உருப்படி

இசைக்கப்படுவதற்கான வடிவங்கள்

இசைக்கப்படுவதற்கான வடிவங்கள் உருப்படிகள் என அழைக்கப்படுகின்றன. இவை இரு வகைப்படும்.

  1. அப்பியாசகான உருப்படிகள்
  2. சபாகான உருப்படிகள்

அப்பியாசகான உருப்படிகள்

தொகு

இசைப்பயிற்சிக்கான வடிவங்களை அப்பியாசகான உருப்படிகள் என்று முன்னர் அழைப்பதுண்டு. இவை

  1. சுராவளி என்றழைக்கப்படும் சரளி வரிசைகள் (கோவை வரிசைகள்)
  2. ஜண்டைசுர வரிசைகள் (இரட்டைக்கோவை வரிசைகள்)
  3. மேல்ஸ்தாயி வரிசைகள் (வலிவு மண்டில வரிசைகள்)
  4. கீழ்ஸ்தாயி வரிசைகள் (மெலிவு மண்டல வரிசைகள்)
  5. தாட்டுவரிசைகள் (தாண்டு வரிசைகள்)
  6. 7 அலங்காரங்கள்
  7. கீதம்
  8. ஸ்வரஜதி
  9. ஜதீஸ்வரம்
  10. வர்ணம்

ஆகியவைகளாகும். வர்ணம் என்ற இசை வடிவம் மட்டுமே இசைப்பயிற்சி, அரங்கிசை ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப்படுகின்றது.

சபாகான உருப்படிகள்

தொகு

அரங்கிசை வடிவங்கள் என்றாலும் சபாகான உருப்படிகள் என்றாலும் ஒன்றே ஆகும். ஓர் இசைவாணர் தனது இசைப் புலமையினை காட்டி அவையில் உள்ளவர்களை மகிழ்விக்கக் கையாளும் இசை வடிவங்கள் இவை ஆகும்.

  1. வர்ணம்
  2. கிருதி
  3. கீர்த்தனை
  4. இராகமாலிகை
  5. தேவாரம்
  6. திருப்புகழ்
  7. திருவருட்பா
  8. திவ்வியப் பிரபந்தம்
  9. பட்டினத்தார் பாடல்
  10. தாயுமானவர் பாடல்
  11. பதம்
  12. ஜாவளி
  13. தில்லானா
  14. தரு
  15. தரங்கம்
  16. அஷ்டபதி
  17. காவடிச்சிந்து
  18. இராகம்-தானம்-பல்லவி

முதலியன அரங்கிசை உருப்படிகள் ஆகும். இதன் மறு பெயர்:-வைதீக கானம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருப்படி&oldid=4163329" இலிருந்து மீள்விக்கப்பட்டது