இராஜேஷ் திரிபாதி
இராஜேஷ் திரிபாதி (Rajesh Tripathi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சில்லுபார் சட்டமன்றத் தொகுதியின் 18வது சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர்.[1][2] இவர் உத்தரப்பிரதேசத்தின் 15 மற்றும் 16வது சட்டமன்ற உறுப்பினராகவும் சில்லுபர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.[3][4]
இராஜேஷ் திரிபாதி | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மார்ச் 2022 | |
முன்னையவர் | வினய் சங்கர் திவாரி |
தொகுதி | சில்லுபார் |
பதவியில் மே 2007 – மார்ச் 2017 | |
முன்னையவர் | அரி சங்கர் திவாரி |
பின்னவர் | வினய் சங்கர் திவாரி |
தொகுதி | சில்லுபார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1964/1965 (அகவை 59–60)[1] |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம் | 328 சில்லுபார் சட்டமன்றத் தொகுதி[1] |
முன்னாள் கல்லூரி | தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம், 1985 |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுதிரிபாதி சிவாகாந்த் திரிபாதியின் மகனாகப் பிறந்தவர். இவர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள சில்லுபரைச் சேர்ந்தவர். 1985 ஆம் ஆண்டு தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.[1]
அரசியல் வாழ்க்கை
தொகுதிரிபாதி 2007-ல் உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அரிசங்கர் திவாரியைத் தோற்கடித்தார். 2012 நடைபெற்ற தேர்தலிலும் வெற்றிபெற்றார். இதன் மூலம் 15 மற்றும் 16வது உத்தரப்பிரதேச சட்டமன்றங்களில் உறுப்பினரானார்.[3][4][5] 2017இல், திரிபாதி அரிசங்கர் திவாரியின் மகன் வினய் சங்கர் திவாரியிடம் தோல்வியடைந்தார்.[6]
2022 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், திரிபாதி பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Rajesh Tripathi(Bharatiya Janata Party(BJP)):Constituency- CHILLUPAR(GORAKHPUR) - Affidavit Information of Candidate:". myneta.info.
- ↑ 2.0 2.1 "Vinay Shankar Election Result 2022 LIVE Updates: Vinay Shankar of SP loses from Chillupar seat" (in en). News18. 10 March 2022. https://www.news18.com/news/politics/vinay-shankar-election-result-2022-live-updates-4855829.html.
- ↑ 3.0 3.1 "2007 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம். https://eci.gov.in/files/file/3261-uttar-pradesh-2007/.
- ↑ 4.0 4.1 "2012 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம். https://eci.gov.in/files/file/3262-uttar-pradesh-2012/.
- ↑ "पूर्वांचल के बाहुबली हरिशंकर तिवारी को हराने वाले मुक्तिपथ वाले बाबा को BJP ने चिल्लूपार से बनाया प्रत्याशी, जानें कौन हैं राजेश त्रिपाठी" (in hi). Zee News. 28 January 2022. https://zeenews.india.com/hindi/india/up-uttarakhand/uttar-pradesh/rajesh-tripathi-defeated-purvanchal-bahubali-harishankar-tiwari-in-first-time-was-nominated-by-bjp-spup/1082500.
- ↑ "2017 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம். https://eci.gov.in/files/file/3471-uttar-pradesh-general-legislative-election-2017/.