இராஜ்குமாரி துபே

இந்தியப் பாடகி

இராஜ்குமாரி துபே (Rajkumari Dubey;1924-2000) இராஜ்குமாரி என்ற தனது பெயரால் நன்கு அறியப்பட்ட இவர், 1930 கள் மற்றும் 1940 களில் இந்தித் திரைப்படங்களில் பணியாற்றிய ஒரு இந்தியப் பின்னணிப் பாடகி ஆவார். பாவ்ரே நைன் (1950) இல் "சன் பைரி பாலம் சச் போல் ரே" என்ற பாடல்,மஹால் (1949) படத்தில் "கபாரா கே ஜோ படத்தில் "நஜரியா கி மாரி" ஆகிய பாடல்களுக்காக மிகவும் பிரபலமானவர்.

Rajkumari Dubey
இயற்பெயர்இராஜ்குமாரி
பிறப்பு1924
வாரணாசி, காசி நாடு, ஐக்கிய மாகாணங்கள், பிரித்தானிய இந்தியா (நவீன வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு2000
இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடுதல்
தொழில்(கள்)பாடகர்
இசைக்கருவி(கள்)குரல் கலைஞர்
இசைத்துறையில்1934 – 1977

வாழ்க்கை வரலாறு.

தொகு

அக்காலத்தின் முன்னணி பாடகர்களான சோராபாய் அம்பாலாவாலி, அமிர்பாய் கர்நாடகி மற்றும் சம்சாத் பேகம் ஆகியோரை விட குறுகிய வரம்புடன் மிகவும் மென்மையான மற்றும் இனிமையான குரலைக் கொண்டிருந்தார். அடுத்த இரண்டு தசாப்தங்களில், லதா மங்கேஷ்கர் இந்தியாவில் பின்னணி பாடுவதில் முன்னேறிக் கொண்டிருந்த சமயத்தில் இவரும் 1950 களின் முற்பகுதி வரை, 100 படங்களில் இவர் பாடியுள்ளார்[1][2]

இராஜ்குமாரி வாழ்க்கையில் மிகவும் தாமதமாக திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் வி. கே. துபே, வாரணாசியில் வசித்து வந்தார். பின்னர் அவர் மும்பையில் இவருடன் சேர்ந்தார். இராஜ்குமாரி துபே 2000 ஆம் ஆண்டில் இறந்தார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Zohrabai, Amirbai and Rajkumari profiles". Women On Record website. பார்க்கப்பட்ட நாள் 13 February 2023.
  2. Anantharaman 2008, ப. 7.
  3. "Zohrabai, Amirbai and Rajkumari profiles". Women On Record website. பார்க்கப்பட்ட நாள் 13 February 2023."Zohrabai, Amirbai and Rajkumari profiles". Women On Record website. Retrieved 13 February 2023.

நூல் ஆதாரம்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜ்குமாரி_துபே&oldid=4093294" இலிருந்து மீள்விக்கப்பட்டது