இரன்மால்
இரன்மால் (Ranmal;1392 - அக்டோபர் 1438) அல்லது இரித்மால் என்றும் அழைக்கப்படும் இவர், மார்வாரின் இரத்தோர் ஆட்சியாளராக இருந்தார் ( ஆட்சிக்காலம் பொ.ச. 1428 முதல் 1438 வரை). ஒரு குறிப்பிடத்தக்க விரிவாக்கவாதியும் திறமையான போர்வீரனுமான, இவர் இரண்டு வெவ்வேறு அரசர்களின் கீழ் இரண்டு முறை மேவார் இராச்சியத்தின் ஆட்சியாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரன்மால் | |
---|---|
மார்வாரின்இராவ் | |
மார்வாரின் ஆட்சியாளர் | |
ஆட்சி | 1428 – 1438 |
முன்னிருந்தவர் | இராவ் கன்ஹா |
பின்வந்தவர் | இராவ் ஜோதா |
வாரிசு(கள்) | ஜோதா இராவ் கந்தால் மேலும் பலர் |
அரச குலம் | இரத்தோர் |
தந்தை | மாண்டோரின் சுண்டா |
தாய் | சுரம் டி சங்கலி |
பிறப்பு | 1392 |
இறப்பு | அக்டோபர் 1438 (அகவை 45–46) சித்தோர்கார் கோட்டை, மேவார் (தற்போதைய சித்தோர்கார், ராஜஸ்தான், இந்தியா) |
ஒரு இளைய சகோதரருக்கு ஆதரவாக மார்வாரின் வாரிசாக இடம்பெயர்ந்த பிறகு, இரன்மால் தனது மைத்துனரான மேவாரின் ராணா லகா சிங்கின் ஆட்சியில் இவர் குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெற்றார். இறுதியில் 1421-இல் ஏற்பட்ட லகாவின் மரணத்தைத் தொடர்ந்து தனது சிறிய மருமகன் மோகல் சிங்கிற்கு ஆட்சியாளராக ஆனார். 1428-ஆம் ஆண்டில், இரன்மால் தனது தந்தை மற்றும் சகோதரர்களின் மரணத்தால் காலியாக இருந்த தனது மூதாதையர் அரியணையைக் கோருவதற்காக மார்வாருக்குத் திரும்பினார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மோகல் சிங் படுகொலை செய்யப்பட்டபோது, இரன்மல் மீண்டும் மேவார் ஆட்சியை மோகல் சிங்கின் இளைய மகன் ராணா கும்பாவின் பெயரில் ஏற்றுக்கொண்டார்.
மேவாரின் ஆட்சிக்காலத்திலும், இவரது சொந்த இராச்சியத்தின் ஆட்சியிலும், இரன்மல் குசராத்து, பூந்தி மற்றும் மால்வா ஆகிய இராச்சியங்களை உள்ளடக்கிய அண்டை மாநிலங்களுக்கு எதிராக பல வெற்றிகரமான இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கினார். இருப்பினும், சிசோதிய இராச்சியத்திற்கு இவர் கொண்டு வந்த கணிசமான இரத்தோர் செல்வாக்கு காரணமாக இவர் மேவார் பிரபுக்களால் பெரிதும் வெறுப்புக்காளானார். ஒரு மேவாரி இளவரசர் இவரது உத்தரவின் பேரில் கொலை செய்யப்பட்டபோது, இவருக்கு எதிராக 1438-இல் ஒரு சதி தொடங்கப்பட்டது. இது இவரது படுகொலையில் முடிந்தது. மேலும், மார்வார் படையெடுப்பில் உச்சக்கட்டத்தை அடைந்து பின்னர் பலவீனமடைந்தது. இவரது வாரிசான ஜோதா அதன் முந்தைய முக்கியத்துவத்தை மீட்டெடுக்க பல ஆண்டுகள் ஆனது.
வரலாறு
தொகுஇரன்மல், மார்வாரின் ராத்தோர் ஆட்சியாளரான ராவ் சுண்டா என்பவருக்கும், அவரது மனைவி சுரம் டி சங்கலி என்பவருக்கும்[1] பொ.ச.1392 இல் பிறந்தார்.[2] ஆரம்பகால உரிமையின்படி, தனது தந்தையின் மூத்த மகனாக, இரன்மல் ஆரம்பத்தில் அரியணைக்கு வாரிசாகத் தெரிந்தார்.[3] இருப்பினும், அவரது விருப்பமான மனைவி சோனா மொஹிலின் செல்வாக்கின் கீழ், [1] சுண்டா தனது மகன் கன்ஹாவை அவருக்குப் பதிலாக நியமிக்கும்படி வற்புறுத்தினார்.[4] பின்னர் இரன்மல், மண்டோரை விட்டு சுயமாக வெளியேறினார்.[5]
மேவாருக்குச் செல்லுதல்
தொகுஇரன்மல், மேவார் இராச்சியத்தின் கோட்டை-தலைநகரான சித்தோர்கருக்குப் பயணம் செய்தார். அங்கு, இவரது சகோதரி ஹன்சா பாயின் கணவரான மாநிலத்தின் ஆட்சியாளர் ராணா லகா சிங் இவரை வரவேற்று அரசவையில் இடம் கொடுத்தார். 1421 இல்,[5][6] சிங் இறந்ததைத் தொடர்ந்து இரன்மலின் அதிகாரம் அதன் உச்சத்தை அடைந்ததன் மூலம், [7] அரசவையில் இளவரசர் ராணா கும்பாவின் ஆட்சியாளரானார்.
மரணம்
தொகுஹன்சா பாய், தனது இளம் மகன் மோகல் சிங்கின் சிறுவயது காரணமாக, புதிய ராணாவின் சார்பாக மாநிலத்தை நிர்வகிக்க இரன்மாலை வேண்டிக்கொண்டார். மேவாரின் போட்டியாளர்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கி, அடுத்த ஆண்டுகளில் இவர் இந்தப் பாத்திரத்தை வியக்கத்தக்க வகையில் நிறைவேற்றினார். இதில் நாகௌரின் பிருஸ் கான், குசராத்தின் முதலாம் அகமத் ஷா, பூந்தியின் ஹடாஸ் ஆகியோர் அடங்குவர். இருப்பினும், அரசவையில் வளர்ந்து வரும் ரத்தோர் செல்வாக்கு மீது பிரபுக்கள் மத்தியில் அதிருப்தி இருந்தது. குறிப்பாக இரன்மால் உயர் பதவிகளை பெற்றது குறித்து. இந்த மோசமான உணர்வு இளம் ராணாவுக்கு எதிராகவும் பரவியது. இறுதியில் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு இவரது படுகொலைக்கு ஒரு காரணியாக மாறியது. [8]
இரன்மாலின் மரணம் மார்வார் மற்றும் மேவார் இராச்சியங்களுக்கு இடையே ஒரு குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை ஏற்படுத்தியது. இதன் விளைவாக முன்னாள் தலைநகரான மாண்டோர் மற்றும் அதன் சுற்றியுள்ள நிலங்கள் மேவாரின் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டன. இரன்மாலின் மகனும் வாரிசுமான ஜோதாவுக்கு (சித்தோர்கரிலிருந்து உயிருடன் தப்பியோடியவர்) [9] மார்வாரின் முன்னாள் புகழ் மற்றும் பிரதேசத்தை மீண்டும் நிலைநிறுத்த பல ஆண்டுகள் ஆனது. [10]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Singh, Rajvi Amar (1992). Mediaeval History of Rajasthan: Western Rajasthan. p. 140.
- ↑ Lawaniya, Kanchan (2016). "7: The Revenue Assignment: The Jagir & Patta". The Revenue Administration in the State of Marwar during 18th Century. Aligarh Muslim University. p. 229. hdl:10603/127227.
- ↑ Singh, Dhananajaya (1994). The House of Marwar. Lotus Collection, Roli Books. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788174360021.
- ↑ Joshi, Varsha (1995). Polygamy and Purdah: Women and Society Among Rajputs. Rawat Publications. p. 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170332756.
- ↑ 5.0 5.1 Hooja, Rima (2006). A history of Rajasthan. Rupa & Co. p. 380. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788129108906.
- ↑ (Hooja 2006, ப. 335–36)
- ↑ (Hooja 2006)
- ↑ (Hooja 2006, ப. 335–36)
- ↑ (Hooja 2006, ப. 337)
- ↑ (Hooja 2006, ப. 381)