இரமா பைலட்

இந்திய அரசியல்வாதி

இரமா பைலட் (பிறப்பு: பிப்ரவரி 12, 1948) என்பவர் இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தைச் சேர்ந்த இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதி ஆவார். இரமா பதிமூன்றாவது மக்களவையில் தௌசா நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தார். இவர் இராசத்தான் சட்டமன்றத்திலும் இந்தோலி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தார்.[1]

இரமா பைலட்
Rama Pilot
இந்தியா நாடாளுமன்றம்
தௌசா
பதவியில்
2001–2004
முன்னையவர்ராஜேஷ் பைலட்
பின்னவர்சச்சின் பைலட்
உறுப்பினர் ராஜஸ்தான் சட்டமன்றம்
பதவியில்
1998–2001
முன்னையவர்சாந்திகுமார் தரிவால்
பின்னவர்அரி மோகன்
பதவியில்
1990–1993
முன்னையவர்கணேஷ் லால்
பின்னவர்சாந்திகுமார் தரிவால்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 பெப்ரவரி 1948 (1948-02-12) (அகவை 76)
காசியாபாத் மாவட்டம், இந்தியா, ஐக்கிய மாகாணம், இந்தியா
தேசியம்இந்திய மக்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ராஜேஷ் பைலட்
பிள்ளைகள்2, சச்சின் பைலட் உட்பட
வேலைஅரசியல்வாதி

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இரமா 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தில் உள்ள சகல்புராவில் சௌத்ரி நைன் சிங் மற்றும் அவரது மனைவி அர்சண்டி தேவிக்கு மகளாகப் பிறந்தார்.[2] இரமா புது தில்லியில் உள்ள சியாம் லால் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். இங்கு இவர் மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றினார். மீரட் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார்.[3]

தொழில்

தொகு

இரமா பைலட் 1998 இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் இந்தோலியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் போகர் லால் சைனியை எதிர்த்து 15,530 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[4] இவரது கணவர் ராஜேஷ் பைலட் மக்களவை உறுப்பினராக இருந்தார். 2000ஆம் ஆண்டு வாகன விபத்தில் ராஜேஷ் பைலட் இறந்த பிறகு, நடைபெற்ற இடைத்தேர்தலில் இரமா போட்டியிட்டுப் பதிவான மொத்த வாக்கான 6,69,984-ல் 3,49,439 (52.16%) பெற்றார். பாஜக வேட்பாளர் ஆர்.கே.சர்மா 2,84,175 (42.41%) பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.[5] இரமா நாடாளுமன்ற உறுப்பினராக விவசாயக் குழு மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றினார்.[3]

இரமா ஜால்ராபடன் தொகுதியில் வசுந்தரா ராஜே சிந்தியாவை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[6][7] 2003 இராசத்தான் சட்டப் பேரவைத் தேர்தலின் போது இரமா, ராஜேவிற்கு எதிராக 72,760 (59.20%) வாக்குகள் பெற்றார்.[8] இவரது பதவிக்காலம் முடிந்ததும், இந்திய தேசிய காங்கிரசு இரமாவின் மகனான சச்சின் பைலட்டை 14வது மக்களவைக்கு வேட்பாளராக நிறுத்தியது.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இரமா 12 மார்ச் 1974-ல் ராஜேஷ் பைலட்டை மணந்தார், இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்தனர். ராஜேஷ் 11 சூன் 2000 அன்று பந்தனாவில் வாகன விபத்தில் காயமடைந்து, அருகில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இங்குச் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இரமா தனது கணவரின் வாழ்க்கை வரலாற்றினை ராஜேஷ் பைலட்: ஒரு வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் இந்தி மொழியில் எழுதினார்.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. Bora, Kamla (4 September 2000). "Rama Pilot may be Congress nominee in Dausa". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 4 November 2017.
  2. "Ashok Gehlot unveils Rajesh Pilot's statue near Dausa". The Times of India. 12 June 2012.
  3. 3.0 3.1 "Members Bioprofile: Pilot, Smt. Rama". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 4 November 2017.
  4. "Statistical Report on General Election, 1998 to the Legislative Assembly of Rajasthan" (PDF). Election Commission of India. p. 121. பார்க்கப்பட்ட நாள் 4 November 2017.
  5. "Bye-Election - September, 2000: Election to Parliamentary Constituency of Rajasthan: Constituency 7 Dausa". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 November 2017.
  6. "Rama Pilot to contest against Vasundhara Raje". http://www.hindustantimes.com/india/rama-pilot-to-contest-against-vasundhara-raje/story-sJ72TsdHN655zwslnsgFmN.html. பார்த்த நாள்: 4 November 2017. 
  7. "State Elections 2004 - Partywise Comparison for 118-Jhalrapatan Constituency of Rajasthan". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 November 2017.
  8. "Provisional Key Highlights of the General Election 2003, to the Legislative Assembly of Rajasthan" (PDF). Election Commission of India. p. 20. பார்க்கப்பட்ட நாள் 4 November 2017.
  9. "Rajesh Pilot: A Biography (Hindi) 9789351940869 By Rama Pilot". Universal Book Sellers. Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 4 November 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரமா_பைலட்&oldid=3927767" இலிருந்து மீள்விக்கப்பட்டது