இராஜஸ்தான் மருந்து மற்றும் மருந்து பொருட்கள் லிமிடெட்

ராஜஸ்தான் டிரக்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் லிமிடெட் (Rajasthan Drugs & Pharmaceuticals Limited (RDPL) என்பது இந்திய அரசு மற்றும் இராசத்தான் அரசுகள் சமமான பங்களைக் கொண்ட ஒரு பொதுத்துறை மருந்து நிறுவனமாகும்.[1] இது மருந்து உற்பத்தி மற்றும் மருந்து கண்டுபிடிப்பு செய்வதாற்காக நிறுவப்பட்ட நிறுவனம் ஆகும். இது அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளை பகிர்மானம் செய்வதில் இதற்கு முதன்மை பங்கு உண்டு. இந்த நிறுவனத்தில் 2013-14-ம் நிதி ஆண்டில் ரூ. 19 கோடி இழப்பு ஏற்பட்டது. மொத்த வருமானம் ரூ. 43 கோடியாகும். இந்நிலையில் கடந்த 2016 திசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய அமைச்சரவைக் குழு இந்தியாவில் மொத்தம் உள்ள 5 அரசு மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் வருவாயின்றி இயங்கிவரும் நான்கு நிறுவனங்களை மூடிவிட ஒப்புதல் அளித்துள்ளது. மூட ஒப்பதல் அளிக்கப்பட்ட நிறுவனங்களில், இராஜஸ்தான் மருந்து மற்றும் மருந்து பொருட்கள் லிமிடெட் நிறுவனமும் அடங்கும். [2]

இராஜஸ்தான் மருந்து மற்றும் மருந்து பொருட்கள் லிமிடெட்
வகைபொதுத்துறை நிறுவனம்
நிறுவுகை1979
தலைமையகம்ஜெய்ப்பூர்
உற்பத்திகள்மருந்து மற்றும் மருந்துப் பொருட்கள்
இணையத்தளம்[www.rdpl-india.in]


மேற்கோள்கள்

தொகு
  1. "Rajasthan Drugs & Pharmaceuticals Limited (RDPL)". http://pharmaceuticals.gov.in/rajasthan-drugs-pharmaceuticals-limited. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2017. {{cite web}}: External link in |publisher= (help)
  2. "இந்த நோய்க்கு மருந்து எங்கிருக்கிறது?". கட்டுரை. தி இந்து. 30 சனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2017.