பெருங்குழாய்ப் புழு

(இராட்சத குழாய் புழு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெருங்குழாய்ப் புழு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
முள்மயிர்ப் புழு
வரிசை:
விசிறித்தலைப் பழு
குடும்பம்:
தாடிப் புழு
பேரினம்:
Riftia
இனம்:
R. pachyptila
இருசொற் பெயரீடு
Riftia pachyptila
M. L. Jones, 1981

பெருங்குழாய்ப் புழு (Giant tube worms, Riftia pachyptila,) என்பவை பெருங்கடலில் வாழக்கூடிய வளையப் புழு தொகுதியைச் சேர்ந்த ஒரு உயிரினமாகும். [1] இவை பசிபிக் பெருங்கடலின் ஆழ்கடல் மண்டலங்களில்தான் மிகுதியாகக் காணப்படுகின்றன. கடலினுள் டெக்ரானிக் தகடுகள் நகர்ந்து எரிமலையாக வெடித்து சிதறுவதால் உண்டாகும் கரும்புகை மண்டலத்தில் இவை விரும்பி வசிக்கின்றன, மேலும் இவை அக்கடல் பகுதியில் உள்ள ஐதரன் சல்பைடை சகித்து வாழக்கூடியவை. இந்தப் புழுக்கள் 2.4 m (7 அடி 10 அங்) நீளம்வரை வளரக்கூடியன. புழுவின் உடல் விட்டம் 4 cm (1.6 அங்) வரை இருக்கும். அவற்றின் இயற்கையான சூழலில் சுற்றுப்புற வெப்பநிலை 2 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை மாறுபடுகிறது.[2]

வளர்ச்சி

தொகு

கடலுக்கடியில் எரிமலை வெடிப்பாலும் அதனால் ஏற்படும் நில நடுக்கத்தாலும் பெரிய பள்ளங்கள் ஏற்படுகின்றன இந்தப் பெரிய பள்ளத்தில் நிரம்பும் நீர், பூமியின் அப்பகுதியில் எரிமலையால் ஏற்படும் அதிக வெப்பத்தால் மிகவும் சூடாகிறது. வழக்கமாக 5 அல்லது 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கவேண்டிய கடல் நீர், பூகம்பத்தால் 400 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்கிறது. இந்த 400 டிகிரி தகிக்கும் வெப்ப நிலையில்தான் அந்தப் புழுக்கள் தோன்றுகிறன. இவை உருவான இரண்டே ஆண்டுகளில் 7 அடி வரை வளர்ந்துவிடும். நிலநடுக்கத்தாலும், எரிமலைச் சிதைவிலும் நச்சுப்புகையும், நச்சு அமிலமும்தான் இந்த ஆழ்கடல் பகுதியில் இருக்கும். இந்தப் புழு இந்த அமிலம், வெப்பம், அழுத்தம் இவற்றையெல்லாம் உணவாக்கிக்கொண்டு தன் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. இந்த புழுக்களின் உடலில் பாதியளவு பாக்டீரியாக்களால் நிரம்பியிருக்கும். இந்த பாக்டீரியா சுற்றுப்புறத்தில் உள்ள வேதிபொருட்களுடன் வினைபுரிந்து புழுவின் உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்தை அளிக்கிறது. இந்தப் புழுக்களின் உடல் அமைப்பை ‘வாங்குலர்’ உடலமைப்பு என்று சொல்வார்கள். இதன் உடம்பு நீர்மப் பொருட்களை, உடலின் பல்வேறு பகுதிகளுக்குக் கடத்திச் செல்லும் வகையில் குழாய் போன்ற அமைப்பால் ஆனது.

இந்தப் புழுக்களின் தலைப்பகுதியில் ப்ளும் என்ற சிவப்பு நிறக் கொப்பி காணப்படுகிறது. இது சுற்றுப்புறத்தில் உள்ள வேதிப் பொருட்களை உடலின் உள்ளே பாக்டீரியாவுக்குக் கடத்துகிறது. இந்தப் பாக்டீரியாக்கள் ஐட்ரஜன் சல்பைடு, கார்பன்-டை-ஆக்சைடு போன்றவற்றுடன் வேதி வினைகளில் ஈடுபட்டு உயிர்ப் பொருட்களாக மாற்றி புழுக்களுக்குத் தேவையான உயிர்சக்தியை அளிக்கிறது. இந்தப் புழு ஒரு வேதித் தொழிற்சாலை மாதிரிச் செயல்படுவதால் இதற்குச் செரிமான மண்டலம், கழிவு நீக்க மண்டலம் என்றெல்லாம் எதுவும் இல்லை. இந்தப் புழு வேதி வினைகளால் உயிர் வாழ்வதால் அதிக வெப்பத்தைத் தாங்கி உயிர் வாழ்கிறது. அதிக அளவில் ஹீமோகுளோபின் இருப்பதால் இதன் மொட்டு போன்ற நுனிப்பகுதி சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.

தோற்றம்

தொகு

இதன் உருவம் இராட்சத அளவுக்கு இருக்கும் என்றாலும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். மேலே இறகு போன்ற சிவப்பு நிற ஒரு குப்பி கிரீடம் வைத்தது போல இருக்கும். தூரத்திலிருந்து பார்க்கும் போது பெண்கள் உபயோகப்படுத்தும் உதட்டுச்சாய குப்பிகள் மாதிரி இருப்பதால் இதற்கு லிப்ஸ்டிக் புழுக்கள் என்றும் பெயரும் உண்டு.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Ruppert, E.; Fox, R.; Barnes, R. (2007). Invertebrate Zoology: A functional Evolutionary Approach (7th ed.). Belmont: Thomson Learning. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-03-025982-7. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |author2= and |last2= specified (help); More than one of |author3= and |last3= specified (help)
  2. Bright, M.; Lallier, F. H. (2010). "The biology of vestimentiferan tubeworms". Oceanography and Marine Biology: An Annual Review (Taylor & Francis) 48: 213–266. doi:10.1201/ebk1439821169-c4. http://www.sb-roscoff.fr/Ecchis/pdf/10-Bright-OMBAR.pdf. பார்த்த நாள்: 2013-10-30. 
  3. ஆதலையூர் சூரியகுமார் (29 மார்ச் 2017). "காரணம் ஆயிரம்: எரியும் எரிமலைக்குள் ஒரு புழு". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருங்குழாய்ப்_புழு&oldid=3590318" இலிருந்து மீள்விக்கப்பட்டது