இரத்தின் தத்தா
இரத்தின் தத்தா (Rathin Datta)(1931 - 27 சனவரி 2020) திரிபுராவைச் சேர்ந்த இந்திய மருத்துவர். இவர் பத்மசிறீ மற்றும் விடுதலைப் போரின் நண்பர்கள் கௌரவத்தைப் பெற்றவர்.
இரத்தின் தத்தா Rathin Datta | |
---|---|
பிறப்பு | 1931 மங்கல்தோய், அசாம், இந்தியா |
இறப்பு | 27 சனவரி 2020 (88 வயது) கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா |
பணி | மருத்துவர் |
விருதுகள் | பத்மசிறீ (1992) விடுதலைப் போரின் நண்பர்கள் (2012) |
வாழ்க்கை
தொகுதத்தா 1931ஆம் ஆண்டு அசாமில் உள்ள மங்கல்தோயில் பிறந்தார்.[1][2] பள்ளிப் படிப்பினை சில்லாங்கில் முடித்தார்.[3] பின்னர், திப்ருகாரில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.[1] பின்னர் இவர் பிதான் சந்திர ராயின் கீழ் பயிற்சி பெற்றார்.[3] அரச அறுவையிலாளர் கல்லூரியில் உதவித்தொகையுடன் கூடிய கல்வி கற்க இலண்டன் சென்றார்[1]
மருத்துவ பணி
தொகுஇலண்டனில் பயிற்சியினை முடித்து, இந்தியா திரும்பிய தத்தா, அறுபதுகளின் பிற்பகுதியில் திரிபுரா சுகாதார பணியில் சேர்ந்தார்.[3] வங்காளதேச விடுதலைப் போரின் போது வங்காளதேச விடுதலைப் போராளிகளுக்கும் இந்திய வீரர்களுக்கும் சிகிச்சை அளித்தார். இவர் 1971-ல் பல உயிர்களைக் காப்பாற்றினார்.[4] இவர் 1992-ல் திரிபுரா சுகாதார சேவைகளின் இயக்குநராகவும் சிறப்பு செயலாளராகவும் பணியாற்றினார்.[1]
மருத்துவத்தில் தத்தா செய்த பங்களிப்பிற்காக 1992-ல் பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.[5] திரிபுராவிலிருந்து பத்மசிறீ விருது பெற்ற இரண்டாவது நபர் இவர்.[6] வங்காளதேச விடுதலைப் போரில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2012-ல் விடுதலைப் போரின் நண்பர்கள் விருது பெற்றார்.[7]
இறப்பு
தொகுதத்தா 27 சனவரி 2020 அன்று தனது 88ஆவது வயதில் கொல்கத்தாவில் உள்ள தனது சொந்த வீட்டில் காலமானார்.[2][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Rathin Datta, who saved lives in Bangladesh Liberation War, dies". 27 January 2020. https://www.indiatvnews.com/news/india/rathin-datta-dies-surgeon-played-pivotal-role-bangladesh-liberation-war-583511.
- ↑ 2.0 2.1 "Tripura doctor honoured in India, Bangladesh for his role in 1971 war, dies". 28 January 2020. https://m.hindustantimes.com/india-news/tripura-doctor-honoured-in-india-bangladesh-for-his-role-in-1971-war-dies/story-u4iIt36frvglVXObBbDqWN.html.
- ↑ 3.0 3.1 3.2 "Padma Shri Dr Rathin Datta, known for his service during 1971 Indo-Pak War, passes away". 27 January 2020. https://indianexpress.com/article/north-east-india/tripura/padma-shri-dr-rathin-datta-known-for-his-service-during-1971-indo-pak-war-passes-away-6238133/.
- ↑ "Doctor Rathin Datta who saved many lives in Bangladesh liberation war, dead". 28 January 2020. https://www.sentinelassam.com/north-east-india-news/tripura-news/doctor-rathin-datta-who-saved-many-lives-in-bangladesh-liberation-war-dead/.
- ↑ "Padma Awards Directory (1954–2014)" (PDF). Ministry of Home Affairs (India). 21 May 2014. பார்க்கப்பட்ட நாள் 22 March 2016.
- ↑ "Tripura’s legendary surgeon Dr Rathin Datta passes away". 28 January 2020. https://nenow.in/north-east-news/assam/tripuras-legendary-surgeon-dr-rathin-datta-passes-away.html.
- ↑ "যা লেখা আছে সম্মাননাপত্রে" (in bn). Kaler Kantho. 28 March 2012. https://www.kalerkantho.com/print-edition/Court/2012/03/28/241345.
- ↑ "‘মুক্তিযুদ্ধের বন্ধু’ প্রয়াত" (in bn). 28 January 2020. https://www.anandabazar.com/national/renowned-physician-rathin-datta-who-saved-many-lives-in-bangladesh-liberation-war-passed-away-1.1101180.