ஜதீசுவரம்
(ஜதீஸ்வரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சதீசுவரம் என்பது நாட்டியத்திற்காக உருவாக்கப்பட்ட உருப்படி ஆகும். சதிக் கோர்வைகளை ஆதாரமாகக் கொண்டு அமைந்த உருப்படி ஆகையால் இதற்கு சதீசுவரம் என்ற காரணப் பெயர் ஏற்பட்டது. இவ்வுருப்படிக்கு சாகித்தியம் இல்லை. சுவரூபமாக அமைந்த உருப்படியாதலால் "சுரபல்லவி" என்றும் அழைக்கப்படும்.
வகைகள்
தொகுஇராகமாலிகையாக அமைந்த சதீசுவரங்களும் உண்டு. சௌக்ககாலத்திலும், மத்திம காலத்திலும் அமைந்த சதீசுவரங்களும் உள்ளன.
நாட்டியத்ய கச்சேரியில் அலாரிப்பு ஆடிய பின்பு சதீசுவரம் ஆடப்படும். சதீசுவரத்தை இசை கற்கும் மாணவர்கள் பயிலுவதால் சுவர, லய, ஞானம் ஏற்படுகிறது. சதீசுவரத்தில் பல்லவி, அனுபல்லவி என்னும் அங்கங்களுடன் பல சரணங்களையும் கொண்டிருகும்.
சதீசுவரம் இயற்றியோர்
தொகு- சுவாதித் திருநாள் மகாராசா
- பொன்னையாப் பிள்ளை