இரண்டாம் போஜன் (பரமார வம்சம்)
இரண்டாம் போஜன் (Bhoja II) மத்திய இந்தியாலிருந்த பரமார வம்சத்தின் 13ஆம் நூற்றாண்டின் அரசனாவான். இவன் இரண்டாம் அர்ச்சுனனுக்குப் பிறகு மால்வா பிராந்தியத்தில் தாராவின் மன்னராக ஆனான்.
இரண்டாம் போஜன் | |||||
---|---|---|---|---|---|
மால்வாவின் மன்னன் | |||||
ஆட்சிக்காலம் | 13ஆம் நூற்றண்டின் பிற்பகுதி | ||||
முன்னையவர் | இரண்டாம் அர்ச்சுன வர்மன் | ||||
பின்னையவர் | இரண்டாம் மகாலகதேவன் | ||||
பிரதிநிதி | கோகதேவன் | ||||
| |||||
அரசமரபு | பரமாரப் பேரரசு | ||||
தந்தை | ஒருவேளை இரண்டாம் செயவர்மன் | ||||
மதம் | இந்து சமயம் |
வரலாறு
தொகுசமணக் கவிஞர் நயச்சந்திர சூரியின், ஹம்மிர மகாகாவியத்தில், ஹம்மிரதேவன் சரசபுரத்தின் அர்ச்சுனனையும், தாரின் போஜனையும் தோற்கடித்ததாகக் கூறுகிறது. இதன் அடிப்படையில், ரமேஷ் சந்திர மஜும்தார், ஹம்மிர தேவன் இரண்டாம் அர்ச்சுனனின் ஆட்சியின்போது ஒருமுறையும், அவனது வாரிசான இரண்டாம் போஜனனின் ஆட்சியின் போது இரண்டாம் முறையும் மால்வா மீது படையெடுத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.[1] பொ.ச. 1282-83இல் ஹம்மிரதேவன் சௌகான் சிம்மாசனத்தில் ஏறியதால், போஜன் 1283க்குப் பிறகு எப்போதாவது பராமர சிம்மாசனத்தில் ஏறியிருக்க வேண்டும்.[2]
மறுபுறம், பிரதிபால் பாட்டியா, இரண்டாம் அர்ச்சுன வர்மனின் மந்திரி கோகதேவன் அரசனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ததாகவும், போஜனை தாராவின் சிம்மாசனத்தில் ஒரு பட்டத்து அரசனாக அமர்த்தினான் என்றும் ஊகிக்கிறார். 16 ஆம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியர் பெரிஷ்தா கோகனை "மால்வாவின் மன்னன்" என்று விவரிக்கிறார். பாட்டியாவின் கோட்பாட்டின் படி, கோகதேவன் பரமார இராச்சியத்தின் ஒரு பகுதியின் நடைமுறை சுதந்திர ஆட்சியாளராக இருந்தான். அதே நேரத்தில் அர்ச்சுனன் மற்றொரு பகுதியை ஆட்சி செய்து வந்தான்.[3]
போஜனுக்குப் பிறகு இரண்டாம் மகாலகதேவன் அரியணை ஏறினான்.[4]
சான்றுகள்
தொகு- ↑ Majumdar 1966, ப. 85-86.
- ↑ Sastri 1970.
- ↑ Bhatia 1970, ப. 160.
- ↑ Majumdar 1966.
உசாத்துணை
தொகு- Bhatia, Pratipal (1970). The Paramāras, c. 800-1305 A.D. Munshiram Manoharlal.
- Majumdar, Ramesh Chandra (1966). The History and Culture of the Indian People: The struggle for empire. Bharatiya Vidya Bhavan.
- Sastri, Kallidaikurichi Aiyah Nilakanta (1970). A Comprehensive History of India: The Delhi Sultanat, A.D. 1206-1526. Orient Longmans.