இராச்சிறீ இராமசேது
இராச்சிறீ இராமசேது (Rajshree Ramasethu) (Rajshree Ramasethu) இந்திய ராணுவத்தின் முன்னாள் பொது அதிகாரியாவார். இந்திய ஆயுதப்படையில் ஐந்தாவது பெண் மற்றும் இந்திய இராணுவத்தில் மூன்றாவது மூன்று நட்சத்திர தரவரிசைக்கு உயர்த்தப்பட்டவர் ஆகிய சிற்ப்புகளுக்கு உரியவர். கடைசியாக இராச்சிறீ புனே ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியின் இயக்குநராகவும் தளபதியாகவும் பணியாற்றினார்.
கப்பற்படை அதிகாரி. இராச்சிறீ இராமசேது Rajshree Ramasethu | |
---|---|
![]() இராணுவ மருத்துவக் கல்லூரியின் தளபதியாக | |
சார்பு | ![]() |
சேவை/ | ![]() |
சேவைக்காலம் | 1983 – 2022 |
தரம் | ![]() |
கட்டளை | ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி இராணுவ மருத்துவக் கல்லூரி, சென்னை. |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்விதொகு
இராச்சிறீ இராமசேது 1979 ஆம் ஆண்டில் புனே ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார் [1]
இராணுவ வாழ்க்கைதொகு
இராச்சிறீ இராமசேது 1983 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் இராணுவ மருத்துவப் படையில் நியமிக்கப்பட்டார். இங்கு தனது முதுகலை பட்டப்படிப்பை முடித்தார், உள் மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் சிறுநீரக மருத்துவத்தில் மீச்சிறப்பு தகுதியை பெற்றார். [2]
இராச்சிறீ இராமசேது மும்பையில் உள்ள கடற்படை மருத்துவமனையான ஐஎன்எச்எசு அசுவினி மற்றும் கொல்கத்தாவில் உள்ள கிழக்கத்திய ஆணையத்தின் இராணுவ மருத்துவமனை ஆகியவற்றில் ஆலோசகர் (மருந்து மற்றும் சிறுநீரகவியல்) நியமனங்களையும் பெற்றார். [3] சென்னை இராணுவ மருத்துவமனையின் தளபதியாகவும் , தலைமையக ஐடிஎஸ்ஸில் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் (மருத்துவம்) மருத்துவமனையில் உதவித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
படைப்பெருந்தலைவராக இராமசேது புது தில்லியில் உள்ள ஆயுதப்படை மருத்துவ சேவைகள் பொது இயக்குநர் அலுவலகத்தில் பணிபுரிந்தார். [4] இந்த அலுவலகத்தில் ஒரு மூத்த ஆலோசகராக (மருத்துவம்) இவர் பணியாற்றினார். பின்னர் புனேவில் உள்ள தெற்கு இராணுவ தலமையகத்தில்
மருத்துவப் பிரிவின் படைப்பெருந்தலைவராக பணியாற்றினார். [3] 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதியன்று இராமசேது புனேவில் உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் மற்றும் தளபதி அலுவலகத்தில் கப்பற்படை அதிகாரி பதவியை ஏற்றுக்கொண்டார்.
விருதுகள்தொகு
1995, 2011 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் [5] மூன்று முறை இராணுவப் பணியாளர்களின் பாராட்டு அட்டையைப் பெற்றுள்ளார்.
சிறப்பு சேவை பதக்கம் | சைன்ய சேவா பதக்கம் | ||
சுதந்திரப் பதக்கத்தின் 50வது ஆண்டு விழா | 30 வருட நீண்ட சேவை பதக்கம் | 20 வருட நீண்ட சேவை பதக்கம் | 9 ஆண்டுகள் நீண்ட சேவை பதக்கம் |
இவற்றையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "Lt Gen Ramasethu is new director-commandant of AFMC, Pune". hindustantimes.com. 12 October 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Lt General Rajshree Ramasethu takes over as Commandant of AFMC Pune". The Indian Express (ஆங்கிலம்). 17 September 2021. 12 October 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 3.0 3.1 "LT GEN RAJSHREE RAMASETHU". afmc.nic.in. Archived from the original on 7 ஜனவரி 2022. 12 October 2022 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link). afmc.nic.in. Retrieved 12 October 2022.
- ↑ "Lt Gen Rajshree Ramasethu Takes Over As Commandant Of AFMC Pune". Punekar News. 16 September 2021. 12 October 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Official Home Page of the Indian Army". www.indianarmy.nic.in. 12 October 2022 அன்று பார்க்கப்பட்டது.