எதிர்த்தார். கன்னோசி பிரதிகார மாநிலத்தின் மையமாக மாறியது. இது அவர்களின் அதிகாரத்தின் உச்சத்தின் போது (836-910) வட இந்தியாவின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. [2]

இவரது வழித்தோன்றலான மிகிர போஜனின் ஒரு கல்வெட்டு, இவரைப் பற்றி "வேதத்தில் விதிக்கப்பட்ட நல்லொழுக்க செயல்களின் பெரும் வளர்ச்சியை விரும்பி, சத்திரிய குடும்பங்களின் வழக்கப்படி தொடர்ச்சியான மத சடங்குகளை செய்தவர் " என விவரிக்கிறது. நாகபட்டன் பகவதியின் பக்தராக இருந்ததாக கூறப்படுகிறது. [7] 

இவர் தனது ஆரம்பகால வாழ்க்கையில் பாலர்களின் பெரிய இராணுவத்தை எதிர்கொண்டார். அதில் 50,000 யானைப் படை இருந்தது, முங்கரில் மன்னர் தர்மபாலன் தலைமையில் நாகபட்டன் வெற்றி பெற்றார். வத்சராஜாவின் சார்பாகப் போரிட்ட சங்கரகன குகிலன் தனது சபதத்தை நிறைவேற்றியதாக அவனது குகில நிலப்பிரபுத்துவ பாலாதித்தியனின் (கி.பி. 813) சட்சு கல்வெட்டு கூறுகிறது.

இவருக்குப் பின்னர் ராமபத்ரன் ஆட்சிக்கு வந்தார். சில முந்தைய வரலாற்றாசிரியர்கள் நாகபட்டனை சைனக் கணக்குகளின்படி பொ.ச. 832-833 இல் இறந்த ஆமாவுடன் அடையாளப்படுத்தினர் (பார்க்க Àma#Identification with Nagabhata ). இந்த அடையாளத்தின் அடிப்படையில், நாகபட்டனின் ஆட்சியானது கிபி 833 இல் முடிவடைந்ததாகக் கருதப்படுகிறது. இந்த அடையாளத்துடன் உடன்படாத வரலாற்றாசிரியர் ஷியாம் மனோகர் மிஸ்ரா, நாகபட்டனின் மரணத்தை கிபி 825 இல் குறிப்பிடுகிறார். [8]

கூர்ஜர-பிரதிகாரப் பேரரசின் ஆட்சியாளர்கள்

தொகு
  • நாகபட்டர் (730–760)
  • காகுஸ்தன் மற்றும் தேவராஜன் (760–780)
  • வத்சராஜன் (780–800)
  • இரண்டாம் நாகபட்டன் (800–833)
  • இராமபத்திரன் (833–836)
  • மிகிர போஜன் (836–885)
  • முதலாம் மகேந்திரபாலன் (885–910)
  • இரண்டாம் போஜன் (910–913)
  • முதலாம் மகிபாலன் (913–944)
  • இரண்டாம் மகேந்திரபாலன் (944–948)
  • தேவபாலன் (948–954)
  • விநாயக பாலன் (954–955)
  • இரண்டாம் மகிபாலன் (955–956)
  • இரண்டாம் விஜயபாலன (956–960)
  • இராஜபாலன் (960–1018)
  • திரிலோசன பாலன் (1018–1027)
  • யாஷ்பாலன் (1024–1036)

இதனையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. Panchānana Rāya (1939). A historical review of Hindu India: 300 B. C. to 1200 A. D. I. M. H. Press. p. 125.
  2. 2.0 2.1 Rama Shankar Tripathi 1964.
  3. Hooja (2006). A History of Rajasthan. Rupa & Company.
  4. History of Rajasthan Rima Hooja pg - 276 Roopa Publishers
  5. Sailendra Nath Sen (1 January 1999). Ancient Indian History and Civilization. New Age International. p. 343. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-224-1198-0.
  6. Sen, S.N., 2013, A Textbook of Medieval Indian History, Delhi: Primus Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789380607344
  7. R.K. Gupta, S.R. Bakshi (2008). Rajasthan Through the Ages,Studies in Indian history. Vol. 1. Rajasthan: Swarup & Sons. p. 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176258418.
  8. Shyam Manohar Mishra 1977.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_நாகபட்டன்&oldid=3425919" இலிருந்து மீள்விக்கப்பட்டது