ராணா கும்பா

ராணா கும்பா (ஆட்சிக் காலம் 1433-1468), மேற்கு இந்தியாவின் தற்கால இராஜஸ்தான் மாநிலத்தில், முன்னாள் மேவார் இராச்சியத்தின் ராணா ஆவார். இவர் இராசபுத்திர சிசோதியா வம்சத்தவர் ஆவார்.[1]

ராணா கும்பா
கும்பா
மேவார் ராணா கும்பா
மேவாரின் ராணா
ஆட்சிக்காலம்1433–68
முன்னையவர்மொக்கல் சிங்
பின்னையவர்முதலாம் உதய்சிங்
இறப்பு1468
குழந்தைகளின்
பெயர்கள்
முதலாம் உதய்சிங் மற்றும் ராணா ராய்மால்
தந்தைமொக்கல் சிங்
தாய்சௌபாக்கிய தேவி
ராண கும்பா அரண்மனை, சித்தோர்கார் கோட்டை, இராஜஸ்தான், இந்தியா
சித்தோர்கார் கோட்டையில், ராணா கும்பா 1448ல் நிறுவிய வெற்றித் தூண்
ராணா கும்பா நிறுவிய கும்பல்கர்க் கோட்டையின் 38 கிமீ சுற்றளவு கொண்ட கோட்டைச் சுவர்கள்

மால்வா இராச்சிய சுல்தான் முகம்மது கில்ஜி, நவம்பர் 1442 முதல் மேவார் இராச்சியத்தின் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தி, மச்சிந்தர்கர், பன்கர் மற்றும் சௌமுகப் பகுதிகளை கைப்பற்றி, மேவாரைச் சுற்றியுள்ள பகுதியில் படைகளுடன் முகாமிட்டார்.

26 ஏப்ரல் 1443ல் ராணா கும்பா, மால்வா சுல்தான் படைகள் மீது நடத்திய எதிர்பாராதத் தாக்குதலில், சுல்தான் படைகள் தோற்று, மத்தியப் பிரதேசத்தின் மந்துப் பகுதிக்கு தப்பியோடியது.

நவம்பர், 1443ல் மீண்டும் மால்வா சுல்தான் படைகள் மேவார் மீது போர் தொடுத்து சித்தூர் கோட்டையைத் தவிர்த்த பிற பகுதிகளைப் கைப்பற்றினாலும், 1440ல் நடைபெற்ற மண்டல்கர் மற்றும் பனஸ் போரில், ராணா கும்பா படைகள் மால்வா மற்றும் குஜராத் சுல்தான்களை விரட்டியடித்தது. இவ்வெற்றியின் நினைவாக, 1448ல் சித்தோர்கார் கோட்டையில் வெற்றித் தூண் நிறுவப்பட்டது.

மேவார் இராச்சியத்தினை எதிரிப்படைகளிடமிருந்து காக்கும் 84 கோட்டைகளில் கும்பல்கர்க் கோட்டை உள்ளிட்ட 32 கோட்டைகளை ராணா கும்பா நிறுவினார்.[1] விரைவில் மேவார் ராணா பதவியை அடையும் பொருட்டு, ராணாகும்பாவின் மகன் முதலாம் உதய்சிங், 1448ல் ராணா கும்பாவைக் கொன்றார்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 116–117. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ராணா கும்பா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Source material (excluding introduction, construction of forts and Vijay Stambha)

ராணா கும்பா
சிசோதியா இராசபுத்திர வம்சம்
பிறப்பு: 1433 இறப்பு: 1468
முன்னர்
ராணா மொக்கல்
சிசோதியா இராசபுத்திர ஆட்சியாளர்
1433–1468
பின்னர்
முதலாம் உதய்சிங்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணா_கும்பா&oldid=3392192" இலிருந்து மீள்விக்கப்பட்டது