குருதிப் புரதங்கள்
(இரத்தப் புரதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குருதிப் புரதங்கள் அல்லது பாய்மப் புரதங்கள் எனப்படுபவை, குருதி நீர்மத்தில் காணப்படும் புரதங்கள் ஆகும். பாய்ம மொத்தப் புரதத்தின் அளவு கிட்டத்தட்ட 7g/dl ஆக இருக்கும். இப்புரதங்கள் பல்வேறு தொழில்களைச் செய்பவையாக இருக்கும்.
- இலிப்பிட்டுக்கள், உயிர்ச்சத்துக்கள், இயக்குநீர்கள், உலோகங்கள் போன்றவற்றை குருதிச் சுற்றோட்டத்தொகுதி ஊடாக கடத்திச் செல்லும் மூலக்கூறுகள்.
- நொதியங்கள், நிரப்பு பொருட்கள், ப்ரோட்டியேசு நிரோதிகள், கைனின் முன்னோடிகள் போன்றன.
- நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் உயிரணுக்களுக்கு வெளியாக செயல்திறனையும், தொழிற்பாட்டையும் முறைப்படுத்தும் மூலக்கூறுகள்.
மின்புலத் தூள்நகர்ச்சி மூலம் பிரித்தெடுக்கப்படும் இந்த குருதிப் புரத அளவீடுகள் நோய்களைக் கண்டறியவும், மேலதிக தொடர்ந்த செய்ற்பாடுகளில் மாற்றங்களைக் கண்டறியவும் உதவும்.
பொதுவாக காணப்படும் அடிக்கடி பேசப்படும் புரதங்களாவன:
குருதிப் புரதம் | சாதாரண மட்டம் | % | தொழில் |
---|---|---|---|
ஆல்புமின் | 3.5-5.0 g/dl | 60% | சவ்வூடு பரவலுக்கான அமுக்கத்தை குருதியில் ஏற்படுத்தவும், இதர மூலக்கூறுகளின் கடத்தலுக்கும் உதவும் |
இமியூனோகுளோபுலின் | 1.0-1.5 g/dl | 18% | நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்கெடுக்கும் |
நாரீனி (புரதம்) | 0.2-0.45 g/dl | 4% | குருதி உறைதல் |
alpha 1-antitrypsin | சமிபாட்டுத்தொகுதியில் இருந்து திருப்சின் நொதியம் கசிந்து வரின் அதனைச் சமநிலைப்படுத்தும். | ||
ஒழுங்குபடுத்தும் புரதங்கள் | <1% | மரபணு வெளிப்பாட்டை ஒழுங்குபடுத்தும் |