இராஜ்–கோட்டி
இராஜ்-கோட்டி (Raj–Koti) என்று பிரபலமாக அழைக்கப்படும் தொட்டகுரா சோமராஜு மற்றும் சாலூரி கோட்டீசுவர ராவ் ஆகிய இருவரும் தெலுங்குத் திரையுலகில் இந்திய திரைப்பட இசையமைப்பாளர்களாகவும், பாடகர்களாகவும், பாடலாசிரியர்களாகவும், ஒலிப்பதிவு தயாரிப்பாளர்களாகவும், இசைக்கலைஞர்களாகவும், பலதரப்பட்ட இசைக்கருவிகளை இசைப்பவர்களாகவும் இருக்கும் இரட்டையர்கள் ஆவர். பத்தாண்டு கால இடைவெளியில்,சமகால தெலுங்குத் திரைப்பட இசையை மறுவரையறை செய்ததற்காக பாராட்டு இருவரும் பெற்றுள்ளனர். இவர்கள் சுமார் 180 படங்களுக்கு இசையமைத்துள்னர். இவர்களின் 3000 பாடல்களில் சுமார் 2,500 பாடல்களை பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமண்யமும், கே.எஸ் சித்ராவும் பாடியுள்ளனர். [1] [2]
இராஜ்–கோட்டி | |
---|---|
பிறப்பிடம் | ஆந்திரப் பிரதேசம் |
இசை வடிவங்கள் | திரைப்பட இசை, உலக இசை |
தொழில்(கள்) | திரைப்பட இசையமைப்பாளர், இசையமைப்பாளர், பாடகர்கள் |
இசைத்துறையில் | 1983–1995 |
இந்த இருவரிடமும் ஏ. ஆர். ரகுமான் 8 ஆண்டுகளாக விசைப்பலகை கலைஞராக பணியாற்றியுள்ளார். [3] [4] ஏபிஎன் ஆந்திராஜோதியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், இருவரும் மீண்டும் 2012 இல் இணைவதாகவும், தங்களை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ள இருப்பதாகவும் அறிவித்தனர். [5]
பின்னணி
தொகுதொட்டகுரா சோமராஜு (ராஜ்) டி. வி. ராஜுவின் மகனும், சலூரி கோட்டீசுவர ராவ் (கோட்டி) சலூரி இராசேசுவர் ராவின் மகனும் ஆவார். [6]
விருதுகள்
தொகு- ஹலோ பிரதர் என்றபடத்திற்காக சிறந்த இசை இயக்குனருக்கான நந்தி விருது - 1994
மேற்கோள்கள்
தொகு- ↑ "Music duo Rajkoti will be honoured Music duo Rajkoti will be honoured, News,Telugu movie news, latest news, political news, Updated Movie News:Music duo Rajkoti will be honour..." Archived from the original on 2014-10-06. பார்க்கப்பட்ட நாள் 2021-02-06.
- ↑ Raj-Koti Reunited : Special Live show | ap7am
- ↑ "The Hindu : Andhra Pradesh / Visakhapatnam News : Teaching does not diminish his love for music". Archived from the original on 2013-01-27. பார்க்கப்பட்ட நாள் 2021-02-06.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ A.R.Rahman- Indian under Spotlight | Indians in Paris | Musi பரணிடப்பட்டது 22 மார்ச்சு 2012 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Raj Koti Open Heart With RK – YouTube
- ↑ "The Hindu : Metro Plus Hyderabad : `Good music emanates from the story'". Archived from the original on 2004-10-31. பார்க்கப்பட்ட நாள் 2021-02-06.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)