இரமாபாய் அரசு மகளிர் முதுகலை கல்லூரி

இராமாபாய் அரசு மகளிர் முதுகலை கல்லூரி என்பது 1997 ஆம் ஆண்டில் உத்தரபிரதேச அரசால் கிராமப்புறக் கல்லூரியாக, நிறுவப்பட்ட பெண்களுக்கான கல்வி நிறுவனமாகும். இந்தக் கல்லூரி இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அக்பர்பூர் மாவட்டத் தலைமையகத்திற்கு அருகில் உள்ள இக்கல்லூரி, பெண்களுக்காகவே இயங்கி வருகிறது. முற்றிலும் அரசுக்கு சொந்தமான உயர் கல்வி நிறுவனமான இந்த கல்லூரி பைசாபாத்தில் உள்ள இராம் மனோகர் லோகியா அவத் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது,[1]

இரமாபாய் அரசு மகளிர் முதுகலை கல்லூரி
ரமாபாய் ராஜ்கிய மகிளா ஸ்நாத்கோத்தர் மகாவித்யாலயா
குறிக்கோளுரைசமக்கிருதம்: सिद्धि भवति करमणा
வகைபொது
உருவாக்கம்1997
சார்புபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா), தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
கல்வி பணியாளர்
19
மாணவர்கள்1,385 (2009–2010)
பட்ட மாணவர்கள்974
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்411
அமைவிடம், ,
26°26′24.85″N 82°34′35.09″E / 26.4402361°N 82.5764139°E / 26.4402361; 82.5764139
வளாகம்ஊரகம், 4.809 acres
சுருக்கப் பெயர்RBGWPGC
இணையதளம்www.rgwpgc.org

கல்லூரியின் தரம் மற்றும் அங்கீகாரம்

தொகு

நேரடியாக உத்தரப்பிரதேச அரசின் உயர்கல்வித் துறையால் நிர்வகிக்கப்படும் இந்த கல்லூரி, பல்கலைக்கழக மானியக் குழுவால் (இந்தியா)வால் 2 (f) மற்றும் 12 (b) பிரிவுகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் புது தில்லியில் உள்ள தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையிடமிருந்து உதவியையும் மானியங்களையும் பெறுகிறது [2] அரசு மகளிர் முதுகலை [3]கல்லூரியின் மதிப்பீடு மற்றும் அங்கீகார செயல்முறை ஏப்ரல் 2011 இல் பெங்களூரில் உள்ள என்ஏஏசி ஆல் முடிக்கப்பட்டு தரம் பி (சிஜிபிஏ) என வழங்கப்பட்டுள்ளது.

நிர்வாகம்

தொகு

இக்கல்லூரி உ. பி. அரசின் அலகாபாத்தில் அமைந்துள்ள உயர்கல்வித் துறையால் நிர்வகிக்கப்படுகிறது.[4]மேலும் லக்னோவில் உள்ள பிராந்திய உயர் கல்வி அலுவலகமும் இக்கல்[5]லூரியின் மீது துணை கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. நிர்வாக மற்றும் நிதி பரிவர்த்தனைகளுக்காக உ. பி. அரசின் உயர்கல்வித் துறையால் ஒரு முதல்வர் நியமிக்கப்பட்டுள்ளார், அவர் பாடப்பிரிவுகள் மற்றும் ஊழியர்களுக்கு உடனடி அதிகாரியாகவும் உள்ளார். தற்போது திருமதி. பேராசிரியர். ஷெபாலி சிங் என்பவர் முதல்வராக இருந்துவருகிறார்.

மாணவர்கள்

தொகு

இக்கல்லூரியில், மனிதநேயம், அறிவியல் மற்றும் வணிகம் என்ற பிரிவுகளில் இடைநிலைப் படிப்பை முடித்த பெண் மாணவர்களுக்கு முதுகலைப்படிப்பு வழங்க சேர்க்கையை வழங்குகிறது. இக்கல்லூரியில் பெண் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 1,385 (கல்வி ஆண்டு: 2009–2010) ஆகும், இது அங்குள்ள சமூகத்தின் பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியது.

ஆசிரியர்கள்

தொகு

இக்கல்லூரிக்கு தேவையான ஆசிரியர்களின் தேர்வு செயல்முறை, உத்தரபிரதேச பொது சேவை ஆணையத்தால் மட்டுமே செய்யப்படுகிறது.[6] உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு பட்டப்படிப்பு கல்லூரிகளில் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான யுஜிசி,[7] புது தில்லியின் விதிகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் ஆணையம் குறைந்தபட்ச தகுதியை உறுதி செய்கிறது. தேர்வாணையத்தின் பரிந்துரைக்குப் பிறகு உத்தரப்பிரதேச அரசால் நியமனங்கள் செய்யப்படுகின்றன. அரசு உழியர்களாகக் கருதப்படும் அனைத்து ஆசிரிய உறுப்பினர்களும் (உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர்) மாநிலத்தின் குரூப்-ஏ பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசிதழில் வெளியிடப்பட்ட அரசு ஊழியர்களாவர்.

பணியாளர்கள்

தொகு

இக்கல்லூரியில் ஆசிரியர்கள் தவிர ஏராளமான அலுவலக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அறிவியல் துறை ஆய்வகங்களுக்கும், உள்துறை அறிவியல் துறைக்கும் ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கல்லூரி நூலகம்

தொகு

ரமாபாய் அரசு மகளிர் முதுகலை கல்லூரியில் அமைகப்பட்டுள்ள பொதுவான மத்திய நூலகத்தில் இளங்கலை (யுஜி) மற்றும் முதுகலை (பிஜி) மாணவர்களுக்கான ஏராளமான புத்தகங்கள் மற்றும் மின் இதழ்கள் உள்ளன. முதுகலை மாணவர்களுக்காகவே தனி முதுகலை நூலகமும் கல்லூரி வளாகத்தில் உள்ளது. இவ்விரண்டு நூலகங்களையும் நிர்வகிக்க உத்திரப்பிரதேச அரசின் உயர்கல்வித் துறையால் ஒரு நூலகரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாடத்திட்டம் தவிர்த்த பிற செயல்பாடுகள்

தொகு

கிராமப்புற மாணவர்கள், கல்வி தவிர மற்ற தகுதிகளையும் கற்றுத்தேறும் பொருட்டு, பேச்சுக்கள், விவாதங்கள், கருத்தரங்குகள், விளையாட்டு, என். எஸ். எஸ் செயல்பாடுகள் மற்றும் சொற்பொழிவுகள் போண்றவைகளும் அது தவிர செஞ்சிலுவை சங்கத்தின் ஆர்வலராக இருப்பதன் மூலம் அவர்களின் கல்வித் திறன் தாண்டிய மேம்பாடுகளுக்கான வாய்ப்புகளையும் இந்த கல்லூரி வழங்குகிறது.

சங்கங்கள்

தொகு

கல்லூரியின் ஒட்டுமொத்த கல்வி மேம்பாட்டிற்காக பெற்றோர்-ஆசிரியர் சங்கம் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Welcome to Dr. Ram Manohar Lohia Avadh University, Faizabad". rmlau.ac.in. Archived from the original on 2011-10-07. பார்க்கப்பட்ட நாள் 2011-10-14.
  2. "«Sl_No" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2011-10-14.
  3. Pradesh
  4. "Higher Education Department". uphed.up.nic.in. Archived from the original on 11 May 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-10-14.
  5. "क्षेत्रीय उच्च शिक्षा अधिकारी". dheup.com. பார்க்கப்பட்ட நாள் 2011-10-14.
  6. "About U.P.P.S.C".
  7. "Archived copy" (PDF).