இரத்தினமங்கலம் லட்சுமி குபேரர் கோயில்
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஓர் இந்துக் கோயில்
லட்சுமி குபேரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு இரத்தினமங்கலத்தில் உள்ள ஓர் இந்துக் கோயிலாகும். இக்கோயிலே இந்தியாவில் லட்சுமி குபேரனுக்கு உரிய கோயிலாக உள்ளது.[1] இக்கோயிலைச் சுற்றி லட்சுமி கணபதி, குபேரலிங்கம், செல்வ முத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவ கிரகங்கள் ஆகியவையும், அருகிலேயே கோசாலையும் உள்ளன.
இரத்தினமங்கலம் லட்சுமி குபேரர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 12°51′56″N 80°08′12″E / 12.8656°N 80.1367°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | செங்கல்பட்டு |
அமைவிடம்: | இரத்தினமங்கலம் |
சட்டமன்றத் தொகுதி: | செங்கல்பட்டு |
மக்களவைத் தொகுதி: | காஞ்சிபுரம் |
ஏற்றம்: | 25.66 m (84 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | இலட்சுமி குபேரர் |
சிறப்புத் திருவிழாக்கள்: | தீபாவளியன்று இலட்சுமி குபேர பூசை |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
இத்தலத்தில் மூலவராக குபேரன் உள்ளார். கருவறையில் மனைவி சித்தரிணீயுடன் வலது கையில் பதுமநிதி மற்றும் இடது கையில் சங்கநிதி கொண்டு உள்ளார். குபேரன் சிலைக்கு மேலாக லட்சுமி அமைந்துள்ளார்.
அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து சுமார் 25.66 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 12°51′56″N 80°08′12″E / 12.8656°N 80.1367°E ஆகும்.[1]
திருவிழாக்கள்
தொகு- தீபாவளி அன்று சிறப்பு பூசைகள்
- வைகுண்ட ஏகாதசி
- அட்சய திருதியை