இரண்டாயிரமாவது தேர்வுத் துடுப்பாட்டம்
தேர்வுத் துடுப்பாட்ட வரலாற்றின் இரண்டாயிரமாவது தேர்வுத் துடுப்பாட்டம் சூலை 21 2011 இல் இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. மார்ச் 15ம் 1877 திகதி ஆரம்பமான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளின் எண்ணிக்கை சூலை 21 2011 ஆம் திகதி 2000ஐ எட்டியது.
முதல் 500 தேர்வுத் துடுப்பாட்டங்கள்
தொகுமுதலாவது தேர்வுத் துடுப்பாட்டமானது மார்ச் 15 1877 ஆம் திகதி முதல் மார்ச் 19 1877 ஆம் திகதிவரை ஆத்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆத்திரேலியா அணி 45 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. 500 ஆவது தேர்வுத் துடுப்பாட்டம் டிசம்பர் 30, 1960 முதல் ஜனவரி 3 1961, திகதிவரை மெல்போர்னில் ஆத்திரேலியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. இதில் ஆஸி. அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.
காலம்
தொகு1877 ஆம் ஆண்டு தொடக்கம் முதல்[500 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளை விளையாடி முடிக்க எடுத்துக் கொண்ட காலம் 83 ஆண்டுகளாகும். முதல் 500 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளும் விளையாடும் காலப் பிரிவில் இங்கிலாந்து - ஆத்திரேலியா அணிகள் மாத்திரமே அதிக போட்டிகளில் விளையாடின. முதல் 500 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளின் போது ஆண்டுக்கு சராசரியாக 6 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள் வீதமே விளையாடப்பட்டுள்ளன.
இரண்டாவது 500 தேர்வுத் துடுப்பாட்டங்கள்
தொகுஇரண்டாவது 500 தேர்வுத் துடுப்பாட்ட போட்டிகளையும் விளையாட எடுத்துக் கொண்ட காலம் 24 ஆண்டுகளாகும். இந்தக் காலப் பிரிவில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 20 துடுப்பாட்டப் போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. முதல் 1000 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளையும் விளையாட எடுத்துக் கொண்ட காலம் 107 ஆண்டுகளாகும். 1000மாவது தேர்வுப் போட்டி நவம்பர் 25 1984ஆம் திகதி நவம்பர் 29 1984ஆம் திகதி வரை பாக்கித்தான் - நியூசிலாந்து அணிகளுக்கிடையில் ஹைதராபாத் நியாஸ் அரங்கில் நடைபெற்றது. இதில் பாக்கித்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.
மூன்றாவது 500 தேர்வுத் துடுப்பாட்டங்கள்
தொகுமூன்றாவது 500 தேர்வுப் போட்டிகளும் 16 ஆண்டுகளுக்குள் விளையாடி முடிக்கப்பட்டுள்ளன. சராசரியாக இந்தக் காலப் பிரிவில் ஆண்டொன்றுக்கு 31 தேர்வுப் போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. சூன் 15, 2000 ஆம் திகதி முதல் சூன் 17, 2000 திகதி வரை இங்கிலாந்து - மேற்கிற்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. எஜ்பாஸ்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மேற்கிந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 93 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
நான்காவது 500 தேர்வுத் துடுப்பாட்டங்கள்
தொகுநான்காவது 500 தேர்வுத் துடுப்பாட்டங்களையும் விளையாட எடுத்துக் கொண்ட காலம் 11 ஆண்டுகள் மாத்திரமே. இந்தக் காலப் பிரிவில் சராசரியாக ஆண்டொன்றுக்கு 45 போட்டிகள் வீதம் விளையாடப்பட்டுள்ளன. 2000மாவது போட்டி சூலை 21 2011ஆம் திகதி இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. இப் போட்டியில் இங்கிலாந்து 196 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது. முதல் 1000 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளையும் விளையாட 107 ஆண்டுகள் எடுத்துக்கொண்ட அதே நேரத்தில் கடைசி 1000 போட்டிகளையும் விளையாட 27 ஆண்டுகள் மாத்திரமே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
2000 போட்டிகள் வரை
தொகுஇதுவரை நடந்து முடிந்துள்ள 2000 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 19,60,949 ஓட்டங்கள் பெற்றப்பட்டுள்ளதோடு 61,209 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன. 1300 ஆட்டங்களில் முடிவு கிடைத்துள்ளன. 698 போட்டிகள் வெற்றி தோல்வி இன்றி சம நிலையில் முடிந்துள்ளன. இரண்டு போட்டிகள் சரிசமமான ஓட்டங்களைப் பெற்று போட்டி முடிந்துள்ளன.