இராகமாலிகை

இராகமாலிகை எனப்படுவது கருநாடக இசையில் ஒரு இசைப்பாடலின் பல்வேறு பகுதிகளை பல்வேறு இராகங்களில் பாடுவது அல்லது இசைக்கருவிகளால் இசைப்பது ஆகும். இராகமாலிகை என்பது இராகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக 'மாலை போல் தொடுக்கப்பட்ட இசைப்பாடல்' என்று பொருள்படும். 'இராக கதம்பம்' எனவும் இடைக்காலத்தில் அழைக்கப்பட்டது. கதம்பம் எனும் சமசுகிருத சொல், 'கலவை' என்று பொருள்படும்.

உருப்படிகளுள் இராகமாலிகை மிகச் சிறந்தது என்று கூறுவர். இராகமாலிகை வகைகளாக இராகமாலிகை வர்ணங்களும், இராகமாலிகை கீர்த்தனைகளும், இராகமாலிகை ஜதீஸ்வரங்களும் அமைந்து காணப்படுகின்றன. மனோதர்ம சங்கீதத்தில் ஒரு பல்லவியின் கடைசியில் இராகமாலிகையாக கல்பனாசுரம் பாடப்படுவதும் வழக்கம். சுலோகம், பத்தியம், விருத்தம் இவற்றை பல இராகங்களில் பாடுவதற்கும் இராகமாலிகை என்று வழங்கப்படும்.

இந்த உருப்படி பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அங்கங்களை உடையது.

இராகமாலிகையை சிறப்பான முறையில் வடிமைத்த குறிப்பிடத்தக்கவர்கள்:

உசாத்துணை தொகு

'Seasoned Snippets' எனும் தலைப்பில் 'த இந்து' ஆங்கில நாளிதழில் (டிசம்பர் 24, 2012) எழுதப்பட்ட ஒரு துணுக்குத் தோரணம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராகமாலிகை&oldid=1286869" இலிருந்து மீள்விக்கப்பட்டது